பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆமாமாம் ......சொல்ல மாட்டீங்க பின்னே ? கோயிலுக்கு நீங்க எண்ணெய் கொடுத் து எத்தனை வருஷமாச்சு? எண் ணெய் இல்லாம நான் என்ன தண்ணி யையா ஊற்றி விளக் கேத்தறது ?" என்று பாய்ந்தார் குருக்கள்.

ஐயரே சும்மாப் பேசாதீங்க. நான் எல்லாத்தையும் ஒழுங்காச் சொதுகிட்டு வந்தவன்தான்். கேத்திக்கி, இன்னிக்கி எலக்ஷன்லே நின்னுட்டு பதவிக்கு வந்த வங்க எல்லாம் எம் மேலே வவுறெரிஞ்சு கிட்டு கோயிலுக்குள்ளே வந்து போட்டி போட வந்தாங்க. அவங்களே கோயில ந ட த் த ட் டு ம் னு நான் ஒதுங்கிக் கிட்டேன் # * = * * = --

முத்துசாமி குருக்கள் மெளனமாக அம்பிகைக்கு மஞ்சள் நீராட்டுவதில் முனைந்திருக தார். கந்தசாமிப் பிள்ளை கூறுவதிலும் உண்மை இருந்தது.

அந்தச் சிவன் கோயிலில் ஒகோ என்று திருவிழாக்கள் நடக்காவிடினும், மாதா மாதம் கிருத்திகை விழாவும், தைப் பூசமும், மாசி மகமும், திருவா திரையும் ஒழுங்காக நடைபெற்று வந் தன. இரண்டு கால பூஜையை ஒழுங் காகவே செய்து வந்தார் குருக்கள். மாலை நேரத்தில் சிலர் மன அமைதியை நாடிக் கோயிலுக்கும் சென்று வந்தனர். ஆனல், கடந்த சில வருஷங்களாக - ஊரில் தேர்தல் அது இது என்று போட் டியும், பூசலும் ஆரம்பித்த பிறகுகோயிலைக் கவனிப்பார் யாரும் இல்லை. அந்த வருஷம் தேர்தலில் வெற்றிகண்ட சுப்பையா பிரமாதமாக முருகனுக்கு அபிஷேகம் செய்வித்தார். அன்று கிருத் திகையும் சேர்ந்துவிடவே, முருகன் விழாக் கோலம் பூண்டு,இரு மாது புடை சூழ உலா வர ஆரம்பித்தான்். நான்கு மாடவீதிகளையும் சுற்றி வந்து கோயிலுக் குச் செல்லும் தெருவில் அவன் திரும்பிய வுடன் இதுவரையில் அமைதியாக முருக னுடன் வந்துகொண்டிருந்த சுப்பையா திடீரென்று கட்டளே ஒன்று பிறப்பித் தாா.

'ஐயரே சாமி எப்படியும் நம்மவூட்டு வாசலுக்கு வந்தாகணும்' என்றார் அவா .

குருக்களும் தர்மகர்த்தா பிள்ளையும் திடுக்கிட்டார்கள்!

"வழக்கமில்லையே அப்படி' என்றார் கந்தசாமிப் பிள்ளை.

'இன்னேயிலேந்து வழக்கமாயிருக்கட் டுமே பிள்ளே ! ஊருக்குப் பெரிய மனு ஷன் சொல்றேன். தட்டிப் பேசlன்

{}()

களே...' என்று வம்புக்கிழுத்தார் சுப்

es¥"LfiL T.

நீங்க ஊருக்குப் பெரிய மனிசன்தா னுங்க. அதை நான் ஒத்துக்கிடறேன். ஆளு)...... நம்மைவிட அவன் பெரியவன் என்கிறதை நாய மறுக்கப் படாது பாருங்க. அவனேக்கூடவா நம்ப தேர்தல முாைப்படி ஆட்டிவைக்கிறது? யோசனை

பண்ணிப் பாருங்க ஐயா...' விநயமாக தர்மகர்த்தா மறுக்கவும், சுப்பையா வைச் சேர்ந்தவர்கள் கந்தசாமிப்

பிள்ளையைத் தாக்கத் தயாராக நின்றார் அ .

நாலு தெரு சுத்தறவங்க அவர் வாசலுக்கும்தான்் போவணும்...' என் ருர்கள்.

ஆனால், கந்தசாமிப் பிள்ளே ஒரே பிடிவாதமாக மறுத்தார். 'வழக்கத் துக்கு மாருக இன்று ஒருவர் வீட்டு வாசலுக்குப் போளுல், நாளே இன் ைெருவன் கூப்பிடுவான். மனிதருக் குள்ளே ஓடுகிற இந்த ஆசைகளுக்கு நம்மைப் படைத்தவனைப் பணயம் வைக்கக் கூடாது' என்று கூறிவிட்டு கோயிலுக்குச் சென்று விட்டார் அவர். அப்புறம், சுப்பையா கறுவினராம் : அடுத்த கிருத்திகையிலே சாமி எப்படி தெருவிலே வறது பார்க்கலாம்' என்று. அடுத்த கிருத்திகை அன்று ஊர்க் காலி கள் அன்ைவரும் கோயிலில் சுற்றிக் கொண்டே யிருந்தார்கள். முருகன் விழாக் கோலம் புனைந்து கொண்டு மயிலின் மீது ஆரோகணித்திருந்தான்். ஆனால், வெளியே கிளம்பவில்லை. வேண்டியவர்களுக்கும், வேண்டாதவர் களுககும் நான் வேண்டியவன். என்ன அவர்களே வந்து காண்ட்டும்' என்கிற உறுதியுடன் அவன் மனிதப் பிறவிகளைக் கண்டு புன்னகைத்தான்். முத்துசாமி குருக்கள் மட்டும் மனம் பதைத்தார்.

நீர் சும்மா இரும் ஐயரே ! கிருத் திகை விழா கோயிலுக்கு உள்ளாறவே நடக்கட்டும். போகப் போகப் பார்த் துக்கலாம் ..." என்றார் கந்தசாமிப் பிள்ளை. அப்புறம் ஒவ்வொரு திருவிழா வாக நின்று விட்டது. ஊரிலே கோயில் இருப்பதை நவராத்திரியின் போது நினைவு படுத்திக் கொண்டு உடனே அதை மறந்தும் வந்தனர் அவ்வூர் மக் கள். தர்மகர்த்தாப் பிள்ளையைப் பார்த் தாலே பெரும்பாலோருக்கு ஒரு ஏளனம். காரணம், காலத்தோடு அனுசரித்துப் போகாதவன். பெரிய மனுஷங்களைப் பகைச்சுக்கிட்டுத் திரியறவன். இந்தக் காலத்துலே இப்படி இருந்தா முடி

-