பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழங்க தீபாராதனை நடந்தது. சகஸ்ர நாம அர்ச்சகன ஆரம்பித்தவுடன் ஜம்பு லிங்கமும், கந்தசாமிப் பிள்ளையும், கேசவமூர்த்தியும் வெளிப் பிராகாரத் தில் வந்து அமர்ந்து கொண்டார்கள். குழந்தைகள் கொம்மாளமிட்டு கண்ணு மூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். பிள்ளையாரின் பின்புறம் ஒளிந்து கொண் டிருந்த சிறுவன் பிடிபட்டு விடவே, அவர்கள் போட்ட இரைச்சலில் தேவி யின் திருநாமங்களின் ஒலி தேய்ந்து விட்டது.

டேய் வாலுங்களா வெளியே போlங்களா இல்லையா ? உதைக்கட் டுமா?' என்று சொல்லிக் கொண்டே எழுத்தார் கந்தசாமிப் பிள்ளே.

இருங்கள் பிள்ளை என்று கைய மர்த்திஞன் கேசவமூர்த்தி.

இந்தக் குழந்தைகள் இப்படி தின் மும் குதாகலமாக விளையாட வழி இல்லாமல் இந்தக் கோயிலைப் பாழாக்கி வைத்திருப்பது யார் குற்றம், சொல்லுங் கள்? நிலவு நாட்களேத் தவிர, மற்ற நாட்களில் கோயிலின் இருண்ட மூலை களும், முட்புதர்களும், ஹோவென்று

ஆடும் மரநிழல்களைத் தவிர. இந்தக் கோயிலினுள் அவர்கள் எதையும் பார்க்கவில்லே. அதனல், அவர்கள்

உள்ளே நுழைவதும் இல்லை. விளக்கு களும், நறுமணமும்கூடிய இந்த ஒன்பது நாட்களில் மட்டும் கோயிலுக்குள் விளை யாடிவிட்டு மறுபடியும் பெரியவர்களைப் போல அவர்களும் மறந்து விடுகிருர்

கள். எந்த விதத்திலும் நாம்தான்் அவர்களுக்கு வழி காட்டிகளாக இருக் கிருேம்......'

ஜம்புலிங்கம் தம் எதிரே இருந்த நாக லிங்க மரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பச்சை இலைகளி னுாடே அழகிய மலர்கள் இதழ் வெடித்து மணத்தைச் சிந்தின. நான்கு இதழ்க ளுக்கு மேலே ஐந்தாவது இதழ் அரவின் த&லபோல் உயர்ந்து குடை பிடிக்க லிங்க உருவில் சின்னஞ்சிறிய மொட்டு ஒன்று - பெரிய தத்துவத்தைச் சிறிய உருவிலே வடித்துக் காட்டிய இயற்கை யின் பேரதிசயம் ! விஷயம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், சிறிய மனித குல செய்தும் பார்க்க முடியும் என்று அவருக்குள் ஏதோ ஒன்று கூறிற்று.

" பிள்ளைவாள் !' என்று கையைச் சொடுக்கிக்கொண்டே திரும்பினர் ஜம்பு லிங்கம்.

o இந்த விஜயதசமி அன்று கோயில் கும்பாபிஷேகத்துக்கென்று ஊரிலே நிதி

தி ர ட் ட ஆரம்பிக்கலாம்...... சேர்ந்த பணத்தோடு, அப்புறம் நாலு பெரிய மனுஷங்களைப் போய்ப் பார்க்கறது. நல்லதுக்கு நாலுபேர் உதவ மாட்டாங் களா?' என்று ஜம்புலிங்கம் கூறி முடிக் கவும், கருவறையில் தீபாராதனை நடப் பது தெரிந்தது. --

விஜயதசமி அன்று காலையில் ஜம்பு லிங்கமும், கந்தசாமிப் பிள்ளையும் மட் டும் கும்பாபிஷேகத்துக்கு நிதி திரட்ட வெளியே கிளம்பிஞர்கள். பத்து, ஐந்து என்று இருநூறு ரூபாய்கள் வரையில்

சேர்ந்தது. அத்துடன் ஒரு வாரத் துக்கு மும் முரமாகக் கேசவமூர்த்தியும் வசூல் செ ய் தா ன். எல்லாமாகச்

சேர்ந்து ஐந்நூறு ரூபாய் வரைக்கும் எட்டியது. ஊருக்குப் பெரிய மனிதர் ஆயிற்றே என்று சுப்பையாவையும் இந்த விஷயத்தில் கலந்து ஒரு முடிவுக்கு வருவது என்று மூவரும் தீர்மானித்தார் கள். அப்படியே போய்ப் பார்த்தார்கள். "அதுக்கென்னங்க பிள்ளைவாள். எம் பங்குக்கு ஐந்நூறு போட்டுக்குங்க...' என்று இறங்கி வந்தார் சுப்பையா. அடுத்து என்ன செய்யப்போகிருர்கள் என்பதைப் பொது மக்களுக்கு அறிவிக்க ஒரு கூட்டமும் போட்டார்கள். மேடை யிலே பக்தியைப் பற்றியும், நம் கோயில் களில் இருக்கும் கிலேச் செல்வங்களைப் பற்றியும் மன்ம் உருகப் பேசினர்கள். இவற்றை நிர்வகிக்க ஒரு கமிட்டி தேவையல்லவா ? அந்தப் பிரஸ்தாபம் வந்தபோது தான்் மறுபடியும் தகராறு மூண்டது. கும்பாபிஷேகக் கமிட்டி யார் என்று பொதுவாக இருக்கட்டும் என்ருன் கேசவமூர்த்தி.

அதெப்படி முடியுங்க ? எம்பேரு தான்் போடுங்களேன். ஊர் ஜனங்க ளுக்கு உழைக்கிறவன் அந்த கெளரதை

அடையக் கூடாதுங்களா ?' என்று சண்டைக்கு வந்தார் சுப்பையா.

பரம்பரை பரம்பரையாக நாங்க தர்மகர்த்தாவா இருக்கோம், எம் பேருதான்் வழங்கட்டுமே...' என்ா

சண்டைக்கு வந்தார் கந்தசாமிப்பிள்ளை. சண்டையும், குழப்பமுமாகக் கூட்டப் கலேந்து விட்டது. வசூலான பணத்தைம் பாங்கியில் போட்டு விட்டு, எல்லோரும் ஒய்ந்து விட்டார்கள். அதன் பிறகு வழக்கப்படி நடந்து வந்த திருவிழாக் களுக்குப் பிடித்தது.சனியன். கந்தசாமிப் பிள்ள்ையைக் கேட்டால் சுப்பையா.வக் கேள் என்பார்; அவர், பிள்ளையைக் கேள் என்பார் முத்துசாமி குருக்கள் அலுத்துப் போய் வேறு கோயிலில் வழி தேடிக் கொண்டார்.

93