பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னங்களுடன் உறவாடிக் கொஞ் சின. கைகள் வாழைத் தண்டு கள் போல் நீண்டிருந்தன. மணிக் கட்டுகளில் மட்டும் கறுப்பு எஞமல் பூசிய தங்க 'பிரேஸ்லெட்டு'கள் பளி ரென்று மின்னின. பால் வண்ணக் கழுத்தில் கறுப்பு வெல்வெட் நாடா வில் நடுவில் பதித்த வைரப் பதக்கம் சுடர் விட்டது.

தலைப்பைத் தோளில் வழி யவிட்டு, அதை இடது கையின் மேல் மடித்துப் போட்டபடி கவலேயற்று உ ல வி க் கொண்டே யிருந்தவள், ஏதோ நினைத்தபடி உள்ளே விரைந்தாள்.

முன் கூடத்தில் கருங்காலி வட்ட மேஜை மீது ஜப்பான் நாட்டு பீங் கான் ஜாடி ஒன்று ரோஜா மலர்க ளுடன் வைக்கப்பட்டிருந்தது. நேற்று அங்கிருந்த காஷ்மீரப் பூங்கொத்துக் கிண்ணத்தை அப்புறப் படுத்திவிட்டு, இதை வைக்கச் சொன்னது அவள் தான்். ஆனல், இன்று இந்தப் பிங் கான் ஜாடி அவளுக்கு அழகாகக் காட்சி தரவில்லை. வெளியே வேலை யாக இருந்த பணியாட்களைக் கூப் பிட்டு அதை அப்புறப் படுத்தச் சொல்லிவிட்டு, வழுவழு வென்றிருந்த மேஜை மீது தன் புகைப் படத்தை வைத்துப் பார்த்தாள்.

அனுசூயா தேவி கொள்ளை அழகு. படமும் அழகாக இருக்கக் கேட்கவா வேண்டும்? கன்னத்தில் கைகளே ஊன்றி. படத்தையே சிறிது நேரம் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள். அன்றைய தபாலில் அவளுக்கென ஏராளமான கடிதங்களும் வந்திருந் தன. பிரபல சினிமா பத்திரிகை ஒன்று அனுசூயா தேவியின் கலை ஆர்வத்தைப் பற்றியும், அவள் தன் வீட்டை வித விதமாகக் கவினுற அலங்கரித்துப் பார்த்து மகிழ்வதைப் பற்றியும் எழுதி இருந்தது. இருந்தாலும், அவளுக்கு ஏனுே இதிலெல்லாம் ஒரு நிறைவு ஏற் படவில்லை.

தன்னைப் போலவே எல்லோருக்கும் இவ்வித ஆர்வம், பிரச்னை இருக்குமா என்று சிந்தித்துப் பார்த்தாள் அவள். செல்வத்திலே திளைத்து செழிப்புடன் இருக்கும் அவள், தன்னுெத்தவர் களுடனேயே நட்புப் பூண்டிருந் தாள். அவர்கள் எல்லோருமே ஒவ்வொரு வி த த் தி ல் கலேப் பொருள்களேச் சேகரிப்பதும், வீட் டில் பொருத்தமான இடங்களில் அவற்றை வைத்து அழகு பார்ப்

55

பதும், தோழிகளே அழைத்துக் காட்டி மகிழ்வதையுமே பொழுது போக்காக

ட |ப | T . அனுசூயா மேலும் சிந்தித்தாள்: பால்யத்தில் தன்னுடன் படித்த யாரா வது ஒரு பெண் எங்காவது இருக்க மாட்டாளா என்று தீவிரமாக யோசிக்க யோசிக்க, எளிமையும், அடக்கமும் நிறைந்த கீதா அவள் நினைவில் பளிச்சென்று தோன்றினுள். "ஆமாம்...கீதாவும் இந்த ஊரில் தான்் இருப்பதாக அத்தையம்மாள் ஒரு தரம் சொன்ஞர்களே. எங்கே யிருக்கிருளோ? அத்தையம்மாளையே கேட்டு விட்டால் போகிறது...'

தோட்டத்தில் உலாவிக் கொண் டிருந்தவளைக் காணுது போகவே அத் தையம்மாள் அனுசூயாவைத் தேடிக் கொண்டு முன்கூடத்துக்கு வந்தாள். நேற்று ஜப்பான் தேசத்து ஜாடி இருந்த இடத்தில், இன்று அவள் புகைப்படம் இருப்பதைப் பார்த்து விட்டு, "ஏம்மா கண்ணு! இதையேன் இங்கே வச்சுட்டே ? பாராச்சும் பார்த்தா திருஷ்டி போடுவாங்க-' என்று கேட்டவாறு, புகைப் படத் தைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்து அக்கறையுடன் மறுபடி அதனிடத்தில் வைத்தாள்.

மாதுளை மொட்டு மலர்வது போல் அனு சூயா தன் இதழ்களைப் பிரித்த வாறு பளிச்சென்று சிரித்தாள்.

'நீங்க ஒண்னு அத்தை. எம் படத் தைப் பார்த்து திருஷ்டி போடற துன்ன, அதோ பாருங்க, சுவத்துலே எத்தனே பெரிசா படம் போட்டு ஒட்டி யிருக்காங்கன்னு - அதெல்லாம் ஒண் ணும் வராது... எனக்கு இப்ப ஒண்ணு தெரிஞ்சாகணும். எங்கூடப் படிச்ச கீதா இந்த ஊரிலே இருக்கிறதா சொன்னிங்களே, கோவில்லே பாத்த தாகச் சொன்னிங்க, எங்கே இருக் கிரு தெரியுமா அத்தை?'

'தெரியாம என்ன? அனுமார் கோவில் தெருவிலே இருக்கிருளாம். அந்தப் பெண் பாவம், அன்று எப்படி இருந்ததோ அப்படியே தான்் இருக் குது...'

'அவளே நான் பார்க்கப்போவனும் அத்தை

அத்தையம்மாளுக்குத் தெரியும் அனுசூயாவைப் பற்றி: ஒன்றைச் செய்ய வேண்டு மென்று நினைத்து விட்டால், அவளே யாராலும் மாற்ற முடியாது என்று. |