பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுசூயா எளிமையாகத் தான்் உடை உடுத்திக் கொண்டாள். ஆனல், அதிலும் கவர்ச்சியும், கலே ஆர்வமும் தெரிந்தது. ஆ இ ட நிறையப் பழங்களும் தின்பண்டங்களும் வாங்கி எடுத்துக் காரில் வைத்துவிட்டு, கீதா

வின் வீட்டைத் தேடிப் புறப்பட்

டாள்.

தன் வீட்டு வாயிற் படியில் தலை

வைத்து கீதா சினிமா பத்திரிகை

ஒன்றைப் புரட்டியவாறு படுத்திருந் தாள். பிரபல சினிமா நட்சத்திரம் அனுகுயா தேவியின் கலே ஆர்வத்தை பற்றிய செய்தி வந்த அதே பத்திரிகை தான்் அது.

கீதா கீதா!' என்று நொடிக் கொரு தரம் கூப்பிட்டு கண்ணுமூச்சி யாடிய அவளா இவள்? இன்று இவள் பெரிய நடிகை. செல்வத்தில் ஊறிக் கிடப்பவள். என்னை எங்கே இவள் தெரிந்து கொள்ளப் போகிருள்? என் னைப் பற்றி அவளுக்கு நினைவிருக் கிறதோ என்னவோ? இவ்வாறு அனு சூயாவின் படத்தைப் பார்த்தபடி எண்ண மிட்டாள் கீதா.

இரண்டே அறைகள் கொண்ட அவள் வீட்டில் படிக்கும் அறை, படுக்கை அறை, விருந்தினர் தங்கும் அறை எ ல் லா ம் தொன்றுதான்். மற்றது சமையலறை, அதிகக் காற் ருேட்டமில்லாத அந்த இடத்தில், நல்ல காற்று சிறிதாவது பெற வேண்டுமானல் வாயிற்படியில் தான்் படுத்தாகவேண்டும். கு ழ ந் தை க ள் இரண்டு பேர்களும் பள்ளிக்கூடம் போயிருந்தார்கள்.

யிற்று. ஒரு மணிக்கு இடை வேளைச் சாப்பாட்டுக்கு வந்து விடு வார்கள். உப்பிட்டு மோர் ஊற்றிப் பிசைந்த பழையதும், எலுமிச்சை ஊறுகாயும் தான்் அவர்களுடைய மதிய உணவு. காலையில் ஒரு பொரி யல், குழம்புடன் சாப்பிடுவதே மாதத் தில் இருபது நாட்களுக்குத் தான்். `gಾನವನಾ கொண்டு வரும் நூற்றைம்பது ரூபாயில் அதற்கு மேல் எதிர்பார்க்கவும் முடியாது.

கீதா கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தாள். மணி பன்னிரண்டரை ஆகி விட்டது. இன்னும் அரை மணி தான்் அவளுக்கு ரெஸ்ட் கிடைக் கும்.

கடிகாரப் பெட்டி மீது ஒட்டடை. படிந்திருந்தது.

லேசாக அதைத்

துடைக்க வேண்டுமென்று பத்திரி கையை வைத்து விட்டு எழுந்தாள். கந்தல் துணியினுல் அதைப் பளிச் செனத் துடைத்து வைத்து விட்டு அவள் சமையலறைக்குப் போகக் கிளம்பியபோது, தெருவில் கார் வந்து நின்றது நிழலாடியது.

கீதா முதலில் அதைக் கவனிக்கா

மல் உள்ளே போகத் திரும்பினுள். ஆனல் அனுகு யாவே ஒருக்களித் திருந்த வாயிற் கதவைத் திறந்து

கொண்டு உள்ளே வரவும், டிரைவர் பழக்கூடையைக் கொண்டு வந்து வைத்துவிட்டு வெளியே செல்லவும், அனுசூயா கதவை அழுத்திச் சாத்த வும் சரியாக இருந்தது.

தோ!" என்று ஆவலுடன் அழைத்து, 'என்னை நினைவிருக்கிறதா உனக்கு? பார்த்து ஆறு வருவ#ங்கள் இருக்குமே" என்று கேட்டாள் அனு சூயா ஆவலுடன்.

கீதா பிரமித்து நின்று விட்டாள். வீடு தேடி வந்தவளே வாவென்று அழைக்கக் கூடத் தோன்றவில்லை.

தோ!" என்று மறுபடியும் அழைத்தாள் அனுகு யா. இதற்குள் கீதாவுக்குத் துணிவு வந்து விட்டது.

வா...வா... அனு...' என்றவள் அங்கு மூலையில் சுருட்டி வைக்கப் பட்டிருந்த பாயை எடுத்து விரித் தாள். ஏதேதோ கேட்க வேண்டும் என்று நினைத்தவள். 'இப்பொழுது தான்் உன் படத்தை அந்தப் பத்திரி கையில் பார்த்தேன்.அனு. உன்னே இவ் வளவு சடுதியில் பார்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஒரோரு சமயம் நாம் நினைக்காதது எவ்வளவு வேக மாக நடந்துவிடுகிறது பார்த்தாயா?" என்று கேட்டாள்.

அனு சூயா அழகாகச் சிரித்தபடி காதோரம் சுருண்டு கொஞ்சும் குழ லேக் கோதிக் கொண்டே கீதாவைப் பார்த்தாள்.

அவள் அப்படிப் பார்ப்பது கீதா வுக்கு வெட்கமாகி விட்டது.

என்ன அனு? ஏன் என்னை அப் படிப் பார்க்கிருப்?' என்று கேட்டு விட்டாள்.

"உட்காரேன் கீதா, உன்னுேடு நான் நிறையப் பேச வேண்டும் என்று வந்திருக்கிறேன். எல்லோரும் நினைப் பது போல எனக்கு நிறையப் பணம் இருப்பதால் மற்றவர்களுடன் சுமுக மாகப் பழகுவேனுே என்று சந்தேகப்

57