பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏறக்குறைய புவணுவைப் பார்த்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட் டது. அவளுடைய லட்சியங்கள், கண்வுகள் எல்லாம் என்ன ஆயின என்று எனக்குத் தெரியாது. சமூக சேவை செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக அவள் ராம்ஜி என்கிற மராட்டிய வாலிபனைத் திரு மணம் புரிந்து கொண்ட செய்தி மட் டும் எனக்குத் தெரியும். தெரியுமா வது? அவர்கள் திருமணத்தன்று இந் தப் பாரத நாடே சுதந்திர வேட்கை

கொண்டு பொங்கியெழுந்தது. அதன் பிறகு ஒரு தடவை சந்தித்து இருசி" கிறேன்.

வருடம் 1942. மகாத்மாஜியின் 'வெள்ளையனே வெளியேறு!" என்கிற கோவும் நாடெங்கும் முழங்கிக் கொண்டிருந்தது. நானும் அந்தச் சுதந் திர வேட்கையில் முங்கிக் கொண்டு தான்் இருந்தேன். ' என்ன செய்ய லாம், எப்படி இந்த வெள்ளேயர்களை விரட்டியடிக்கலாம்' என்பதே என் சிந்தன. இத் தருணத்தில் புவஞ.