பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வாண்டு நடந்த சத்யாக்ரகத் தில் தொண்டர்கள் எண்ணிக்கை பெருகி விடவே, அவர்களை அடைத்து வைக்க இடமில்லாமல் பிரிட்டிஷ் அர சாங்கம் திணறியது. குறிப்பிட்ட தண்டனைக் காலத்துக்குள் ராம்ஜியும் புவனவும் விடுதலே அடைந்து வந்து விட்டார்கள். o

சகோதரிகள் இருவரும் ஒன்று சேர்ந்த அந்த நாட்கள்? பேச்சற்று, கண்கள் இமைக்க மறந்து, துடிக்கும் உதடுகளுடன், பரபரக்கும் கைகளி ல்ை இரண்டு பேரும் சேர்த்துத் தழு விக் கொண்ட அந்தக் காட்சி?

நான் கண்களைத் துடைத்துக் கொண்டேன். மறுபுறம் திரும்பியவ TேT .

'அழுகிறீர்களா, ப ஹ ன் p?'

என்று என்னை ராம்ஜி விசாரித்தார். 'இல்லை, அண்ணு! சகோதர பாசத் தின் நெருக்கத்தை இவ்வளவு நெருக்க மாக நான் உணர்ந்ததில்லே. புது அனு பவத்தின் பேரில் மனம் நெகிழ்ந்து விட்டது.'

"பாசமும் ஒர் எல்லைக்குள், வரம் புக்குள் இருக்க வேண்டும் பஹன்ஜி..' எனக்குப் புரியவில்லை. ஆண் மனத் தின் போக்கே விசித்திரமானது. பாசத்துக்கு அணை போடுவது போல் இதென்ன பேச்சு? என்றெல்லாம் என் சிந்தனைகள் ஓடின.

ராம்ஜி, பெங்களூரில் ஒரு சேவை நிலையம் ஆரம்பிக்கப் போவதாகவும், எங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை யுடன் எங்களிடம் விடை பெற்றுக் கொண்டார்.

ஒரு நாள் குடும்ப .ே வ லை க ள் முடிந்த பிறகு, தினசரிப் பத்திரி கையைப் படிப்பதற்காகப் பிரித் தேன். நடனமாடும் தோற்றத்தில் ஒரு பெண்ணின் புகைப்படம் வெ யாகி யிருந்தது. அந்தப் பெண் வேறு யாருமில்லை, பவானிதான்்! அட! அவள் எப்படி வளர்ந்து மாறி விட் டிருந்தாள்? சிறு வயதிலேயே அமைப் பாக இருந்த கண்கள் இன்று பாவத் துடன் ஆயிரம் கதை பேசின.

நிகழ்ச்சி நடக்குமிடம் சென்னை தான்் என்று அறிந்ததும் நான் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து விட்டேன். நெடு நாளைய நட்பின் நெருக்கம் என்னைத் திணற வைத்தது. இந்த

82

அன்பின் ஆழம் வெறும் வார்த்தை களிலோ, கடிதப் பரிமாறல்களிலோ இல்லே. மனத்தின் அடித்தளத்தில் பாறைபோல் அன்பு இறுகி விட்டா லும், கல்லிலிருந்து நீர் எந்தச் சமயத் திலும் வெடித்துக் கசிவது போல் அன்பு பாய்ந்து வெளி வந்து விடும்.

மாலே அவருக்குக் காப்பி கொடுத்து விட்டு செய்தித் தாளைக் காண்பித் தேன். கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிதான்் என்று கூறி டிக்கெட்டுகள் வாங்குவதாகக் கூறி

விட்டார் என் கணவர்.

' க்ரின் ரூமு’க்குள் சென்றே என் தோழியை நான் பார்த்து விட்டேன். என்னேக் கண்டவுடன் அவள்தான்் எப் படி விக்கித்துப் போய் விட்டாள்?

அட! சரோவா?' "ஆமாம். . . மறந்து விட்டாயா?" "மறதியா?' என்று கூறி விட்டுச் சிரித்தாள் புவன. 'உன்னைப் பார்த்து எத்தனை காலம் ஆகி விட்டதடி?. . . "' காலம், கீலம் என்று கணக்குப் போடாதே. 1941 லிருந்து ஐம்பத் தொண்ணு வரைக்கும் ஒரு காலமா? பத்து வருவுங்கள்தான்ே?"

'உனக்கு அவை சாதாரணப் பத்து வருஷங்கள். எனக்கு, எங்களுக்கு அது ஒரு சகாப்தம் போல் தோன்று கிறது.'

வெளியே மேடையில் பக்கவாத்தி யக்காரர்கள் சுருதி சேர்த்துக் கொண் டிருந்தார்கள். நலங்கிட்ட பாதங் களுக்குச் சதங்கை கட்டிக் கொண் டிருந்தாள் பவானி,

"பவானி! என்னைத் தெரிகிறதோ உனக்கு?' என்று அவள் முகத்தை நிமிர்த்திக் கேட்டேன்.

மாதுளங் கனியைப் போன்ற சிரிப்பு வெடித்து இl T, ' தெரியாமலா? நீங்க சரோ அக்கா தான்ே?' என்று கேட்டாள் பவானி.

கோகலே ஹால்

பிளந்தாற்

அன்று நிரம்பி

வழிந்தது. வருங்கால நடனமணி என்று பிரபல நடனக்காரர்களே அன்று புகழ்ந்தார்கள். புகழ் மாலை களேச் சூட்டிக் கொண்ட பவானியின் முகத்தில் பரபரப்பும், குறுகுறுப்பும் நெளிந்தன. பவானி இப்படிப் பிர பலமாவதற்குத் துணையாக இருந்த ராம்ஜியும், புவனவும் மேடைக்கு அழைத்து வரப்பட்டு, பாராட்டப் பெற்ருர்கள்.