பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னே வெறித்துப் பார்த்து விட்டு, "அப்படித்தான்் இந்த உலகமே நினைக்கிறது. நான் ஒண்னும் அவ ளுக்கு ஒசத்தி இல்லை. அவளுக்கு அவள் ராம்ஜிதான்் ஒசத்தி!' "ஓ அப்படியா?"

என்று நான் சிரித்தேன்.

‘'சிரிக்காதீர்கள் அக்கா ராம்ஜி ஒண்ணு சொல்லிவிட்டா அது அவ ளுக்கு வேத வாக்குத் தான்் போங்

கள். . . . .

கூடத்தில் டெலிபோன் மணி அடித் தது. பவானி விரைந்து சென்று போனே எடுத்தாள். சற்று முன் கடு கடுத்த முகம், மலர்ச்சியால் விரிய, '"ஹலோ! சங்கர் தான்ே? நான் இன் னும் அரை மணியில் ரெடி. நீங்கள் முடிந்தால் இங்கே வாருங்கள். ஒ! முடியாதா? நானே வரேன், இடம் எங்கே? ஒட்டல் ஒவதியானிக் தான்ே? ஆல் ரைட் . . சீரியோ' என்று கூறி விட்டுப் போனே வைத்து விட்டாள்.

'அக்கா, நான் கொஞ்சம் வெளி யில் போயிட்டு வந்துடறேன். . .'

"பவானி! யார் அம்மா அந்தச் சங்கர்?' "

என்னுடைய கேள்வி அவளுக்குப்

பிடிக்கவில்லை. அத்துடன் நான் யார்

அவளேக் கேட்பதற்கு?

பவானி அன்றிரவு வீடு திரும்பும் போது ஒன்பது அடித்து விட்டது. இவ (து டய ஆயிரம் கேள்விகளுக்குப் பதினுயிரம் பொய்களை நான் தயார் செய்ய வேண்டிய தொல்லையை அனு பவித்துத் தீர்த்தேன். அடுத்த நாள் ஜி. டி. ரயிலில் அவளை ரயிலேற்றி விட்டு, புவணுவுக்கு அவள் டெல்லி போவதைப் பற்றித் தந்தி கொடுத்த பிறகுதான்், எனக்கு நிம்மதி ஏற்பட் டது.

பவானி ஒரு கடிதம் கூட மரியா தைக்காகப் போடவில்லையே என்று நான் உள்ளுற வருந்திக் கொண் டிருந்த சமயம், புவன விடமிருந்து கடிதம் வந்தது. பவானிக்கும், சங்க ருக்கும் திருமணம் ஆகிவிட்ட நற் செய்தியை விட, உயிருக்குயிராக வளர்த்து. பாசமும், அன்பும் சொரிந்து ஆளாக்கிய புவணுவை, பவானி ஒதுக்கியதைப் பற்றிய தகவல் தான்் அதில் அதிகமாக இடம் பெற். றிருந்தது.

புவணுவைப் பற்றி நான் உள்ளுற வருந்தினேன்.

Տ Յ

அவளுக்கும்,

ராம்ஜிக்கும் எத்த னேயோ லட்சியங்கள், ஆசைகள் இருந்தும் அவை முடிவு பெருத கனவுகளாகச் சிதைந்து போப் விடு கின்றன.

o

சேவையை லட்சியமாகக் கொண்டு வாழ்கிறவர்களின் வாழ்க்கையில் ஏமாற்றங்களேதான்் தோன்றிக் கொண்டிருக்கும் போலும். அவ ளுக்கு ஆறுதலாக நான்கே வரிகளில் ரொம்பவும் கவலைப்பட வேண்டாம். வாழ்க்கை என்பது சேறும் சகதியும் நிரம்பிய குட்டைதான்். ஒவ்வொரு சமயம் அது கங்கா ஜலத்தைப்போல் தெளிவாகத் தோன்றிலுைம், அதை நாம் நம்பிவிடக் கூடாது' என்று எழுதினேன்.

பல பொறுப்புகளையும் கவலைகளே யும் சுமக்கும் இந்தத் தேகம் ஒரு இயந்திர அமைப்பைப் போன்றது தான்் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிரு.ர்கள். எனக்கு நல்ல ஓய்வு தேவைப்பட்டது. வைத்தியர், மருந்து களைவிட வெளியூர்ப் பிரயாணம் நல்ல தென்று அபிப்பிராயப்பட்டார்.

பெங்களுரே சிறந்த இடமென்று தேர்ந்தெடுத்துக் கிளம்பினேன்.அதை விடச் சிறந்த இடங்கள் பல இருக்க லாம். ஆஞ்ல், என் ஆருயிர்த் தோழி அங்குதான்் இருக்கிருள் அல்லவா?

புவனு ரயிலடிக்கு வந்திருந்தாள். ராம்ஜி வரவில்லை. மெல்லிய கலா

கேடித்ரா நூல் புடவை கட்டியிருந் தாள் அவள். வகி டெங்கும் நரை கண்டு விட்ட கூந்தல். எடுப்பான

மூக்கில் முத்து மூக்குத்தி அணிந்திருத் தாள். தேசிய ஒருமைப் பாட்டின் சின்னமாக, ம ரா ட் டி. ய ைர மணந்து கொண்டதற்கடையாளமாக அந்தப் பாணி நகைகளை அணிந்து, தமிழ் நாட்டில் பிறந்தவளாதலால் இனிய தமிழில் சரோ செளக்கிய ம்ாடி' என்று என்ன விசாரித்தாள். ஒ: கொஞ்சம் செளக்யம், இராம்ப செளக் யம் அடைய வேண்டு மென்று

தான்் பெங் க ளு ரு க் கு வந்திருக் கிறேன்-'

புவணு என்னுடைய பெட்டியை எடுத்துப் போய் டாக்ஸியில் வைத் தாள்.

நிறையப் பூத்துக் குலுங்கும்

போகன் வில்லா செடிகளால் வேயப் பட்ட வேலி அமைந்த வீட்டின் எதிரே கார் வந்து நின்றது.