பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டி அதைப் போல நடந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

ராம்ஜி தோட்டத்தில் பொம்மை கள் செய்து கொண்டு இருந்தார். நான் படித்துக் கொண்டிருந்தேன்.

பீட்டர் உஸ்டினவ் என்கிற நடிக எழுத்தாளரின் வாழ்க்கை . ஒரு நாடகம்' என்கிற சிறு கதையைப் படித்துக் கொண்டிருந்தேன். நடிகை ஒரு த் தி யி ன் ஆணவம் கலந்த தன்னம்பிக்கையைப் பற்றிய கதை

அது.

புவனவின் தோல்விகளுக்குள்ளும் ஒருவித ஆணவும் இருப்பதாகவே

எனக்குப் புலப்பட்டது. ཟས། །

பவானி அவளை எத்தனை ஒதுக்கி ஞலும், அவமரியாதை செய்தாலும், தான்் பெரியவள். தன்னிடம்தான்் அவள் ஓடி வருவாள் என்கிற ஆண விம் புவளுவின் மனத்தில் நிரம்பியிருப் பதாகத் தோன்றியது.

உள்ளேயிருந்து இனிய ஒலிக்க ஆரம்பித்தது.

கீதம்

"ஆடாது அசங்காது வா. கண்ணு' என்று பாடியபடி புவன குழந்தையை அழ்ைத்து. ஆனந்தப் பட்டுக் கொண் டிருந்தாள். அடுத்த நாள் பவானி பெங்களூர் வருவதாகச் சென்னையி 3ருந்து காலையில் தந்தி வந்திருத் தது.

குழந்தை மூன்று நாள் ஜுரத்தில் வாடி இளைத்துப் போயிருந்தது, பவர்ணி வீட்டுக்கு வந்ததும் சகோதரி கள் இருவரும் நடத்தப் போகும் அந்தTவிவாதம் என். கற்பனையில் iiதிந்து கெர்ண்டே யிருந்தது. புத்து கத்தை மூடிவைத்துக் கண்களை மூடிக் கொண்டு அதை ரசிக்க ஆரம்பித் தேன்.

உள்ளே ராம்ஜியும், புவணுவும் தர்க்கமிடும் சத்தம் கேட்டது.

"புவஞ! நீ ஒரு பைத்தியம். நமக் கென்று கடவுள் ஒன்றைக் கொடுக்க வில்லை. அந்தப் பொறுப்பற்றவளின் குழந்தையைக் காலமெல்லாம் நாம் எதற்கு வளர்க்க வேண்டும்? குழந்தை யாரிட்ம் வளர வேண்டும் என்பதைக் கோர்ட் தீர்மானம் செய்யும்' என்று இரைந்தார் ராம்ஜி.

92

'அவள்தான்் சங்கரை விவாக ரத்து செய்து விடப் போகிருளாமே... அவன் வேறு கல்யாணம் பண்ணிக் கொள்வான். இவள் பெங்களூர் வரப் போவதில்லையாம். திரும்பவும் நடன கோஷ்டியுடன் ஜப்ப்ானுக்குப் போகி ருளாம். வர்கள் சண்டையில் இத் தக் குழந்தை கிடந்து, திண்டாட வேண்ட்ாம். இது நம் குழந்தையாக இங்கேயே இருக்கட்டும். . .' என் ருள் புவணு அழுதபடி.

விவாக ரத்து, கணவன், மனைவி தக ராறு பற்றிய சட்ட திட்டங்களையோ, தீர்ப்புகளையோ அறிந்து கொள்ளும் மனப் பக்குவம் அந்தக் குழந்தைக்கு வருவதற்கு இன்னும் எத்தனையோ ஆண்டுகள் ஆகும். ஆனால், அது அனுபவிக்க வேண்டிய தாயன்பை அது இழப்பது நியாயமல்ல என்று தான்் எனக்குத் தோன்றியது.

எனக்கிருக்கும் குழப்பத்தில் குழந்தையை எங்கே விடுவது என்று தவிக்கிறேன்' என்று பவானி கடிததி தில் எழுதியிருந்தாள்.

குழப்பங்களும், தொல்லைகளும் இல்ல்ாத ஒர் அமைதியான சூழலில் வளர வேண்டிய அந்த மதலையின் சுதந்திரத்தைப் பறிக்க, யாருக்கும் சுதந்திர மில்லை அல்லவா?

புவனு! குழந்தை உன்னிடம்தான்் இருக்கட்டும். வளர்ப்பதாக உன் தங்கைக்கு எழுதி விடேன்' என்றேன் நான.

அவ்விதமே அவள் எழுதி. ஒப்பு தலும் பெற்று விட்டாள்.

பல தோல்விகள், வெற்றிகளில் படிகள்' என்று யாரோ சொன்ன தாக ஒரு நினைவு எனக்கு.

ராம்ஜி தம்பதி-தம் வாழ்க்கையில் முதன் முதலாக வெற்றிப் பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தா? கள். அவர்கள் வாழ்க்கையில் முதன் முதலாக வசந்த காலம் ஆரம்பித் திருந்தது.

பெங்களூரின் இனிய வசந்தத்தை விட்டுப் பிரிந்து வர மனம் வராமல், இனிய நினைவைச் சுழந்து கொண்டு சென்னைக்குத் திரும்பினேன்.