பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரி இறைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும்படி இருந்தது.

கூட்டம் நிரம்பி வழிந்த சன்னிதியில் பொற் கொல்லர் ஆறுமுகத்துக்கு அம் பிகையின் மாலையை அணிவித்துப் பிர சாதம் கொடுத்துக் கெளரவித்தார்கள். வேலுச் செட்டியார் தம் இரண்டு கரங் களாலும் மாலையைப் பெற்றுக்கொண்டு குங்குமத்தை, 'அம்மா! தாயே. என் வியாபாரம் செழிக்க வேண்டும்' என்று தம்மைப் பற்றி நினைத்தவாறு நெற்றியில் அப்பிக் கொண்டார். பூக்கார முத்து வாயெல்லாம் பல்லா கப் பிரசாதம் பெற்றுக் கொண்டார். நாகஸ்வர வித்வானுக்கு இன்னுெரு பொற்பதக்கம் கிடைத்தது.

அதோ! துரண்களின் மறைவில் ஏகாக்ர சிந்தனையுடன் அம்பிகையின் திரு உருவில் தன்னை லயிக்க விட்டுச் சுற்றுப்புறத்தை மறந்த ஏழை பார்வதி யையும், அவள் மாக்கோலங்களையும் யார் கவனிக்கிருர்கள்? பக்தர்களின் கால்களில் மிதிப்ட்டு அழியம் சிக்குத்

தாமரை, தேர்க் கோலத்தைப் பார்த் துப் பெருமூச்செறிந்து பேசியது.

'இதோ! மெளனமாக மிதிபட்டு அழிந்து போகும் நாம் நம்மைப் பற் யோ, நம்மைப் படைத்தவளைப் பற்றியோ ஒரு வார் த் ைத பேச அருகதையற்றவர்களாகி விட்டோம்.'

தேர்க்கோலம் பெருமையுடன் அதற் குப் பதில் கூறும்: - 'உன்னையும், என் னையும் படைத்தவள் அதோ துாண் மறைவில் நிற்கிருள். ஆனால், அவள் உன்னையும், என்னையும் படைத்த விடிை. யில் அதைப்பற்றி மறந்து விட்டாள். ஏன்?அவள் தன்னையே மறந்து நிற்கிருள். உயிரற்ற நாமும், உயிருள்ள அவளும் இப்பொழுது ஒன்றுதான்்.... H. H.

தன்னை மறந்த பார்வதிக்குக் குருக்க வளிடமிருந்து பிரசாதம் பெற்றுக் கொள் ளக் கூடத் தெரியவில்லை. அவளுக்குத் தான்் ஊரார் பிரமை பிடித்தவள். அரைப் பைத்தியம் என்ற பெயரைச் சூட்டி யிருக்கிருர்களே? நாம் ஏன் அது குறித்து வருந்த வேண்டும்?