பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பிப் பொட்டுப் பொட்டாய்க் கசிந்தன. கூர்மையான மூக்கும், கவிந்த இமைகளையுடைய கண்களும் குவித்த அதரங்களும் அவளே எழிலுடை பவளாக்கிக் கொண்டிருந்தன.

காதில், மூக்கில், ஒன்றுமில்லை. அசப்பிலே அவள் தலையை உயர்த்தினுல் நெற்றி நடுவில் செஞ்சாந்துத் திலகம் பளபளவென்று மின்னி யது. காதோரத்தில் குழற்கற்றைகள் சுருண்டு சுருண்டு விளையாடின.

முதுகின் மேல் புரண்ட சாயம் போன பேல்ர்க்கை இழுத்து இடுப்பில் செருகியிருந் தாள். அங்கும் இங்கும் கிழிந்த ரவிக்கை, இடையிலே வெளுத்துப் போன பச்சைப் பாவாடை வைத்த கண் வாங்காமல் தன் னேயே உற்றுப் பார்க்கும் அம்புஜத்தை ஏறிட் டுப் பார்த்தான்் ஜானவி.

என்ன மாமி அப்படிப் பார்க்கிறீர்கள்?" 'ஒன்றுமில்லையம்மா திடிரென்று இளைத் துப்போயிருக்கிருயே. உடம்புக்கு ஏதாவது.' அம்புஜம் எரிந்து கொண்டிருந்த "ஸ்டன்"வின் கருதியைக் குறைத்தவாறு கேட்டாள்.

ஜானவி ஆட்டுக்கல்லேயும், குழவியையும் மாறிமாறிப் பார்த்தாள். பிறகு ஈரம் கசிந்த தன் கண்களே மேலாக்கினுல் ஒற்றி எடுத்துக் கொண்டாள்.

ஒன்றுமில்லே மாமி. ஒன்றுமில்லே! ஏழை பாகப் பிறக்கக் கூடாது." அம்புத்துக்கு நறுக்கென்று உறைக்கிருற்போல் இருந்தது. "ஏன் ஜானவி பணக்காரராக இருந்து விட்டால் மட்டும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து விட முடியுமா, என்ன? மனித ஜன்மத்துக்கே குறையில்லாமல் இருக்க முடியாது. ஒவ் வொருத்தருக்கு ஒரு விதத்தில் குறை.'

'ஒவ்வொருத்தருக்கும் ஒருவிதத்தில் குறை 燃 கும். மாமி. என் ஜன்மத்துக்கு எப் பாழுதும் எதற்கும் குறைதான்்.' நூற்றுக் கிழவி மாதிரி ஜானவி பேசிக் கொண்டே உளுந்து விழுதை வழித்து வழித்து அடுக்கில் 1 போட்டுக் கொண்டிருந்தாள். எத்தனையோ ஏழைப் பெண்களில் ஜானவியும் ஒருத்தி. . தாய் யாருடைய வீட்டிலோ சமையல் வேலே : செய்ய, தந்தை இருக்குமிடம் தெரியாமல் - அவதிப்படும் நித்திய தரித்திரக் குடும்பத் தில் பிறந்தவள் ஜானவி. அருமை மக ளுக்கு ஆசையாக அழகிய நாமத்தைச் சூட்டிய தாய் அன்று பலவாருகக் கனவு கண்டிருப்பாள் எதிர் கால த் ைத ப் பற்றி. இன்று ஜானவி சம்பளமில் லாமல் படித்தாலும், மாத மாதம் , நடக்க வேண்டிய சில்லறைச் செலவுக ளுக்கே அம்புஜத்தின் வீட்டில் இட்டி விக்கு அரைத்துக் கொடுக்க வேண்டி யிருந்தது.

அன்று பத்தாவது பாட்சைக்குப் பணம் கட்டவேண்டிய கடைசித் தினம். ரத்தம் சொட்டுவது போல் வியர்வை வழிய அடுப்படியில் நெருப்பின் முன்பாக வெந்து நீருகி அவள் அன்னே அவளே அரும் பாடுபட்டுப் படிக்க வைத்துக்

ஆட்டுக் கல்லில் உளுந்தை இட் & டுக் கடகட வென்று குழவியால் சுற்றி அரைத்துக்கொண்டிருந்தான்்ஜானவி. நெற்றியெங்கும் வியர்வைத் துளிகள்