பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து விட்டேன்' என்று கூறிப் புடவைத் தலைப்பில் எதையோ மறைத்தவாறு தெருவில் இறங்கி வேகமாக நடந்தாள் அம்புஜம்.

மறுபடியும் அவள் திரும்பியதும் ஜானவி யிடம் பதின்ைந்து ரூபாயைத் திணித்தாள். 'போ....போ.மணி பத்து அடிக்கப் போகிறது. இன்றைக்குப் புதன்கிழமை இல் லையா? ஒன்றரை வரை ராகு காலம் இருக் கிறது. பிறகு பணம்கட்டு. மறந்துவிடாதே!”

'மாமி....மாமி... நீங்கள் எப்படிச் சமா ளித்தீர்கள் என்று எனக்குத் தெரியும். முரளி யின் வெள்ளிக்கிண்டியை எடுத்துப் போய் எனக்காக அடகு வைத்து வாங்கியிருக்கி lர்கள். மாமி.....'

தேம்பியபடி நின்ற ஜானவியை, 'போ, போ' என்று விரட்டினுள் அம்புஜம்.

o J. 다. -

リ * םם յtl

கூட்டத்தில் இடித்து மோதிக் கொண்டு மின்சார வண்டியில் ஏறி ஜானவி கோடம் பாக்கத்தை அடையும்போது மணி பத்தே கால் ஆகிவிட்டது. * =

'எல்லாரும் பணம் கொண்டு வந்திருக் கிறீர்களா?' என்று ஆசிரியை கேட்டதும் கடைசிப் பெஞ்சியில் உட்கார்ந்திருந்த பெண் ணுெருத்தி, 'டீச்சர்! என் பணத்தைக் காணுேம் டீச்சர். இங்கேதான்் வைத்து விட்டு

நம்பிக்கை,

வெளியே போய வடடு வந்தேன் டீச்சர்....'

என்று கூக்குரல் போடவும் சரியாக இருந்தது

வகுப்பில் ஒரு விநாடி மெளனம் குடி கொண்டது.

அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜானவி யின் மீது, எல்லார் பார்வையும் நிலைத்து நின்றது. திட்டுத்திட்டாய் வெளுத்த மேலாக் கும், கிழிந்த ரவிக்கையும், சாயம் போன பாவாடையும் சோர்ந்த முகமும், எதிலும் பற்று இல்லாத தோற்றமும் அவளே ஏழைமை என்கிற மீளா நரகத்தில் வீழ்த்திக் காட்டின.

'எல்லோரும் அவரவர் பெட்டி, பைகளை உதறிக் காட்டுங்கள்.' T --

ஒரு சிலரின் பைகளில் ஒன்றுமில்லை. ஏற் கெனவே அவர்கள் பணம் கட்டியவர்கள். சிலர் அன்று பணம் கட்டுவதற்கு எடுத்து வந்திருந் தார்கள். வசதியுள்ளவர்கள், வாயுள்ள வர்கள். அவர்களில் யாரைக் குற்றம் சாட்ட முடியும்? சீறிப் பாய்ந்து அடுத்த நாளே அவர்கள் தத்தம் பெற்றேருடன் பள்ளி ஆசிரியை மீது போர் தொடுக்கவல்லவர்கள். ஜானவி தன்னுடைய பையை உதறினுள். பதினைந்து ரூபாய்கள் படபடவென்று பறந்து கீழே விழுந்தன. * - ஜானவி ! நீ பணம் வீட்டிலிருந்து கொண்டு வந்தாயா?"