பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்போ இல்லாமல் எவனுே காசுக்காக வீசிய சாப்பாட்டைச் சாப்பிட்டு வந்தான்்.

உறவு என்பது இளமையிலிருந்து ஒட்டி வாழ வேண்டிய ஒன்றல்லவா? திடீர்ென்று மாமாவையும் மாமியையும் உறவு கொன் டாடிக் கொண்டு அவன் போக விரும்பவில்லை. இந்த நிலையில் ராஜூ அவனுக்கு வேலையும் தேடித் தந்து விட்டான்.

ஹோட்டல் சாப்பாட்டிேைலா அல்லது தனிமையினலோ உடல் நிலை கெட்டுவிட்டது. நண்பன்தான்் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட் டுத் தினமும் மாலேவேகிளயில் பார்த்து விட்டுப் போவான். -

"'என்ன பாஸ்கர்! குழந்தை கேட்டதற்கு நீ ஒன்றுமே பதில் கூறவில்லையே....?'

வாழ்வு என்கிற சொல்லுக்கு இலக்கண மாகச் சாரு - அந்தக் குழந்தை-அவள் எதிரே நின்றிருந்தாள். அவள் மட்டும்தாளு? அவள் இடுப்பிலே அணேத்துப் பிடித்திருந்த அந்தப் பொம்மைகூட உயிர்த் துடிப்புடன் காணப் பட்டது.

குழந்தை சாரு அதைச் சாய்க்கும் போது அது கண் உறங்கியும். நிமிர்ந்த போது கண் விழித்தும் இந்த உலகத்துடன் வாழ்ந்து விள யாடிக் கொண்டிருந்தது.

அவனுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந் தது. சி! என்ன வேண்டியிருக்கிறது. இதெல் லாம்: தினம் தினம் பார்க்கையில் இந்த ஆற் றங்கரையில் கண்ணுக்கெட்டிய துராம் மறைந் தவர்களின் நினைவுச் சின்னங்கள் முளைத்து எழுந்து கொண்டே யிருக்கும்போது:

எல்லாமே பொய் என்கிற வேதனையுடன் சாருவை அவன் திரும்பிப் பார்த்தான்். சாரு வுக்கு மாமாவின் கண்களில் தெறித்த வேதன் அசூயை எதுவும் புரியாவிட்டாலும், மாமா வுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்பது மட் டும் நன்ருகப் புரிந்தது.

"வாப்பா போகலாம்...."

தந்தையின்

கையைப் பற்றி இழுத்தாள் குழந்தை.

"பாள் கர்' "

என்று அழைத்தவாறு ராஜ கட்டிலின் மீது உட்கார்ந்தான்்.

"இங்கே பார், பாஸ்கர்! உடல் நவம் சரியில்லாதவர்கள் மனத்தை மிகவும் உற்சாகமாக வைத்துக் கொள்ள

வேண்டும். நீ எப்பொழுதும் அந்தக் கல் வறைகளேயே பார்த்துப் பொழுதைப் போக் குவது எனக்குப் பிடிக்கவில்லை. வேண்டுமானுல் நர்ளிடம் சொல்லி உனக்கு இடத்தை மாற்றச் சொல்லட்டுமா...'

ஆயாசத்துடன் தலையசைத்து விட்டான் பாஸ்கரன். நண்பனிடம் விடைபெற்றுக் கொண்டராஜா சாருவுடன் தொலைவில் செல் வதைப் பாஸ்கரனுல் நன்ருகக் காண முடிந் தது. இடுப்பில் சாய்த்து த்த குழந் தைப் பொம்மையுடன் அந்தக் குழந்தை தந்தையின் கரம் பற்றித் துள்ளித் துள்ளி வேகமாக ஒடினுள்.

'நடக்கவே தெரியாதோ இந்தக் குழந்தை களுக்கு? எதற்கும் ஒட்டம்தான்். வாழ்ந்து முன்னேற வேண்டும் என்கிற உயிர்த் துடிப்பு அவைகளுக்கு!"

பாஸ்கரன் மறுபடியும் ஆற்றங்கரைை யப் பார்த்தபோது சோக மெளனத்துடன் மெது வாக நடந்து செல்லும் சிறு கூட்டம் ஒன் றைப் பார்த்தான்்.

அதோ அவர்கள் கல்லறைத் தோட்டத் துக்குள் நுழைகிரு.ர்கள். இன்னும் என்ன என்னவோ செய்கிருர்கள், கண்ணிர் சிந்துவ தினுல்தான்் முகத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. திரும்பிப் போகிரு.ர்கள். மனத்துக்கு இனியவராக, உற்றவராக - இருந்த ஒர் உறவை இழந்து ஏதும் செய்ய முடியாமல் கலங்கியவாறு போகிருர்கள்.

'ஹாம்.ராஜாவுக்குப்பைத்தியம். எதன் மீதும் பற்ருே பாசமோ வைக்காதே என்று அவனிடம் சொல்லிவிட வேண்டும்...' என்று பாஸ்கரன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

இதற்குள் மாலே மயங்கி இருள் சூழத் தொடங்கிவிட்டது. தெரு விளக்குகளெல் லாம் குபிரென்று எரிய ஆரம்பித்தன. ஆஸ் பத்திரி விளக்குகளும் கூடத்தான்். படுக்கை யில் கிடந்த நோயாளி கள் அந்த ஒளிப்பிழம் பைக் ைக கு வி த் து வணங்கிஞர்கள்.