பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரைந்து கொண்டிருந்தார்கள். அந்தச் சின் னஞ்சிறு தளிர் இருக்கவா உலக வனத்தில் இட்மில்லாமல் போய் விட்டது? விளங்காத, விடை தெரியாத இந்த விைைவ எழுப்பித் தனக்குள் வெந்தான்் பாஸ்கரன்.

என்ன உடம்போ? ஆணுே, பெண்ணுே? பெற்றவள் பத்து மாதம் சுமந்து, ஐந்தாறு வருடங்கள் வளர்த்த கடனுடன் - எப்படி நீராகக் குமைகிருளோ? மலரைக் காட்டிமறைத்த மாதிரி இருக்கிறதே இறைவனின் திருவிளையாடல்.

இதெல்லாம் திருவிளையாடல் என்ரு கூற முடியும்? பிறத்தல், காத்தல், அழித்தல்' செய்யும் இறைவன் இது எதிலும் ஒட்டாத வளும். அவனை எதுவுமே அண்டுவதில்லை. எல்லாவற்றையும் கடந்து நிற்பவன்.

LDI லே மயங்கிக்கொண்டே வந்தது. கால தேவனின் தாளத்தில் ஒரு மாத்திரைகூடப் பிசகில்லாமல் பொழுதுகள் பிறந்து, வளர்ந்து தேய்ந்து வந்தன. அதில் இந்த மாலேப் பொழுது ஒன்று.

ராஜு வருவான் என்று எதிர்பார்த்தான்் பாஸ்க்ரன். அவன் வரவில்லை. அவனுடன் அவன் மகளையும் எதிர் நோக்கியிருந்தவனுக் குப் பெருத்த ஏமாற்றம் தான்்.

சின்னஞ்சிறிய உருவம்ாக இருந்தாலும், அன்பில் பெரிதாக இருந்தது அந்தக்குழந்தை. ஏளுே இன்று அவனுக்கு அந்தக் குழந்தை யைப் பார்த்தால் ஆறு த ல் ஏற்படும்

போல் இருந்தது. படுக்கையில் அந்தப்புறம் சாய்ந்து வராந்தா வழியாக மக்கள் கூட்டம் வழிந்தோடும் நெடுஞ்சாலையைப் பார்த்தான்் பாஸ்கரன். எண்ணற்ற கார்கள், வண்டிகள். சினிமா விளம்பரங்கள், சாரி சாரியாக ஆண் களும், பெண்களும், குழந்தைகளும் ஏதோ நம்பிக்கையின் பேரில் விரைந்து சென்று கொண்டிருந்தார்கள். 独

ராஜுவையும், குழந்தையையும் மட்டும் காளுேம். ஆஸ்பத்திரி விளக்குகள் எரிந்தன. வழக்கம் போல மருந்து, விசாரணை, உணவு, அன்றையப் பொழுது தேய்ந்து விட்டது.

பாஸ்கரன் எப்படியோ நடு இரவில், அவன் விழித்த போது தற் சயல்ாக அவன் பார் ைவ ஆற்றின் பக்கம் சென்றது.

புதிய மண் மேட்டின் அடியில் யார் பெற்ற செல்வமோ மீளாத் துாக்கத்தில் துயின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்். நேற்று வரை பெற்றவர்களுக்குச் செல்வமாக இருந் தது இன்று மண்ணுடன் இரண்டறக் கலந்து உல்கம் ப்ொய் என்பதற்குச் சான்று கூறியது. "ராஜு ஏன் வரவில்லை? ஒரு தினமாவது தவற மாட்டானே! விடை தெரியவில்லை.

காலே வந்ததையும், பகல் வளர்ந்ததையும், மாலே வரப் போவதையும் கடிகாரம் தவரு மல் காட்டிக் கொண்டு வந்தது. அன்றும் ராஜு வரவில்லை.

  • ராஜூ இன்னும் ஏன் வரவில்லை? வராமல் இருக்க மாட்டானே! அன்றும் பொழுது போப் விட்டது.

'இன்று கண்டிப்பாக ராஜு வருவான்." நம்பிக்கை ஒளி வீசப் பாஸ்கரன் மாலைப் பொழுதை எதிர்நோக்கி யிருந்தான்்.

ஆனல், அன்று ராஜு பகலிலேயே வந் தான்்: வறுங் கையோடு, அவன் கையைப் பிடித்து வந்து மழலை மிழற்றும் அந்தச் செல் வம் எங்கே? ராஜூவின் முகத்தில் வழக்கமாகக் காணப்படும் மல்ர்ச்சி, தெம்பு எதுவும் இல்லை. கண்களில் வடிந்த துயரமும் முகமெங்கும் தாடியும் மீசையுமாக ராஜூ ஒரு நாளும் அப்படி யிருந்ததில்லை. நடை உடை பாவனை களில் டிரிம் ஆக இருக்க விரும்புகிறவன்.

என்ன பாஸ்கர்! எப்படி யிருக்கிருய்?’’ குரல் உடைந்து கரகரப்பாக வெளிவந்தது.

'என்னவோ இருக்கிறேன். நீ ஏன் இரண்டு நாட்களாக வரவில்லை ராஜு? குழந்தை எங்கே?' o

சவுக்கின் நுனியால் குரூரமாகச் சொடுக்கி விட்ட்ாற் ப்ோல் குழந்தை எங்கே?' என்கிற விஞ ராஜூவின் உள்ளத்தில் சுரீர் என்று வேதனையை எழுப்பி, 'பாஸ்கர்! பாஸ்கர்! குழந்தை எங்கே? நீதான்் சொல்லேன்! என் கண்மணி சாரு எங்கே? தெரியவில்லை பாஸ் கர்... அவள் போய் விட்டாள் பாஸ்கர்...' என்று குமுறிக் கதறினன் ராஜு, கட்டில் வளைவைப் பார்த்துக் கொண்டு.

சற்றுத் தள்ளியிருந்த நோயாளிகள்கூட 'த்சொ' த்சொ' என்று அனுதாபக் குரல் எழுப்பினர்.

பாஸ்கரன் அடித்து வைத்த சிலையானன்.

துரங்கி விட்டான்.