பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தும் சிரிப்புடன் பொம்மையை அணைத் துப் பிடித்த சாரு அவனைப் பார்த்து, 'மாமா நீ எப்படி இருக்கே?' என்று கேட்பது போல் இருந்தது.

ராஜூ ஒரு நிதான்த்துக்கு வரச் சில நிமிஷங்கள் ஆயின.

பிறகு வக்கணையாகக் கூறினன். சாருவும் அவனும் ஆபீசுக்கும் பள்ளிக்கும் ஒன்ருகத் தான்் கிளம்பினர். குழந்தை பின்னுடிதான்் வருகிருளே என்று அச்ட்டையாக முன்னே போய்க் கொண்டிருந்தான்்.

எதிரும் புதிருமாக இரண்டு லாரிகள் வந் தன. மோதிக் கொண்டன. பின்னல்?

திரும்பிப் பார்த்த ராஜூவின் செவிகளில் "பிரேக்"கின் கிரீச்சிட்ட ஒலிகளும் பல குரல் களின் கத்தலும் ஒரே சமயத்தில் வந்து மோதின.

மலர்ந்த மலராய்ச் சற்று முன் காற்றிலே அசைந்த் அந்தப் புது மலர் ஒரு_நொடியில் நடுத் தெருவில் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தது.

பாஸ்கரனுக்கு மூன்று நாட்களுக்கு முன் ல்ை ஆற்றங் கரையில் கண்ட நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன.

நண்பர்கள் ஒருவரை யொருவர் ஏக்கத் துடன் பார்த்துக் கொண்டார்கள். ராஜு தன்னை நன்ருகச் சமாளித்துக் கொண்டு குரல் அடைக்கப் பேசின்ை. H

'பாஸ்கர்! வீட்டிலே எனக்கு இருப்புக் கொள்ள வில்லை. எங்கு போனலும் எதைப் பார்த்தாலும் சாருவின் நினைவு என்னை நிலை கொள்ளாமல் அடித்துக் கொண்டே இருந் தது. திடீரென்று உன் நினைவு வந்தது. நீ எப்படி இருக்கிருயோ என்று பார்த்துப் போக வந்தேன்....'

கையை விட்டு மறைந்த பொருளின் நினைவு மனத்தை அழுத்திலுைம் கண்ணெதிரே காணும் பொருளின் வாழ்வைக் கவனித்துப் போக வந்திருக்கும் ராஜுவை நன்றியுடன் பார்த்தான்் பாஸ்கரன்.

ஆற்றங்கரையும் அந்தச் சமாதிகளும், அவன் மனத்தில் அருவருப்பை ஏற்படுத்தின. தோன்றுதலும், மறைதலும் காலத்தின் செயல்களாகப் பரிணமித்தாலும் உலகம் வாழ்ந்து கொண்டுதான்் இருக்கிறது. அந்த உலகம் நன்ருக வாழ வேண்டும்.

ராஜூவுக்கு உலக வாழ்க்கை மீது ஆசை பிறந்ததற்கு அடையாளமாக அவன் அங்கு வந்த நர்ஸை அழைத்தான்்.

'மிஸ்....எனக்கு வேறு இடத்தில் படுக்கை கொடுக்க முடியுமா?' என்று கேட்டான்.

'அதற்கு அவசியமில்லை மிஸ்டர். நாளைக் காலையில் உங்களை 'டிஸ்சார்ஜ் செய்யும்படி டாக்டர் பணித்திருக்கிரு.ர். உங்களுக்கு உடம்பு நன்ருகக் குணமாகி விட்டது.'

நர்ஸ் புன்சிரிப்புடன் உயிர்த் துடிப்புடன் நடந்து கொண்டிருந்தாள்.