பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் போய்விட்டார்.

'அப்படியே உனக்கும் புடவை வரும் டி உண்டு. உன் பாடு தேவலை, பாட்டி ஒன்று. அத்தை ஒன்று என்று ஏகப் பட்ட வரும்படி!"

இவருக்கு ஏன் ப்படிக் குமைச்சல் பீறிக் கொண்டு வரவேண்டும்? பாட்டி வருகிருள் என்றால் இவருக்கு வயிற் றெரிச்சல். இவரை நர்ன் சரியாகக் கவ னிக்க மாட்டேனும். பாட்டியும் பேத்தி யும் ஓயாமல் பல விஷயங்களை அலசித் தீர்ப்போமாம். +.

'இரவும் பகலும் நீங்கள் ஓயாமல் என்ன பேசுவீர்கள்?' என்று கேட்டார்.

'இதெல்லாம் யாருக்கு நினைவிருக்

கிறது? பேசி முடித்ததும் மறந்து விடுகிறது.'

r = ఇట్జాజ్ఞ தக்காரி நீ-சொல்லா விட்டால் போயேன்.' s

அப்புறம் மனுஷன் நாலைந்து நாட் களுக்கு என்னுடன் பேசவில்லை.

என் எதிரே ஒவ்வொரு நாளும் விடிந்து மடிந்து வந்தன. தேதித் தாள்கள் இன்னும் வேகமாக ஒட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

பாட்டி வருகிருள் என்கிற செய்தி என் நினைவில் எத்தனை எத்தனை ஆண்டு களைப் பின்னேக்கி ஒட விட்டன. இத பத்தின் ஆழத்தில் புதையுண்டு கிடந்த பால்ய நினைவுகளை நிழற் படம் போல் கண்டு ஆனந்திக்கும் வாய்ப்பை ஒரு கடிதம் ஏற்படுத்திவிட்டது.

அன்று இருபத்திரண்டாம் தேதி. விடிந்து எழுந்ததும் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு தேதித்தாளைப் பார்த்தேன். அதில் ருபத்தியொன்று இருந்தது. வேண்டுமென்றே இவர் என்னைப் பார்த்துச் சிரித்தவாறு தாளைக் கிழித்தெறிந்தார். நான் எதிர்நோக் கிய இருபத்திரண்டு என் கண்கள் முன்பாக மினுக்கி நின்றது.

மாலை ஆறு மணிக்குப் பம்பாய் எக்ஸ்பிரஸ் வருகிறது. வெந்நீர் போட வேண்டும்: சுடச்சுடச் சமைக்க

வேண்டும். விருந்தாளிகளை வரவேற் கும் முறையில் எல்லாமே ஒழுங்காக இருக்க வேண்டும்.

வேலைகளை முடித்துச் கொண்டு கூடத்தில் கடிகாரத்தை எட்டிப் பார்த்தேன். ஐந்தரை ஆகியிருந்தது.

இன்னும் குறைந்தது ஒன்றரை மணி

நோமாவது அவர்கள் வருவதற்கு ஆகலாம். நேரம் நெருங்க நெருங்க என்னுள்ளே ஒரு பரபரப்பு.

கணவர் 'சென்டிரலு'க்குப் போக டாக்சி அழைத்து வருவதாகச் சொல்லி யிருந்தார். தெருவில் டாக்சியும் வந்து நின்றது. நான் உடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்ததும், "தெருக் கோடி யில் சைக்கிளில் தந்திக்காரர் வரு கிருரே, யார் வீட்டுக்கோ ?' என்று தயங்கினேன்.

நேராக அவர் எங்கள் வீட்டுக்குத் தான்் வந்தார். கணவர் கையெழுத் திட்டு வாங்கித் தந்தியைப் பிரித்துப் படிக்கும்போது அவர் முகமும், கை களும் இலேசாகச் சிவந்து நடுங்கின.

"" стантgит?"" 'ஒன்றுமில்லை. உள்ளே போகலாம்.' ஒன்றுமில்லை என்கிற சொல்லி

னுள்ளே விரும்பத் தகாத ரகசியம் ஒளிந்திருக்குமோ என்னவோ?

"இங்கே வா இப்படி - தைரிய மாக இரு. நேற்று பகல் உன் பாட்டி மாரடைப்பால் காலமாகி விட்டாள்.'" "'என்ன? என்ன?' தந்தியை நடுங் பம் என் விரல்களால் பிரித்தபடி கட்டு ஊடுருவிப் பார்த்தேன். தவ ருக இருக்குமோ, வேறு யாருக்கா வது வந்த தந்தியோ என்கிற நப் பாசை எனக்கு. காகிதத்தில் இருந்த நாலு வார்த்தைகளுக்கு இடையே அதே தாழம்பூ மேனியும், படிப்படியான நாைத்த கூந்தலும், எடுப்பான நாசி யும், கண்டிப்பும் குழைவும் தோன்றும் கண்களும்-சில நாளாக நனவிலே பூத்த அந்த இன்ப நினைவுக்குள் இத்துன்ப நினைவு கரைந்து கண்கள் குளமாயின.