பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் மங்கம்மாவின் கணவன் பொன்னன் போக்கே அலாதியாக மாறி விட்டது. சரிவர அவன் அவளிடம் துட்டுக் கொடுப்பதில்லே. 'நாலு இடம் சுத்தும் ஆம்பிள்ளே. அதை நாம கண்டிக்க முடியுமா? ஏதோ இந்த-மட்டும் என்னை வச்சுக் காப்பத்துதே. அது போதும்" என்பாள் அவள். அவள் குரலில் நன்றி பொங்கி வழியும். கண்களில் கண்ணிரின் கரை கட்டும். இரண்டு நாட்களாக மங்கம்மாவுக்கு அரை வயிற்றுக்குக் கூடப் போதவில்லை. அத் துடன் அவள் பிரசவித்து மூன்று மாதங்கள்

முழுசாக ஆகவில்லை. உடலில், உள்ளத்தில் ஒரே சோர்வு.

கஞ்சி கொதித்துக் கொதித்து அடங்கியது. அதை இறக்கி வைத்து விட்டு ஒரு மொடா வில் தண்ணிரை நிரப்பி அடுப்பின் மேல் வைத்தாள். ஆம்பிள்ளே வந்தால் உடம் புக்கு ஊற்றிக் கொள்ளச் சுடு தண்ணி கேட்பான். ஆனல் பானையை அடுப்பின் மீது ஏற்றும் போது சற்று ஆத்திரத்துடன் நக்கென்று

ான வைத்தாள. நலல வேளே! பானே நல்ல பழசு. விரிசல் காணவில்லை. வாழ்க் கையில் அடிபட்டுத் தேறிய திண்மையோடு பள ப_ள வென்று கரியுடன் அடுப்பின் மீது ஒய்யாரமாக உட் கார்ந்து கொண்டது.

துளிக் குழந்தை முனக ஆரம்பித்தது. மங்கம்மா குழந்தையை எடுத்து வந்து உட்கார்ந்து பாலு ட் ட ஆரம்பித்தாள். அதற்கு நல்ல பசி. தன் வலிமை யைத் திரட்டி அன்னையை வாட்டி வதைத்தது அந்தச் கெ. மங்கம்மா உணர்ச்சி யற்றவளாகக் குழந்தையின் த லே ம யி ரைக் கோதிக் |கோதிப் பேன் பார்க்க ஆரம் பித்தாள். வாழ்க்கையின் வட்சியமெல்லாம் அ நீ தி நி கழ்ச்சி யில் அடங்கியது போல் வெகு கவனமாக சிேல்க் கூட விழுங்காமல்

கையில் தட்டுப்பட்ட பேன்களைச் சொடுக்

இக் கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந் தாள் அவள். பக்கத்திலே படுத்திருந்து பெரிய பெண் தூக்கம், கலந்து விழித்துக்

கொண்டது.

யம்ம்ோவ்!..... தண்ணி ....' என்று கேட்டு முனகியது. "யம்மோவ் அதைக் காதில் வாங்கவில்லை. "ஆமாம். இதுக்

கென்ன வேலை என்கிற அலட்சியம் அவள் பார்வையில் நிழலாடியது. அதுவும் அவள் பெற்ற செல்வம்தான்். ஆனால், இன்று அவளுக்கே பாரமாக இருந்தது. கடந்த மூன்று நாட்களாக அதற்கு உடம்பு சரியில்லே. என்னவோ ஜூரம், அந்த ஜுரத்துக்கு அது

து என்று பெயரிட்டு அழைத்து. ஊசி

பாடப் பெரிய வைத்தியர்கள் யாரும் அந்தப் பெண்னைப் பார்க்கவும் இல்லை. இவளும் அதை வைத்தியரிடம் அழைத்துப் போய்க் காட்டவில்லை. சுக்குத் தண்ணி. சுடுதண்ணி,

76

ம. பன் இவைதான்் அந்தக காய்ச்சலுக்கு

மருந்தாகவும், "டையட்"டாகவும் விளங்கின. "யம்ம்ோல்.....' என்று தன் குரலே

உயர்த்திக் கூப்பிட்டது மறுபடியும்.

"'என்னுடி களுதை சும்மா ஏங் கழுத்தை

அறுக்கிறே?...." என்று எரிந்து விழுந்தாள் மங்கம்ப . i.

"யம்மோவ்! சுடு தண்ணி..." என்று பரிதாபமாகத் தாயைப் பார்த்தவாறு முன கியது அந்தப் பெண். *

'துரித்திரம் பிடிச்சவ...' என்று அலுத்

துக் கொண்டே அடுப்பின் மீது காய்ந்து கொண்டிருந்த பானையிலிருந்து 'சுடு தண்ணி' யைத் தகரக் குவளையில் மொண்டு வந்து நக்கென்று அதன் முன்னுல் வைத்தாள் மங் கம்மாள். 'தன் தாய் ஏணிப்படி தன்ஃன்க் கரித்துக் கொட்ட வேண்டும்? அதற்கே எல். வள்வு யோசித்தும் புரிபடவில்லை. கைகள் நடுங்க் மெல்ல எழுந்து உட்கார்ந்து சுடு தண்ணியை மடக் மடக்' கென்று குடித்து விட்டு அப் படியே சாய்ந்து படுத்துக் கொண்டது. அப்படியே யோசிக்கவும் ஆரம்பித்தது. சிந்திக்கத் தொட ங் கி ய வுடன் அதன் சின்னஞ் சிறு மூளைக்கும் பல விஷயங்கள் விளங்க ஆரம்பித் தன். கடந்த நாவேந்து மாதங்க ளாக அந்தப் பெண் அடிக்

கடி நோயில் விழுந்து, குடும்பத்துக்கு எந்தவித மான உதவியும் செய்ய

முடியாத நிலையில் இருக் கவே, தாய்க்கும் பாரமாகி விட்ட உண்மை புலப் பட்டது.

அம்மா வெட்டிச் சோறு போடுகிருள். ஆ க வே. அலுத்துக் கொள்கிருள். குழி விழுந்த கண்களிலிருந்து பால பொல வென்று கண்ணிர் வழிய வானத்தை அண்ணுந்து பார் த் துப் பெ ரு மூ ச் செறிந்தி வாறு படுத்துக் கிடந்தது அது. சென்னை நகரின் இரவுதான்் எவ்வளவு மனேகரமாக இருக்கிற்து: 'வண்ண விண்ண்

விளக்குகள் எல்லாம் குபிரென்று எரிய, நெடுஞ் சாலைகளில் எத்தனை நாட்கள் கையேந்திப் பாட்டுப் பாடி நயா பைசாக்

களைக் கொண்டு வந்து கொட்டியிருக்கிறது அது? கணிரென்று. "பாலும், பழமும் கைகளில் ஏந்தி' என்று அது பாட ஆரம்பித்து விட்டால் மூர் மார்க்கெட் வாசலில் நெரியும் கூட்டத்தில் எளிதாக ஐம்பது புதுக்காசுகளே ஒரு மணி நேரத்தில் சம்பாதித்து விடும். போவிஸ்காரரின் எச்சரிக்கையைக் கூட ம. யாமல் அந்தப் பக்கத்திலிருந்து எதிர்ச் சாரிக்குத் தாவி ஓடி, பூங்கா ரயில் நிலையத் தின் மாடிப் படிகளில் குதித்து ஏறி அம்மா விடம் காசுகளைக் கொடுத்து விட்டுப் பெரு மிதத்தால் பூரித்து நிமிர்ந்து நிற்குமே!

'அடியெங்கண்னு ! உங்கப்பனும் இருக் கானே. உதவாக்கரை. நாளேக்கு இரண்