பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டணுவுக்குக்கூட வக்கில்லையே' னுடைய கன்னத்தை நெரித்து, சுற்றுவாளே அவள் தாய்?

"சாமி! என்ன எப்படியாவது காப்பாத்திக் கொடு சாமி. நான் ஒடியாடி எங்கம்மாவை, தங்கச்சியைக் காப்பாத்தி விடறேன்' என்று

என்று அத திருஷ்டி

மனத்துக்குள் சொல்லிக் கொண்டே கை யெடுத்துக் கும்பிட்டது. அது.

"என்னும் செய்ய்றே: கும்பிடு கிம்பிடு

எல்லாம் பல்ாமக்கிதே' என்று எரிந்து விழுந் தாள் மங்கம்மா.

வெளக்கேத்திப் போச்சே.... சாமி கும் பிடறேன். யம்மோவ்' என்று தினமாகக் கூறியது அது.

'கும்பிடுவே, கும்பிடுவே. குந்திக்கினே சோறு திங்கறே பாரு. கும்பிடமாட்டே நீ?" மடியில் இருந்த குழந்தை கால்களையும், கைகளையும் ஆட்டி ஆட்டித் தாயைப் பார்த் துச் சிரித்தது.

எங்கண்ணு! ராசாத்தி! நீ அந்தப் பீடை யைப் போல் சீக்காளியா இருக்க மாட்டே இல்லே? ஆத்தாளுக்குச் சம்பாறிச்சுப் போடு வியா கண்ணு?' என்று கேட்டாள் மங்கம்மா. குனிந்து அதை முத்தமிட்டவாறு. வயிறு நிறைந்திருந்த மகிழ்ச்சியில் குழந்தை அவள் முகத்தைத் தன் சிறு கரங்களால் எட்டிப் பிடிக்க முனேந்தது. தாய் அதை அள்ளி அனைத்து முத்தமிட, அது சிரிக்க அங்கே தாயன் பின் ஒரு பகுதியை நன்ருகக் காண முடிந்தது.

வருங்காலத்தில் தன் வயிற்றுப்பாட்டை அந்தக் குழந்தையிடம் நம்பி ஒப்படைத்து குது கலம் மங்கம்மாவின் முகத்தில் தளும்பி வழிந்தது.

வெளியே தன்ருக இருட்டி விட்டது. வழக் கம் போல் பொன்னன் அன்றும் வரவில்லை. அவன் வருவான் என்கிற நம்பிக்கையும் அவ ளுக்கு இல்லை. காய்ச்சி வைத்திருந்த கஞ்சியை உப்பிட் டுக் கலக்கிப் பருகிகு ன் மங்கம்மாள். மிகுதியைத் தகரக் குவளையில் ஊற்றிப்பெரிய பெண்ணிடம் நகர்த்தினுள்,

பம்மோவ் ஜூரம் விட்டிருச்சி. சில் லுன்னு தண்ணியா உடுது ஒடம்பெல்லாம். பசிக்குது - " என்றது. அது.

'அதான்் கஞ்சி ஊத்தி வைச்சிருக்கே. குடிச் சுத் தொலையேன். ஜூரம் விட்டா பேதிவரும். போடி களுதை-' அலட்சியமாகக் கூறிவிட்டு வெற்றில போட ஆரம்பித்தான்் அவள்.

ஜெயில் சுவர் ஒரம் கூப்பிடு துாரத்தில் கிழவி ஒருத்தி இந்த நிகழ்ச்சியை இரண்டு நாட்களாக அலுக்காமல் கவனித்து வந்தாள். பம்மென்று பஞ்சு போல் வெளுத்திருந்து கூந்தலத் தட்டி முடிந்தவாறு மங்கம்மாளே நோக்கி வந்தாள் அவள். ==

'வா .... ஆயா .... சாப்பிட்டாயா?" என்று விசாரித்தாள் மங்கம்மாள்.

"ஆச்சு ஆமா ... வம் வீட்டுக்கு வர தே இல்லையா?"

" "வராய என்ன? எப்பவாச்சும் வானே?' '

'அப்ப, நீ சாப்பாட்டுக்கு என்ன செய் யறே?"

'அதையேன் கேக்குறே போ. பாதி நாளைக் கும் பட்டினிதான்் ஆயா. கைக்குழந்தை வேறு. சீக்காளிப் பொண்ணு வேறு....'

புருசன்

H. H. H. H.

வரு

அதுவும் ஒம் பொண்ணு தான்ே? நீ பெத்தது தான்?'

'ஏன் ஆயா அப்படிக் கேக்குறே? அதுவும் எம் பொண் னு தான்். அது இருந்தும் ஒண்னு தான்் . . . . "'

ஆயா நெருங்கி வந்து உட்கார்ந்தாள். குரலை இறக்கி ரகசியம் பேச ஆரம்பித்தாள்.

'நம்ப் தொழிலு முன்னைப் போல் இல்லேடி மங்கம்மா. பாட்டி வலுத்துப் போச்சு. ஒவ்வொருத்தரும் நல்ல குழந்தையா மூணு நாலு வச்சுக்கிட்டுப் பொழைப்பை நடத்த ருங்க. நீயான இந்தச் சிக்காளிப் பொண்ணை வச்சுக்கிட்டு ..... '

கிழவி மங்கம்மாவின் மடியில் கிடந்த குழந் தையை உற்றுக் கவனித்தாள்.

'இது ஒண்ணே நீ நல்லா வளர்த்தாப் போதுமே. அது ஒண்ணு எதுக்குன்னு கேக்கு றேன். சும்மா அதை எங்காச்சும் தள்ளி விடேன் - '

மங்கம்மாள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

'சூளையிலே ஒரு ஆளு .... நம்பளவன் தான்்னு வச்சுக்கோயேன் - இருக்கான்.

క్క్లో

o

புள்ளேங்களை

நல்லபடியா பழக்கி அனுப்பு வான். பாட்டா. ஆட்டமா. வவிப்பா, ஊமை போலவா. எது வேனுமானுலும்

கத்துக் கொடுப்பான். நல்லா சம்பாதிக்கும். அது பாட்டுக்குப் பொழிச்சுக்கும்

மங்கம்மாள் பெரிய பெண்ணேத் திரும்பிப் பார்த் தாள். ஜாரம் நன்ருக இறங்கிவிடவே, கஞ்சி குடித்து விட்டு அது நிம்மதியாகத் துங்கிக் கொண்டிருந்தது. * *

இன்றையப் பொழுதுக்கு நொய்க்கஞ்சி விள் பசியைத் தனித்து விட்டது. நாளேக்கு? நாளே என்கிற நினைப்பே அவளுக்கு ஒரு பிரச்னையாகவும், வேதனையாகவும் இருந்தது. வயிற்றில் வேண்டுமானுல் சுமந்து விடலாம் பேர்விருத்தது. அது மண்ணில் விழுந்து விட் டாலேர் அவளுக்குப் பாடாகத்தான்் அமைந் திருந்தது. பிச்சைக்காரிக்குப் பிறந்துவிட்டு, படுக்கையில் கிடந்தால் முடியுமா?

'நீ என்ன சொல்றே ஆயா? குழந்தையை யாராச்சும் கொடுப்பாங்களா - ?"

தே! சும்மாவா கொடுக்கச் சொல்றேன்? அஞ்சோ, பத்தோ வாங்கிக்க -