பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊ பழைமையானது. ஊரில் வசிக்கும் அந்த இரண்டு கிழவிகளும் பழைமையிலும் பழைமையானவர்கள். ஜனரிவிாக்கம் கோவில் பழசுதான்். கடவுள் பழைமையானவர் என்ருே புதுமையானவர் என்ருே வரையறுத்துச் சொல்ல முடியாது. பழைமையான கோயிலுக்குள் புதுமை யான நைலான் (ஜரிகை போட்டது) பாவாடை அணிந்து பழைமைக்குச் சான்ருகப் புதும்ைக்கு வழிகாட்டியாக அம்பிகை காட்சி தந்து கொண் டிருந்தாள். --- 鄙

ஊரில் மேற்கிலிருந்து கிழக்கே ஒடும் ஆறும் பழசுதான்். அதன் அணைக்கட்டும், பாலமும் புதுக. பழைய ஆற்றங்கரையில் இருந்த அமைதி, எளிமை மறைந்து போய்ப் புதிய பாலத்தின் மீது அடித்சூடி டிரான்ஸிஸ்டரின் ஒலியும் நடையா இது நடையர்' என்று நம் இள

வல்கள் இளம் பெண்களைப் பார்த்துப் பாடுவதும் முற்றிலும் புதுமை என்றுதான்் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அந்த இரண்டு கிழவிகள் மட்டும் காலத்தால் ஏற்பட்ட மாறுதல் களில் அடித்துக்கொண்டு போகாமல், அன்றுபோல் இன்றுவரை அள்ளிச் சொருகிய முடிச்சும், தொங்கும் கம்மல்களும், காலணுக் குங்குமமும், மஞ்சள் பூச்சுமாகத் துலங்கி வருபவர்கள். கிழவிகளுக்கு என்ன புதுமை வேண்டியிருக்கிறது என்கிறீர்களா? ஏன் வேண்டியிருக்காமல்? நாற்பது வயதான்வர்களைப் பார்த்தால் அவர்கள் வயதை அறிந்துகொள்ள முடி கிறதா? அஜந்தாக் கொண்டை யென்ன? சந்தனப் பவுடரின் மணமும், சருகுச் சேலையும் சுட்டிக் கொண்டு தங்கள் வயதில் பாதியைக் குறைத் துக் கொள்ள அவர்கள் படுகிற பாடு சொல்லத்தரமன்று. i. கிழவிகள் இரண்டு பேருமே ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். எதிர் எதிர் வீட்டைச் சேர்ந்தவர்கள். ஊரின் நடு மையத்தில் அமைந்திருந்த ஆலயத்தின் மகோன்னத காலத்தைப் பார்த்தவர்கள். நாலு கால ஜை யென்ன? தைப்பூசம், மாசி மகம், திருவாதிரை உற்சவங்களின் காலாகலங்களைக் கண்டு களித்தவர்கள். தினம் தவ்ருமல் ம்ாலே நேரங் களில் அந்தக் காலத்தில் இருவரும் கைகளில் எண்ணெய்க் கிண்ணங்க ளுடன் கோவிலில் ஆஜராகி விடுவார்கள். பிள்ளையார் சன்னிதி தொடங்கி நவக்கிரகங்கள் வரை இருவருமே ஒன்ருதச் சென்று வணங்கி வீடு திரும்புகிற வழக்கம்- இப்பொழுதும் கோவில் இருக்கிறது. அந்த நாட்களின் வழக்கங்கள் இல்லே. குருக்களுக்கு வரும்படி போதவில்லே யாம். எட்டுக் கோவில்களில் பூஜையாக வேண்டும். இங்க்ே சிவன் தலையில் தண்ணியை ஊற்றி விட்டு, அடுத்த தெரு விநாயகருக்குச் சதுர்த்தி அபிஷேகத்துக்கு ஓடிப் போய் விடுவார். இரவிலோ அடுத்த ஊர் ம்ாரி யம்மனுக்கு அலங்காரம் செய்தாக வேண்டும். பாவம், அவர்தான்் என்ன செய்ய முடியும்? குடும்பத்தைக் கட்டி மேய்த்தாக வேண்டாம்ா?

வழக்கம்போல் கிழவிகள் கோவிலுக்குப் புறப்பட்டார்கள். சுவாமி தரிசனம் முடிந்ததும் ஆற்ருேரமாக நடந்து ஆற்றங்கரை மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள். குமரிகள்தான்் உள்வப் போக வேண்டும் என்பதில்லே. கி.முவிகளாகிய இந்த லக்ஷ்மியும், சீதாவும் உலாவப் போக r Lif. தண்ணர் அதிகம் இல்லே. மழையும், பனியும் போய்חוהי இளவேனில் ஆரம்பமாகி யிருந்தது. படிகளில் ப்ொங்கி ஓடிய நீர் இப்