பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=சியாம! நம்ப ரவியின் உபநயனத் துக்கு அருண் வருகிருளும். கடிதம் போட் டிருக்கான். படிச்சுப் பார்' என்றதும்தான்் அவள் தன் நினைவு அலைகளிலிருந்து விடுபட் டாள். "அருண் அவனைப் பார்த்து ஆறு ஏழு வருஷங்கள் ஆகியிருக்குமோ? இருக்க லாம். ஆனால், அப்படி இருக்காது என்று அவள் உள் மனம் சொல்லியது. எப்போதுமே அருணேப் பற்றி அவள் நினைத்தே வந்தாள். வளைந்து நிமிர்ந்த அந்தக் கூரிய, நாசி. நெற் நிக்கு மேலே படிய வாரிவிடப்பட்ட கேசம். கன்னத்து ஒரங்களில் இறங்கி வரும் கிருதா. விஷமத்தனம் கொப்பளிக்கும் பார்வை.

அந்த அருண் சியாமியோடு பழகியபோது சியாமி இப்படி இந்த உருவத்தில் இல்லை. தளதளவென்று வளர்ந்து வரும் வாழைக் கன்றைப் போல் அப்படி ஒரு வளர்த்தி. புசுபுகவென்று சிலிர்ப்பிக் கொண்டிருக்கும் குழஃ வாரி ரிப்பன் போட்டு வெறுமனே முடிந்திருப்பாள். அழகு சொட்டும் களை

யான முகத்தில் அஃப் பாயும் விழிகள். நறுக் நறுக்கென்று பேசும் வக்கை வேறு. எங்கோ நாகபுரியிலிருக்கும் அருணும் சியாமியும் நண்பர்கள் ஆனதே பெரிய கதை. அந்த வருஷம் பத்தாவது பரீட்சை எழுதி முடித்துவிட்டுச் சியாமி தன் அத்தையின் வீட்டுக்கு நாகபுரிக் குக் கிளம்பினுள். சென்னையை விட்டே அவள் எங்கும் போனதில்லை. அகன்ற நதிகள். உயர்ந்த மரங்கள், மலைகள் இவைகளைத் தாண்டி ரயில் விரைந்தபோது கண் இமைக் காமல் ஜன்னல் கம்பிகளின் மீது முகம் புதைத்துப் பார்த்துக் கொண்டே சென்ருள்.

அப்படியே ஜன்னல் கம்பிகளின் மீது முகம் புதைத்துத் துரங்கியும் போனுள். ரயில் நாக புரியை அடைந்தது. ரயில் நிலையத்தில் அருண் வந்திருந்தான்். மிக எளிமையாக, வனப்போடு காணப்பட்டான் அவன். அத்தை யின் பெண் ராது ரயிலிலிருந்து தாவி அவன் தோள்களில் உட்கார்ந்து கொண்டுவிட்டாள்.

அருண்! வீட்டிலே எல்லா ஏற்பாடுகளும் பண்ணி விட்டாயா? இவ அப்பா ஊரில் இல்லையாமே. 'காம்ப்' எப்போ முடியப்

போறது? இந்த வருஷம் இங்கே வெய்யில் அத்தை கேட்ட கேள்விகளுக்

அதிகமாமே?'