பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெல்லாம் அமைதியாகப் பதில் அளித்தான்் அருண். இடையிடையே சியாமியை அவன்

கவனித்தான்். என்ன இருந்தாலும் தென் னிந்தியப் பெண்களுக்கு முகத்திலே ஒர்

அலாதி வசீகரம் இருக்கத்தான்் செய்கிறது என்று அவன் நினைத்திருக்க வேண்டும். அந்தப் புன்னகை அப்படி அவன் நினைப்பதை உணர்த்திக் கொண்டிருந்தது. 'டாக்கியில் வீட்டுக்குப் போகும்போது அத்தை அருணேப் பார்த்து, " அருண் ! இவள்தான்் என் அண்ணு பெண் சியாமி!' என்று அறிமுகம் செய்து வைத்து, 'ஏண்டாப்பா. உன்னே இவளுக்கு யார் என்று சொல்வது ?' என்று

தி டட .

எதை வேண்டுமானுலும் சொல்லுங்க ளேன். ஆண்டாள். அடிமை, சேவகன் என்று எது வேண்டுமானுலும்,' அருண் விஷமத் தனமாகச் சிரித்தான்். அத்தையும் சிரித் தாள். 'நல்ல அடிமை. நல்ல சேவகன். இவன் உன் அத்திம்பேரிடம் வேலே. பார்க்கிருன். நம்ப பக்கம்தான்ும். ஆணுல், அப்பா அம்மா உறவுமுறை யாரும் இல்லாதவன்....'

சியாமி அவனே மிகுந்த அனுதாபத்துடன் பார்த்தாள். -

'ஓ ! நோ. . . நோ. . . அப்பா அம்மா இல்லையா? நீங்களும் பைாரும் எனக்குப் பின்னே என்ன உறவாம்?' என்று கேட்டுச் சிரித்தான்் அவன்.

சியாமியும் அவனும் மனம் விட்டுப் பழகி"

ஞர்கள். பேசினர்கள். அந்தத் துய நட்பில் எவ்விதக் களங்கமும் இல்லே. சியாமி திரும்ப வும் சென்னைக்குக் கிளம்பியபோது அருண் ஏக்கத்துடன் விடை கொடுத்தான்் அவளுக்கு. 'சியாமி! ஊருக்குப் போனதும் என் மறந்துவிடாதே. ஒருவேளே உனக்குக் கல் யாணம் ஆகிக் கண்வன் விட்டுக்குப் போன லும் என்னை மறந்து விடாதே..' என்று கேட்டுக் கொண்டான் அருண். சியாமி நீர் நிறைந்த விழிகளுடன் தலையசைத்து அவ னிடம் விடைபெற்றுக் கொண்டாள்.

நாகபுரியிலிருந்து வந்த சியாமியின் வாழ்க்

கையில் திடீரென்று மாறுதல் ஏற்பட்டது. பள்ளியில் அவசரமாக மாடிப் படிகளில் ஏறியவன் தடுக்கி விழுந்து மண்டையில் பலமாக அடிபட்டு ரத்த சேதத்தினுல்

சியாமியின் உடல் நலம் பெரிதும் பாதிக்கப் பட்டது. வெண்டைப் பிஞ்சுகளைப் போல் நீண்டிருந்த அவள் விரல்கள் குறுகிப் போய். கால்கள் நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்தாள் சியாழி. பல பிரார்த்தனைகள், வைத்தியம் என்று அவள் பெற்ருேர் அலேந்த அலேச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. இடையில் அவள் அத்தை வந்து பார்த்து விட்டுப் போனுள். அவளிடம் அருணைப் பற்றிக் கேட் டிருக்கலாம். ஏதோ ஒன்று அவளைக் கேட்க விடாமல் தடுத்தது. அந்தச் சிரித்த முகம். கள்ளமற்ற பார்வை அவள் மனக் கண் முன்பு ஆறுதல்ாகத் தோன்றி மறையும். அத்தையே ஒரு நாள் பேச்சு_வாக்கில் சொன்னுள். "அருண்கூட ஊரில் இல்லை. விட்டிலே போட் டது போட்டபடி வந்து விட்டேன். சீக்கிரம் கிளிம்பனும்- என்று. அருண் எங்கே போயிருக்கான் அத்தை' என்று அவள் தினமாக ஒரு நாள் கேட்டே விட்டாள்.

பார்த்துக் காத்திருந்தன,

'அவனுக்கு வேலே ஒசந்து.டில்லி லாயிடுத்து. நானே அவனைப் பார்: ஷத்துக்கு மேலாச்சு. ஆள் ரொம்ப போயிட்டானும்...'

அன் முழுதும் அவள் அருனேயே நி துக்கொண்டிருந்தாள்.

'அந்தப் பெண்ணுக்குத் திடீர் திடீர்னும் பிரமை வந்துடறது. யாரோடும் பேசறதே யில்லே...' என்று அவள் அம்மா அலுத்துக் கொண்டாள். நினேவின் அலைகளில் அமுங்கிப் போகும்போது அதன் சுகம் அந்த லயிப்பில் இருப்பவர்களுக்குத்தான்ே புரியும்? ,

சியாமி சிரித்துக் கொண்டாள். எப்படியோ நவரக்கிழி அது இது என்று மலையாள வைத் தியத்துடன் பூரீ குருவாயூரப்பனுக்குத்_துலா பாரம் கொடுத்து விட்டு வந்த பிறகு சியாமி மெதுவாக எழுந்து நடமாட ஆரம்பித்தாள். இருந்தாலும் அந்த அழகிய கைகள்? அவை

மாத்த வரு

பரபரவென்று கோலம் புனைந்த அழிகும், மலர் தொடுத்த வக்கனேயும் அவளுக்கு நினவின் அலேகளாகப் போயின. சூம்பிப் போயிருந்த அந்தக் கரங்கள் இப்போது

சிறு சிறு வேலைகளைச் செய்து கொண்டுதான்் இருந்தன. ஒட்டமும், துள்ளலும் நிரம்பிய கால்கள் மெதுவாக நடந்தன. எதிலுமே ஒரு தேக்கம். கண்கள் எங்கோ, எதையோ எதிர்

தாயிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத ஓர் ஏக்கம் அவள் இதயத்தில் குடிபுகுந்தது, ஒரு நாள் அப்பாவும் அம்மாவும். பேசிக் கொண்டிருந்தார்கள். 'சியாமி இருக்கிற இருப்பில் அவள் கல்யாணத்தைப் பற்றி யோச னேயே பண்ண முடியாது. நம்ப ராஜாவுக் காவது பூணுால் போட்டுவிடலாமே? அவனும் வளர்ந்துட்டான். இப்பப் போட்டால்தான்் அழகா யிருக்கும்...' என்ருள் அம்மா,

பெற்ருேருக்குத் தான்் ஒரு பிரச்னையாக இருப்பதை அப்போதுதான்் உணர்ந்தாள் சியாமி. அந்த நினைவில் அவள் லயித்திருந்த போதுதான்் அவள் தாயார் அருண் வரப் போவதைக் குறித்து அவளிடம் தெரிவித் தாள்.

உபநயனம் சிறப்பாக நடைபெற்றது. உற வினர்கள், அவர்கள் வீட்டு வாலிபர்கள் எல்லோருமே அவளை ஏதோ ஒரு விந்தைப் பொருளைப் பார்ப்பதைப் போலப் பார்த் தார்கள். அந்தப் பார்வைகள்? அவற்றி னின்று விடுபட்டுச் சியாமி தனிமையைத் தேடி அலேந்தாள்.

. இகால்லப்புறத்திலே மற்றவர்களின் பார் விையைத் தாண்டி இருந்த மாமரத்து.நிழலில் அவள் சென்று அமர்ந்தபோது அங்கு ஏற் கெனவே அருண் வந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அவன்தான்் எப்படி மாறிவிட் டான்? அவனிடம் முன்பிருந்த எளிமை, மென்மை, இரக்கம், எல்லாம்தான்் மா றி விட்டன. மின்ரிதனிடம் நிலையாக எதுவுமே இருக்காது போலும் என்று அவள் நினைத்த விட்ன் ஒரு கணம் இந்த மனிதப் பிறவி யையே அவள் வெறுத்தாள். ஐந்தாறு வரு டங்களில் ஒருவன் இப்படி மாறி விட்டான் என்றால் அருணின் கையில் புகைந்துகொண் டிருந்த சிகரெட்டின் துணி சிவப்பாக மின்னி

யது. சியாமி! உன்குேடு பேச வேண்டும்.