பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதுவும் தனிமையில் பேச வேண்டும் என்று இரண்டு நாட்களாகக் காத்திருக்கிறேன்."

'பேசலாமே!" என்ருள் சியாமி. 'நீஇப்படியேதான்் இருக்கப் போகிருயா, என்ன?"

'பின்னே நான் பழையபடி எப்படி மாற முடியும் இந்த மட்டும் நான் இருப்பதே ஆண்டவனின் கருனே...' -

நானும் ரொம்ப மாறிவிட்டேன் சியாமி! நாகபுரியை விட்டுக் கிளம்பிய பின் எக்க சக்கமான மாறுதல். வாழ்க்கையின் ஏற்றத் தில் இருந்ததால்தான்் பள்ளத்தை நோக்கி என்னுல் சடுதியில் இறங்க முடிந்தது. உண் மையைச் சொல்கிறேன், கேட்டுக்கொள்... நான் குடிக்கக் கூடக் குடிப்பேன், சியாமி, ஒருவேளை எனக்கும் காலாகாலத்தில் கல் யாணமாகி என்னை நேசிக்கவும் ஒருத்தி வந்திருந்தால் இப்படி மாறியிருக்க மாட்

டனுே என்னவோ-' -

'அதனுல் என்ன அருண்! உலகத்தில் பரு வங்கள் மாறுவது போல் மனித வாழ்க்கை யில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. முன்பு நீ பார்த்த சியாமியா நான் இப்போது? மாறி விட்டேன் இல்லையா'

"ஆமாம். அந்தச் சியாமி எங்கே? அவள் என் உள்ளத்திலே நின்று என்ன்ே ஓயாமல் படுத்திய பாடெல்லாம் எங்கே: நீ மாறிவிட் டாப் சியாமி'

'அப்படியாளுல் இந்த இரண்டு மாநறது களும் ஒரு நன்மைக்காகத்தான்் ஏற்பட்டிரு வேண்டும்...'

அருண் சியாமியை ஆவலுடன் பார்த் தான்். அவள் குறிப்பிடும் அந்த நன்மையைப் பற்றி மேலும் என்ன சொல்லப் போகிருள்? அந்த நன்மை. அருண் அவளே ஆசை ததும்பப் பார்த்துக் கொண்டிருந்தான்்.

சியாமி மெளனமாகி விட்டாள். காற்றுக் கூட அங்கே மெளனமாகச் சியாமி பேசப் போவதைக் கேட்க நின்றிருந்தது. சில மணித் துளிகள் மெளனம் நீடித்தாலும் அவர்கள் இதயங்கள் பேசிக் கொண்டன. அருண் கீழே கிடந்த மாவிலைகளைக் கிள்ளிக்கொண் டிருந்தான்். பச்சைப் பசேல் என்று அவை சற்று முன் அடித்த காற்றினுல் கொத்துக் கொத்தாக விழுந்திருந்தன.

'மாவிலைக்கே தனி அழகு... கல்யாண வாசலாகட்டும், வேறு எந்த வைபவமாகட் டும், மாவிலைத் தோரணம் இல்லாமல் சிறப் புப் பெறுவதில்லை...' என்ருள் சியாமி.

"ஆமாம்... நம் கல்யாணத்துக்கு இந்த மரத்து மாவிலைகளை ஒடித்தே தோரணம் கட்டவேண்டும்...' அருண் இவ்விதம் கூறி விட்டுத் திடுக்கிட்டு அவளே ஏறிட்டுப் பார்த்தான்். ==

சலனமற்றிருந்த சியாமியின் முகத்தில்

விநாடியில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஆம், அந்தி வானத்துச் செம்மை அவள் முகத்தில் இறங்கியிருந்தது!