பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழியைப் பார்த்துக் கொண்டு போய்ச் சேரு கிரு கள் இதற்கு நாம் ஏன் கவகிப்பட வேண்டும்?' என்று உள்ளம் அவரைச் சாந்தப் படுத்தப் பார்த்தது.

சிற்றம்பலப் பண்டாரத்தின் மனக்கண் முன் அவர் தாயின் முகம் தெரிந்தது. அவர் வீட்டை விட்டுக் கிளப்புகிறபோது அந்த அம்மாள் இளமையோடுதான்் இருந்தார்கள். பசும் மஞ்சளைப் பூசி நெற்றியில் பட்ட வடிவ மாகக் குங்குமம் வைத்துக் கொண்டிருப் பார்கள். காதில் சிவப்புக் கல் தோடுகள். மூச்குச் திகள் பளிச்சென்று ஒளி வீசும். கழுத் தில் திருமாங்கல்யத்துடன், மூன்று வடம். பிரண்டைச் சங்கிலி பின்னிக் கொண்டு இருக்கும். சிரித்துச் சிரித்துப் பேசுவார்சள். குர்ல் மிகவும் மெதுவாகத் தான்் இருக்கும். கிருதி திகை உபவாசமும், கார்த்திகைச் சோம வாரமும் விரதம் இருப்பார்கள்.

சிற்றம்பலப் பண்டாரத்தின் உள் ள ம் அமைதி இல்லாமல் தவித் கது. என்ன செய் வது என்று தெரியாமல் திசைத்தார். எதிரே இருந்த நால்வரின் சிகிகளையும் பார்த்து மன்த்துக்கத் தெளிகைக் சொடுக கும்படி பிரார்த்தனை செய்தார். அப்பொழுது அருகே இருந்த கோயில் நந்தவனத்திலிருந்து தீன மான குரல் ஒன்று கேட்டது.

"அம்மாவ்...... என்று உருக்கமாக அரற். றியது ஒரு பசு. பசுவின் குரலைக் கேட்டுச் சிற்றம்ப்லப் பண்டாரம் துணில் சாத்தி யிருந்த கப்பை எடுத்துக் கொண்டு மாட்டை விரட்டுவதற்காக நந்தவனத்துக்குள் சென் ருர். செடிகள் எல்லாம் கப்புங்களைகளுமாக மலர்கள் குலுங்க நின்றிருந்தன. மாடு

மேய்ந்து விட்டால், கடவுளுக்கு மலர்கள் இல்லாமல் போய் விடுமே?

தோட்டத்துள் சிவலைப் பசு ஒன்று இங்கும் அங்கமாக அகலந்து கொண்டிருந்தது. கீழே மண் டிக் கிடந்த புல்கல அது மேயவில்லை. பசுவைக் கவனித்தார் பண்டர்ரம். தளதள வென்று வயிறு பருத்கிருந்தது. மடியின் கனம் தாங்க முடியாமல் பசு தவித்தது. அது சிசினப் பசு, அது தவிக்கும் தவிப்பைப் பார்த்துக் கொண்டே நின்ரு பண்டாரம். 'அம்மால்' என்று தீனமான குரலுடன் அது வானத்தை அண்ணுந்து பார்த்துக் கத்தியது. கீழே படுத்துப் புரண்டது. எழுந்தது. நடந் தது. மீண்டும் படுத்தது. மறு படியும் கத்தி யது. அவர் வியப்புடன் பார்த்துக் கொண் டிருந்த போது, பசு வின் கரிப்பத்திலிருந்து கன்று வெளிப்பட்டுக் கீழே விழுந்தது. பசு கண்களில் பெருகும் நீருடன் குதித்து எழுந் தது. கீழே கிடக்கும் தன் கன்றைப் பரிவோடு நக்கிக் கொடுத்தது. ஆசையுடன் முகர்ந்து பார்த்தது. உடம்பைச் சிவிர்த்துக் கொண்டு அதற்குப் பால் ஊட்டியது. பண்டாரம் பிரமித்துப் போப் தின் ருர்,

மிருகத்தின் தாய்மை உணர்ச்சியே இவ் வாரு ல்ை...?' பண்டாரத்தின் வாயிலிருந்து 'அம்மா' என்னும் ஒலி அவரை அறியாமல் வெளி வந்தது.

தன்னைப் பெற்ற தாயின் ஆசையை எப்படி யும் நிறைவேற்றித்தான்் தீர வேண்டும். அந்த மகத் தான் கடமைக்குத் தாம் தலே வணங்கித் கான் ஆகவேண்டும் என்று தீர் மானித்தவர் போல் பண்டாரம் தம் தாயைப் பார்க்க அந்த ஊரை விட்டுக் கிளம்பினர்.