பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

தாடியுடன் வருவான் ; అర్థి இடத் துக்கு மொட்டைத் தலையுடன் போவான் ; அதற்கடுத்த நாள் தொப்பியும் நிஜாரும் அணிந்து வருவான். அவனைப் போல நான் உருவத்தில் மாறிக் கொண்டிருக்க முடி யுமா?..."

- போலிஸ் வேண்டாம் ? இரவு நேரத் தில் வந்து குத்திப் போட்டால் என்ன பண்ணுவீர்கள் ?

" மனிதனுக்கு மரணம் என்பது அவன் வைக்கும் ஒவ்வோர் அடியிலும் பதுங்கிக் கொண்டுதான்் இருக்கிறது. அதற்காகப் பயந்து முடியுமா அப்பா? நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே. இருட்டுவதற்குள் தங்க மேட்டுக்குப் போய்விடலாம். மக்க ளின் அன்பு உள்ளத்துக்குமேல் கனன்று கொண்

டிருக்கும் பயத்தை, வெறியை, அறியா மைய என் அன்பு நீரால் அவித்துவிட முயல்கிறேன்."

' கொள்ளைக்காரன் கறுப்புச்சாமி தங்க மேட்டில் புகுந்து வீடுகளைச் சூறையாடி,

வைக்கோல் போர்களுக்குத் வைத்து, களஞ்சியங்களை உடைத்து... இப்படி எத் தனை அட்டுழியங்கள் சாமி? நீங்க தங்க

மேட்டுக்கா போlங்க ?' என்று கேட்டான்

அவன்.

" ஆமாம் : அங்கேதான்் போகிறேன்.

பாவம், நொ ந் து போயிருப்பவர்களைப்

பார்த்து ஆறுதல் கூறவேண்டும் என்று

போகிறேன்' என்றார் பரமசிவம்.

வழிப்போக்கன் தன் வழியே சென்ருன்.

Io 事 тфг

ப்பொழுது வானம் பார்த்த பூமியாகிய தங்கமேட்டுக் கிராமத்தைச் சுற்றிச் சுமார் எழுபது எண்பது மைல்கள் வரையில் மழை இல்லாமல் கிணறுகள் வரண்டு கிடந்தன. ஏரிகள் காய்ந்து வெடிப்புகளுடன் காட்சி அளித்தன. மக்கள் குடி தண்ணிருக்காக ஊரிலிருந்து பதினைந்து மைல்கள் தள்ளி இருந்த மலை அடிவாரத்துத் தாமரைக் குளத்தையும், சிறு ஊற்றுப் போல் குளத் தில் வந்து விழும் அருவியையுமே நம்பி இருந்தார்கள். வானத்தை நம்பி வயலை உழுது விதைத்து, கிணற்றில் இருந்த நீரை இறைத்துவிட்டு, வானத்தை அண்ணுந்து பார்த்து மக்கள் மனம் சலித்திருந்த சமயம் கொள்ளை க்காரன் கறுப்புச்சாமி திடீரென்று தோன்றி, களஞ்சியங்களில் இருந்த தான்் யங்களைச் சூறையாடி, இருக்கும் ரொக்கத் தையும் கொள்ளை அடித்துக் கொண்டு ப்ோஞன். அவன் கையில் மின்னிய கத் தியும், அவன் தோழர்களின் சாகசச் செயல் களும் மக்க அலற வைத்தன.

வெண்ணிறத் தாடியும், பட்டை பட்டை

யாகத் திருநீறும் அணிந்து வந்து அவன்

அமுதசுரபி

செய்த சாகசச் செயல்களால் கிராமத் து ஜனங்கள் தாடிக்காரன் என்றால் துள்ளி எழுந்தார்கள். போலீஸ்காரர்கள் தாடி வைத் திருந்தவர்களை யெல்லாம் பிடித் துப் போலீஸ் சிறையில் கொண்டு வந்து கொட் டிஞர்கள்! அதில் ஒருவன் கூடக் கறுப்புச் சாமி இல்லை. -

இந்தச் சமயத்தில்தான்் மக்களின் துன் பத்தைத் துடைக்கும் பணியைச் செய்து வந்த சாமியார் பரமசிவம் தங்கமேட்டை நோக்கிக் கிளம்பி வந்தார். அவருக்கு ஒரே ஒரு ஆசை கறுப்புச்சாமியை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும். அவன் மனத்தை மாற்ற ஏதாவது உபாயம் தேடவேண்டும். கறுப்புச்சாமி! என்னை வந்து பார் ! என்று பத்திரிகையில் விளம்பரம் போட முடியுமா என்ன? எப்படி எங்கே அவனைப் பார்க்க முடியும்... என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.

தாமரைக் குளத்தின் மேற்குப் பக்கத்தில் இருந்த மலைச் சரிவில் சூரியன் இறங்கிக் கொண்டே வந்தான்். சாமியார் பரமசிவம் களைப்பு நீங்கப் பெற்றவராக அந்த இடத்தை விட்டுக் கிளம்பினுர்.

  1. 事 o

அஸ்தமித்து இரண்டு மணி நேரத்துக் கெல்லாம் தங்கமேட்டை அவர் அடைந்து விட்டார். சென்ற ஆண்டுகளில் கலகல வென்றிருந்த அந்தக் கிராமம் தன்னுடைய களேயை இழந்து, வெறிச்சென்று கானப் பட்டது. தைரியசாலிகளான சிலர் மட்டும் குடிசைகளை விட்டு வெளியே வந்து கிராமத் துள் வந்திருப்பவரைப் பயத்துடன் கவனித் தனர்.

சாமியார் பரமசிவம் அன்புடன் அவர்களை அணுகித் தாம் வந்திருக்கும் நோக்கத்தை அறிவித்தார். கூடிய விரைவில் கடவுளின் கருணையால் மழை பெய்து அவர்களுடைய மேழிச் செல்வம் தழைத்துப் பெருகும் என்று ஆறுதல் கூறிஞர். மக்கள் தீய்ந்த வைக் கோற் போர்களைக் காட்டினர். சூறையாடப் பட்ட நெற்களஞ்சியங்களைக் காட்டி மாய்ந்து போயினர். துடிப்பும், வலிமையும் உள்ள ಡ್ಗಿಲ್ಲ கறுப்புச்சாமி தங்கள் கைகளில்

க்கில்ை அவனை அப்படியே நசுக்கத் தயாராக இருந்தார்கள். அவனைப் போலி சிலோ, கோர்ட்டிலோ அவர்கள் ஒப்படைக்

கத் தயாராக இல்லை.

அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்கள் மனத்தில் கனன்று கொண்டிருந்த கோபத் தையும், துவேஷத்தையும் அனைத்துவிட முயன்றார் ப்ரமசிவம். ஆனல் ஊர் எல்லையி லும் ஊரைச் சுற்றியும் போலிஸ் பாரா

பலமாகத்தான்் இருந்தது.