பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு,

128

பரமசிவம் இரண்டு கம்பு அடைகளையும், வாழைப் பழங்களையும் கொண்டுவந்து அவன் முன் வைத்தார். அவன் சாப்பிடு வதைப் பார்த்துக் கொண்டே இருக்கும் அவன், "சாமி! நான் யார் என்று உங்களுக் குத் தெரியுங்களா ?' என்ருன்.

" தெரியாது அப்பா." " தெரிஞ்சால் எனக்கு இப்படிப் பழமும் அடையும் குடுப்பீங்களா?

தெரிந்தாலும் கொடுப்பேன். நீ யார் ? ' ' கறுப்புச்சாமி ! பரமசிவம் ஒரு கணம் திடுக்கிட்டாலும் தன்னைச் சமாளித்துக்கொண்டு, " அப்பனே! உன்னைப் பார்க்க வேண்டுமென்று எத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்! நீயே என்னைத் தேடிக்கொண்டு வந்திருக் கிருயே...... ' என்று அதிசயித்தார்.

" ஏன் சாமி அப்படி? அளவு கடந்த பாவங்களைச் செய்தவனைப் பார்க்க யாரா வது ஆசைப்படுவார்களா? '

பரமசிவத்துக்குச் சந்தேகம் வந்துவிட்டது. ஒரு வேளை மனுஷன் தண்ணி போட்டு ' விட்டுத் திசை கெட்டு வந்துவிட்டானே." என்று நினைத்தார். இருந்தாலும் தம்மைச் சமாளித்துக் கொண்டு, எங்கே இப்படி வந் தாய் அப்பா? போலீஸ் வந்து விடுமே...' என்றார் கருணை பொங்க.

' வந்துவிடும் என்ன சாமி ? வந்தே விட் டார்கள்! குறுக்குப் பாதையில் புகுந்து ஓடி வந்தேன்."

" எதற்கு அப்பா ? உன் உயிரைக் காப் பாற்றிக் கொள்ளத்தான்ே? இந்தக் கிராமத் தில் எத்தனை உயிர்கள்-உன்னுல்- துடிக் கின்றன என்பது உனக்குத் தெரியுமா?..."

" சாமீ ! ' என்று உறுமினுன் அவன். “ இப்பொழுது உங்களிடம் உபதேசம் பெற நான் வரவில்லை. இந்தக் குடிசைக்குள் ஒளிந்துகொள்ள எனக்கு இடங் கொடுங் க்ள்" என்று கூறியவாறு மடியில் வைத் திருந்த பொய்த் தாடியை எடுத்து அணிந்து பையிலிருந்து திருநீற்றை எடுத்து நெற்றியில் அப்பிக் கொண்டான். அவன் போலிச் சாமியாராக மாறி யிருந்தா லும், அந்த வேஷம் அவனுக்கு நன்ருகத் தான்ிருந்தது.

கறுப்புச்சாமியின் உருவம் எப்படி இருக் கும், அவன் எப்படி இருப்பான் என்பதே போலீசாருக்குத் தெரியாது. ஓர் இடத்தில் அவன் மொட்டைத் தலையுடன் வந்தான்் என்றார்கள் ; மற்ருேர் இடத்தில் தாடிச் சாமி யாராகக் காட்சி அளித்ததாகச் சொல்லிக் கொண்டார்கள். இன்னுெரு இடத்தில் கிரு தாக் கிராப்பும் நறுக்கு மீசையுமாக வந்து ஜனங்க ஏய்த்துவிட்டுப் போனதாகப்

அமுதசுரபி

பேசிக் கொண்டார்கள். போலிசாரின் பாடு ஒரே திண்டாட்டமாக இருந்தது. அந்த மாயாவியை உயிருடனே, செத்த பின மாகவோ பார்த்துத்தான்் ஆகவேண்டும் என்று அவர்கள் விருப்புடன் ஈடுபட்டு, அமா வாசை இரவுகளிலும் பின்னிலவுக் காலங் களிலும் கிராமம் கிராமமாகப் பீட் சுற்றி வந்தனர்.

அன்றிரவு மறுபடியும் அவன் தாடிச் சாமி யாராக ஒரு கிராமத்தில் கொள்ளையடித்து விட்டு மறைந்ததும், போலீஸின் ஆத்திரம் அளவு கடந்துவிட்டது. காட்டுப் பாதை களிலும், கல்லிலும் முள்ளிலும், மலைப் பாதைகளிலும் ஓடிக் களைத்துப் பரமசிவத் திடம் அடைக்கலம் தேடி வந்திருந்தான்் கறுப்புச்சாமி. பரமசிவம் என்ன செய்வது என்பது தெரியாமல் திண்டாடினர்.

+ * * #

போலிசின் ஊது குழல் இரவின் அமை தியைக் குலைத்தவாறு 'உய்ய்...." என்று கேட்டது. மறுபடியும் சேர்ந்தாற் போலப் பல குழலொலிகள் கேட்டன. போலீஸ் வெகு அருகாமையில் இருக்கிறதென்று தெரிந்து விடவே, கறுப்புச்சாமி பரமசிவத் தின் கால்களைப் பிடித்துக் கொண்டான்.

சாமி ! சாமி...... HH

இரவு மூன்றாம் ஜாமம், ஜாமக்கோழி தன் விேலையை முடித்துவிட்டுக் குடிசையின் கூரை மேல் உறங்கிக் கிடந்தது. நாயும் உறங்கும் வேளை. ஆயிற்று; இன்னும் சற் றுப் பொறுத்தால் இருள் பிரிந்து கொண்டே வந்து, பொழுது விடிய வேண்டியதுதான்். மரங்களிலும் ஏரிக்கரைப் புதர்களிலும் போலீசார் பதுங்கி இருக்கிருர்கள் என்பது பரமசிவத்துக்குத் தெரிந்துவிட்டது.

அந்த அந்தகாரத்தில் குடிசைக்குள் ளிருந்து ஓர் உருவம் மெல்ல மெல்ல வெளியே வந்தது. தாடியும் மீசையுமாகத் தோளில் பையுடன் அது நிதான்மாக ஏரிக் கரையை நோக்கி நடப்பதைப் போலீஸ் புலிகளின் கண்கள் தீட்சண்யமாகக் கவனித் தன.

எப்படியாவது காப்பாத்துங்க,

உருவம் மெதுவாக நடந்து சென்று ஏரிப் படுகை ஓரமாகத் திரும்பியது.

" டும்......டுமீல்...... HT

இதயத்திலிருந்து ரத்தம் குபு குபு' வென்று பெருக"அந்த உருவம் கீழே சாய்ந் தது. போலீசார் இறுமாப்புடன் தங்கள் இலாக்காவை அலைக்கழித்து வந்த கறுப்புச் சர்மியைப் பிணமாகப் பார்த்ததில் திருப்தி யடைந்தனர்.