பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் அசடு?

ஸரோஜா ராமமூர்த்தி

அடுப்பில் காய்ந்து கொண்டிருக்க பால் சுருசுரு" என்று பொங்க_ஆரம் பித்தது. சங்கரி கைக்குழந்தை ஹேமு வுக்குப் பல் தேய்த்துவிடக் குளிக்கும் அறைக்குப் போயிருந்தாள்.

ாஅம்மா அம்மா! பால் பொங் கறது ' என்று சமையலறையில் பாலேப் பார்த்தபடியே ராஜி இரைந்து கத்தினுள். சங்கரி இடு திடு என்று ஒடி

வந்தாள், அடுப்பில் இருந்த பாலே இறக்குவதற்கு, அதற்குள் பால பொங்கிக் கொஞ்சம் கீழே வழிந்து விட்டது.

பாலை அடுப்பில் வைத்து விட்டுப் போவாயோ?" என்று சற்றுக் கடுமை யாகவே கேட்டாள் சங்கரியின் மாமி யார் மங்களம்.

" பல் தேச்சுவிட நான்தான்் வரணு மாம் சனியனுக்கு ' என்று கோப மாகக் கூறிவிட்டு, " நீங்கள் இங் கேயா இருந்தீர்கள் கொஞ்சம் பாலே இறக்கி வைக்கப் படாதோ ?" என்று தைரியமாகவே கேட்டாள் சங்கரி.

அடுப்பில் பாலை வைத்து விட்டுப் போயிருக்கிருய் என்று எ ன க் கு ஜோஸ்யம் தெரியுமா, எ ன் ன ? வாயைத் திறந்து சொன் ல்ை தான்ே தெரியும் !”

1. அம்மா! சங்கரன் என் பலப்பத் தைப் பிடுங்கிக் கொண்டு விட்டான் !'

டஅம்மா இந்த ஹேமுவைப் பாரு. புஸ்தகத்தைக் கிழிக்கிருள்' என்று ராஜி தொண்டை கிழியக் கத்தினள்.

- அம்மா 1 கோல மாவு தீர்ந்து போச்சு ' எ ன் று வேலேக்காரி ராசம்மா வேறு விட்டு_எஜமானியா

கிய சங்கரியிடம் புகார் செய்தாள்.

ஏண்டா ! அப்பா தாங்கருர். ஏன் இப்படி இரையறேள் ' என்று தன் பேரன் பேத்திகளைக் கடிந்து கொண்டே மங்களம், பிள்ளேயின் துாக்

இருக்க வேண்டு நடராஜன்_படுத்திருக்கும்

மெதுவாகச் சாத்

கம் கலையாமல் மென்று அறைக் கதவை விட்டு வந்தாள்.

வீட்டில் என்ன நடந்தாலும் தன் பிள்ளையின் சுகத்துக்குப் பங்கம் வரக் கூடாதென்கிற கொள்கையை உடைய வள் அவள். அவன் பல் தேய்த்து விட்டு வந்ததும் காப்பியை ஆபீஸ் அறைக்கே கொண் டுபோய்க்கொடுத்து விடுவாள். இதற்காக காட்டுப்பெண் அணுக்கும், மாமியாருக்கும் பல தகராறு கள் ஏற்பட்டிருக்கின்றன.

"அவன் பல் தேச்சுட்டான்' என்று மறைமுகமாக நாட்டுப்பெண்ணிடம் பிள்ளேக்குக் காப்பி தயாராக வேண்டு மென்று தெரிவிப்பாள். சங்கரி பேசா மல் வேறு எதையாவது கவனித்துக் கொண்டிருப்பாள். மாமியார் கொஞ்ச நேரம் ப்ொறுத்துக் கொண்டிருப்பாள். நாட்டுப்பெண்ணின் பிடிவாதத்தைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் பிர மாதமாக வரும்.

எது நல்ல டிகாக்ஷன் என்று சொல்லேன். நான் வேண்டுமானலும் கலந்து கொண்டு போய்க் கொடுக் கிறேன் ' என்பாள் கடுமையாக

நான் ஸ்நானம் பண்ணிவிட்டு அடுப்பில் உலே 凸) வைத்திருக் கிறேனே! நான் தான்ே காப்பி சுடப் பண்ண அதை இறக்க வேண்டும் ? நீங்கள் இ ன் னு ம் குளிக்கவே இல்லையே!" என்று ஆரம்பிப்பாள் சங்கரி. அவள் கோப மெல்லாம் மாமி யார் பேரில் அல்ல; கணவன் பேரில் தான்். அம்மா பிள்களயாக கடராஜன் இருப்பது அவளுக்குத் துளிக்கூடப் பிடிக்க வில்லே.

தோன் அதைச் சுடப் பண்ணிக் கொடேன்."

தர்க்கம் ஒருவிதமாக முடிந்து காப்பி ஆபீஸ் அன்ற்க்கே போய்ச் சேர்ந்து விடும்.

ஏண்டா பால் போறுமா ? இன் தும் கொஞ்சம் கொண்டு வந்து விடவா ? கறுப்பாக இருக்கு போல் இருக்கே ?"