பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கரி ஆபீஸ் அறை வாசலில் கோபம் பொறி பறக்க கின்று கொண் டிருப்பாள். அவள் சிற்பதைக் கவ னித்துத்தான்ே என்னவோகட ராஜன், பால்தான்ே அம்மா ? இன்னும் கொஞ்சம் கொண்டா' என்று அம்மா வின் தீர்மானத்தை ஆமோதிப்பான். அவள் விடு விடு என்று உள்ளே போய் டம்ளரில் பால் எடுத்துக் கொண்டு வந்து பிள்ளையிடம் கொடுப்பாள்.

கணவனுக்கு வயிற்றுக்குத் தாராள மாகக் கூடப் போடத் தனக்கு மனம் வரவில்லை என்பது மாமியாரின் அபிப் பிராயமா ? அல்லது பிள்ளையின் மேல் ஏற்பட்டிருக்கும் அளவு கடந்த பாசத் தின் அறிகுறியா' என்பது சங்கரிக்கு விளங்காத புதிராகவே இருந்தது.

+ + 품

'மணி ஏ முடிக்கப் போறது. அப்

பாவை எழுந்திருக்கச் சொல்லுடி!' என்று சற்று உரக்கவே சொன்னாள் சங்கரி.

இந்தாடி ராத்திரி ஆபீஸ் வேலை யெல்லாம் முடிந்து அவன் படுத்துக் கொள்ளும்போது பத்து மணிக்கு மேலாச்சு. அவனேப் போய் ஒன்றும் எழுப்பாதே !" என்று பாட்டி பேத் திக்கு உத்தரவு போட்டாள்.

சங்கரி தான்் காலேயிலிருந்து இரவு பதினேரு மணி வரையில் மாடு போல் உழைப்பது மாமியாரின் கண்களுக்குப் படவில்லையே என்று உள்ளம் குமுறி ள்ை. மாமியார் தன்னுடைய காத்த ஞரின் பிரசவத்துக்காக ஊருக்குப் போகும் போது கணவனே எப்படி யாவது திருத்தி விடுவது என்கிற நீர் மானத்துக்கு வந்தாள் சங்கரி.

நடராஜனுக்கு வழ க் கம் போல் காப்பி జిళ్లి போய்க் கொடுத் தாள் மங்களம்.

" ஏன் அம்மா, கமலாவின் பிரச வத்துக்கு ஊருக்குப் போக வேண்டும் என்று சொன்னயே ? என்றைக்குக் கிளம்பப் போகிருய்?" என்று கேட் டான் நடராஜன்.

" போக வேண்டும், அப்பா.

பது ரூபாய் செலவாகுமே பார்க்கிறேன்.'

இரு

என்று

செலவைப் பார்த்தால் முடியுமா? போகிற காரியத்துக்குப் போய்த்தான்் ஆகணும் ' என்ருள் சங்கரி.

நாட்டுப்பெண்ணும் த ன க்கு ச் சாதகமாகப் பேசுவதைக் கண்ட மாமி யாரின் மனம் சந்தோஷ மடைந்தது.

" பிள்ளைத் தாய்ச்சிப் பெண்ணை வெறும் கையுடன் போய்ப் பார்க்க முடியுமா ?”

' கொஞ்சம் பகடிணம் செய்து தருகி றேன்; வெறுங்கையுடனு போவார் கள்?' என்ருள் சங்கரி.

மாமியார் அந்தண்டை நகர்ந்தால் தான்ே. கணவனே அவளால் திருத்த முடியும்?

ஒருவிதமாக மங்களம் ஊருக்குக் கிளம்பினள். அவள் ஊருக்குப் போன தும் சங்கரிக்குத் தான்் சுதந்திரமாக இருக்கிருேம் என்கிற எண்ணம் ஏற் பட்டது. எதற்கெடுத்தாலும் மாமி யாரைக் கேட்டுத்தான்் ஆக வேண்டும் என்பது இன்னும் மூன்று மாதங்க ளுக்கு இல்லே அல்லவா?

அம்மாவை ரயிலேற்றி விட்டு வந்த நடராஜன் சாவகாசமாக காற்காலியில் உட்கார்ந்து கொண்டான். கொஞ்ச நாழிகைவரையில் தன் அறையைத் தேடிக் காப்பிவரும் என்றுஎதிர்பார்த் தான்். காலையில் ரயில் ஏற்றப்போன அவசரத்தில் அவன் காப்பி கூடச் சாப் பிடவில்லை.

"அடியே ராஜி உன் அப்பாவுக் குக் காப்பி வேண்டுமா கேள்' என்று சமையலறையிலிருந்து கேட்டாள் சங் கரி. ஆவி பறக்கும் காப்பியை டம்ள ரில் ஊற்றி எடுத்துக் கொண்டு வாசற்படி தாண்டி வந்தவன் தன் சங்கல்பத்தை கிகாவு படுத்திக் கொண்டு மறுபடியும் உள் .ே ள கொண்டு போய் வைத்து விட்டாள்.

கடராஜன் ஒன்றும் கூறவில்லை. 'அம்மா ஊருக்குப் போகட்டும் நீங் கள் எ ப் படி மாறி விடுகிறீர்கள் பாருங்கள்' என்று சங்கரி அடிக்கடி கூறியதை கினேவு படுத்திக் கொண்டு, என்ன தான்் கடக்கிறது பார்க்கலாம் என்று நாற்காலியில் சாய்ந்து படுத்