பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதம் மலர்ந்தது 69

அம்மாளுக்குத் தெரியாது. இந்த வாழ்க் கையும் பொன்னும் பொருளும் சதம் என்று இறுமாந்திருந்த ஜானகி அம்மாளின் உட ல் நாளடைவில் வாட்டம் ஏற்பட்டது. திடீர் திடீர் என்று தலை சுற்றலும், மயக்க மும் ஏற்பட்டன. அவள் எதிரே கண்ணுடி பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டிருநத வெள்ளிச் சாமான்களும், புடவைகளும் அவள் இதுவரையில் வாழ்ந்து வந்த வாழ்க்கைக்குச் சான்ருக விளங்கின. அவை களின் பளபளப்பும், பகட்டும் இம்மியளவும் மாறவில்லை. ஆணுல், ஜானகி அம்மாள் மாறிவிடடாள்; தோல் சுருங்கி, நரை கண்டு, வற்றி உலர்ந்துபோய், கண்களின் கருமணிகள் சற்றே ஒளியிழந்து வயோதி கத்தை அடைந்துவிட்டாள். அவளும் ஒரு காலத்தில் அவைகளைப் போல்ப் பளப்ள் வென்று இருந்தவள் தான்். அவளுடைய காலம் ஒடி இறுதிக் கட்டத்துக்கு வந்து விட்டது. அவைகளுக்கு இன்னும் தேய்வு ஏற்படவில்லை.

தன்னுடைய தேய்வைப் பற்றிச் சிந்தித்த ஜானகி அம்மாள் தன் எதிரில் வளர்ச்சி யின் உரு வ மாக உட்கார்ந்திருக்கும் குமுதாவைப் பார்த்தாள். குமுதா, படுத் தருந்த ஜானகி அம்மாளின் முகத்துக்கு நேராகக் குனிந்தாள்.

'மாமி! உங்களுக்கு என்ன வேண்டும்?" ஜானகி அம்மாள் தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்துக்கொண்டாள். அருகில் ஒரு சிறு மேஜையின் மீது மருந்துப் புட்டி கள், ஆரஞ்சுப் பழங்கள் முதலியன வைக்கப்பட்டிருந்தன. திடீரென்று தனக்கு என்ன வந்துவிட்டதென்பதே அவளுக்குப் புரியவில்லை.

குழுதா திரும்பவும் மெதுவான குரலில், " மாமி ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள் ? உங்களுக்கு என்ன வேண்டும்? ' என்று கேட்டாள்.

' என் உடம்புக்கு என்ன அம்மா ? எத்தனை நாட்களாக நான் இப்படிப் படுத் திருக்கிறேன்?" என்று கேட்ட்ாள் ஜானகி „вѣ, гг. LП твтг.

குமுதாவுக்கு அந்த அம்மாளைப் பார்க் கவே பரிதாபமாக இருந்தது. ஒவ்வொரு வரையும் தோர யுடன் அதட்டி உருட்டி வேலை வாங்கியும், கொடுக்க்ல் வாங்கலில் சற்றும் விட்டுக் கொடுக்காமல் கருராகவும் இருந்தவள் இரண்டே நாட்களில் எப்படி ஒருங்கிக் கிடக்கிருள் என்பதை நினைத்து வியந்தவாறு உட்கார்ந்திருந்தாள் குமுதர்.

கட்டிலில் படுத்திருந்த ஜானகி அம்மா எளின் கண்களிலிருந்து ஊற்றுப் போல் கண்ணிர் பெருகிக் கொண்டிருந்தது. மயங் கிக் கிடந்த அந்த இரண்டு நாளும் அவள் உள்ளுணர்வு விழித்துக் கொண்டுதான்் இருந்தது. தன்னச் சுற்றி என்ன நடக் கிறது என்பதை அறியாமல் கிடந்த அவள், தன் உள்ளுணர்வு கேட்கும் கேள்விக்குப் பதில் கூற முடியாமல் திணறிக்கொண்டிருந் தாள். யாருக்காக வாழ்ந்தாய் ? எதற் காக வாழ்ந்தாய் ? " என்று மனம் பெருங் குரலெடுத்து அவளை ஏசும்போது அவள் இதயம் வெடித்துவிடும்போல் இருந்தது. மூச்சு துரத்தித் துரத்தி வாங்கியது. யாரோ