பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருப்பு

றேன்' என்கிற பொருள் பொதிந்து கிடக்கும். ஆசிரியர் என்னத்தைக் கண்டார்? திருக்குறளுக்கும், நாலடியார்க்கும், கம்ப

ருக்கும் தான்் அவர் பொருள் கண்டவர்.

குழந்தை போல இருந்த கோபுவின் போக்கில் மாறுதல்கள் தோன்றின. படிப் பிலே அக்கறை இல்லே. கண்ட நேரங்களில் வீட்டுக்கு வருவதும் போவதும் அவள் தாய்க்குக் கவலையை அளித்தது.

தனக்குப் பின்னுல் ஒரு பெரிய சதித் திட்டமே உருவாகிவருவதை வேதம் அறிந்து கொள்ளவில்க்ல.

கோபு, பாத்சாதி, அவன் சகாக்களில் சிலர் (வீரர்கள் என்று அவல்ை மதிப்புப் பெற்றவர்கள் மட்டும்) புளியாந்தோப்பில்

திட்டம் திட்டுவதில் முகனந்திருந்தனர்.

நாகரிக வாழ்க்கைக்கும், லேப் ஜாலி

யாக இருப்பதற்கும் சில அத்யாவசியமான தேவைகள் உண்டு ப்ரதர்...... சும்மா இப் படிப் புத்தகங்களேக் கட்டிக் கொண்டு அ.மு தால் கலப்பை அனுபவிக்க முடியாது. ஆலப் ஜாலியாக இருக்கிறதுக்குப் பணம் வேணும்...... நாமெல்லாம் அவ்வளவு பணக் காரங்க இல்லை...நம்ம செட்டுலே கோபு ஒத்தன்தான்் பணக்கார விட்டுப் பிள்ளே. அவன் பாக்கெட்டோ காவி ... என்று பேசி அவுட் சிரிப் பொன்றை சிந்தினுன் பாத்சாதி கோபுவை விஷமமாகப் பார்த்த படி. மற்றவர்களும் அவனுடன் சேர்ந்து சிரித்தார்கள். கோபுவுக்கு வெட்கமாகப் போய் விட்டது. இந்த வீரப்பரம்பரையுடன் சேர்ந்த பிறகு தான்் மட்டும் கோழையாக இருப்பதா என்று அவன் ரத்தம் கொதித்தது. இளம் ரத்தமல்லவா ??

ப்ரதர், இப்ப நீங்க, என்கின இன்னு செய்யச் சொல் ரீங்க ?- என்று அவர்கள் மொழியில் கேட்டு வைத்தான்்.

ஆ ! அப்படி வாடா வழிக்கு - என்ற வாறு பாத்சாதியின் கண் ஜாடையைப் புரிந்து கொண்ட இன்னெரு வீரன் கோபுவைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வெளியே

கிளம்பிஞன்.

அந்த ஊரில் பெரிய மனிதர்கள் வாழும் பகுதிகளின் வழியே இருவரும் நடந்து .ே ப ா ப் க் கொண்டிருந்தார்கள். இடை இடையே தென்படும் கடைகளில் சோடா கலர் என்று கோபுவுக்கு ராஜோபசாரம்

நடந்து வந்தது.

பகல் நேரமாதலால் தெருக்களில் சந்தடி இல்லை. பெரிய பங்களாவின் முகப்பில் இரண்டு புத்தம் புதிய சைக்கிள் நிறுத்தப் பட்டிருந்தன. அவைகளில் பளபள வென்று மின்னும் டைனமோ விளக்குள் பொருத்தப் பட்டிருந்தன.

57

கோபுவும், வீரனும் 9 மதிள் சுவர் ஒரமாக உள்ளே எட்டிப் பார்த்தனர். வீடு சந்தடியற்று இருந்தது. பகல் சாப்பாட்டுக் காக விட்டுக்கு வந்தவர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்திருக்கலாம் அல்லது ஒய்வு எடுத்துக் கொண்டும் இருந்திருக்கலாம்.

வீரன் கோபுவின் தோளே மெதுவாகச் சிண்டினன். ' போ...மெதுவா அதைக் கழட்டிக் கிட்டு வந்து டு... என்ன ?== என்ருன். சற்று அதிர்ந்து போனன் கோபு, சும்மா மிரளாதே ப்ரதர். நம்ம சொசை டிலே இதெல்லாம் சகஜம்...நீயும்தான்் எப்ப தொழில் கத்துக்கிடறது ? சும்மா போ மேன்... '

இரண்டு சைக்கிள்களிலிருந்தும் டைனமோ

விளக்குகள் அகற்றப்பட்டன. அடுத்தபடி Щ FT+F ரயில் ஏறி இருவரும் சைதாப் பேட்டைக்கு விரைந்தார்கள். இம்மாதிரி வியாபாரங்களுக்கு ஆதரவு காட்டுவதற்

காகவே சில வட்டிக் கடைகள் உண்டல்லவா? இங்கேதான்் மறுபடியும் கழுதை உதைக்கிற மாதிரி உதைத்தது.

  • ப்ரதர் எனக்குக் கையெழுத்துப் போட வராது. சும்மா நீயே ரசீதிலே கையெழுத் துப் போடு..-- கோபு மறுபடியும் தயங் கின்ை. ஆனால், உரலில் தலேயிட்ட பிறகு உலக்கைக்குப் பயந்தால் முடியுமா ? விறு விறு என்று ரசிதில் கையெழுத்துப் போட்டு விட்டு இரண்டு விளக்குகளுக்குமாக எழுபத் தைந்து ரூபாய் பெற்றுக் கொண்டு நண்பர் களுடன் ஜாலி கிலப் அனுபவிக்கக் கிளம் பினுன் கோபு.

ஆனல், அன்று ஒருநாள் தான்் அவன் ஜாலி யாக இருக்க முடிந்தது.

இரவு பன்னிரண்டு மணிக்குமேல் அந்த விட்டில் யாரும் வந்து அவைசியத் தொல்க்ல கொடுத்ததில்லே.

கோபுவின் தந்தைக்கே வியப்பாக இருந் தது கதவைத் திறந்தபோது இரண்டு போலிஸ்காரர்கள் கையில் மார் வாடிக்கடை ரசீதுடன் நின்றிருந்தார்கள். ரசீதில் கோபு வின் கையெழுத்து காணப்பட்டது.

இந்தச் சமயத்தில் அவனுடைய ஆருயிர்= நண்பன் பாத் சாதி எங்கே? அவன் குற்றம் புரிய அவர்கள் உடந்தையாக இருந்திருக் கலாம். குற்றம் புரிந்தவன் கோபுதான்ே ?

அன்று அந்த நள்ளிரவில் வேதத்தின் வயிற்றில் யாரோ தீ வைத்தார்போல் குபி றென்று நெருப்புப் பற்றிக் கொண்டது.

பிறகு விசாரணைகள், கோர்ட், என்று கோபு அல்லல் பட்டான். குற்றம் பெரிதல்ல. அதுவும் வயதும், மனமும் முதிராத ஒரு பருவத்தில் சிலக் காலிகளின் சகவாசத்தால்