பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தச் சிறிய வீட்டின் உத்திரத்து இடுக் கில் ஆணும், பெண்ணுமாக இரு குருவிகள் கூடு கட்டி வெகு காலமாக வசித்து வந்தன. மழைக்காலத்தில் கூட்டில் பதுங்கி வசித்துக் குளிர் காலத்தில் அவ்விட்டுத் தென்னே மரத் தின் உச்சி இலைகளில் உட்கார்ந்து குளிர் காய்ந்தன. வசந்தத்தில் சிறகடித்துப் பறந்து இரை தேடிக் கூடி கட்டி இன விருத்தி செய்து மகிழ்ந்தன. காலதேவனின் தேர் சக்கரத்தில் சுழன்று சுழன்று அவை இரண்டும் பருவ மாறுதல்களுக்கேற்பத் தங்கள் வாழ்க்கையை

H அமைத்துக் கொண்டது போல் செல்லம்மா கும், சிதம்பரநாதனும் அந்த வீட்டில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்துப் பல வருஷங்கள் ஆயின. செல்லம்மாளுக்கு வயது ஐம்பதைத் தாண்டியிருந்தாலும் அவளிடம் மாறுதல் அதிகம் ஏற்படவில்லை. நல்ல சிவந்த நிறம். படிப்படியான கூந்தல். கொசுவம் கலேயாத புடவை. அவள் புடைவைத் தலைப்பை மடித் துக் கட்டி இழுத்திப் போர்த்திக் கொள்வதே

நேர்த்தியாக இருந்தது. கலேயை இழைய வாரி முடிந்து கொண்டால் சிதம்பரநாதன் சண்டைக்குப் போப் விடுவார் மனைவியிடம்.

இந்தக் காவ பாஷன் படி அவள் பிச்சோடா போட்டுக் கொள்ள வேண்டும். சிதம்பரநாத னுடைய உருவத்தில் பெருத்த மாறுதல் ஏற். பட்டிருந்தது. கட்டுக் குடுமியும், காதில் கடுக் கன்களுமாகச் ச ரிகை - அங்கவஸ்திரத்துடன் மிடுக்காக அந்தக் கூடத்துச் சுவரில் தொங்

கும் புகைப்படத்தில் அவர் காட்சியளிப்பது போலவா இன்று இருக்கிருர் வற்றிய எலும் புக் கூடாக, மார்பு முன்தள்ளி, வயிறு பருத்து மிகவும் தளர்ந்து விட்டார் அவர். பாவம். ஏதோ ஒரு பொல்லாத வியாதி வந்து அவரைப் பீடித்துக் கொண்டிருந்தது. வைத்தி யர்கள் அதற்கு ஏதேதோ நாமகரணம் இட்டு அழைத்தனர். வியாதியைப் பற்றிய விஷயங் களே அவர்களுக்கே விட்டு விட்டு உத்திரத்துக் குருவிகளைப்போல் வாழும் இந்த மனித பட்சி' களைப் பார்ப்போம்.- குணதிசையில் உஷைக் கன்னி பொன்னுல் மெழுகிக் கதிரவன் கிரணங்களால் கீற்றுக் கோலம் வரைய ஆரம் பித்து விட்டாள் என்பதற்கு அடையாளமாகச் செல்லம்மாள் சுந்தவில் நீர் சொட்டப் பிழிந்து

முடிந்து கொண்டு ஸ்டவ்"வை உய்ப்பப்" யென்று பற்ற வைத்துக் காப்பிக்கு ஜலம் வைத்து விடுவாள். சிதம்பரநாதனுக்கு விடியும்போதே காப்பி தயாராக இருக்க வேண்டும். இரவெல்லாம் வயிற்றில் வலி

யுடன் போராடிய அந்த ஜீவனுக்கு இந்தக் காப்பி சுடச்சுட வயிற்றுக்குள் போனவுடன்

தெம்பு வந்து விடும். இல்லாவிடில் அவர் மனிதனுக இருக்க மாட்டார். ஆணுல், இன்று வரை அவரை மனிதன் அல்லாத

வேருகச் செல்லம்மாள் மாற்றியதே இல்லை. ஏன் மாற்ற வேண்டும்? குழந்தை குட்டி என்று வேறு பிடுங்கல்கள் இருந்தால் ஒரு வேளே செல்வம் மாளும் மாறி யிருப்பாள். அந்த மனிதனும் மாறியிருப்பார். . பிக்கு பிடுங்கல் இல்லாமல் போகவே செல் வம்மாளுக்கு அவள் கணவரே குழந் W தையாக மாறியிருந்தார். வயிற்றில் பிறந்த குழந் தையானுல் அ. த ட் ட லாம், மிஞ்சிப் போனுல் ஒர் அடி வைக்கலாம். இந்தக் குழந்தையின் பிடிவாதங்களுக்கு, கோபதாபங்களுக்கேற்ப அவள் வளைந்து போக வேண்டியிருந்தது. டாக்டர் எது ஆகாது என்கிருரோ அதுதான்் அந்த மனிதருக்குத் தேவையாக இருந்தது.

நாக்கை அடக்க முடியாமல், வியாதியுடன் பலமாக அந்த மனிதர் போரிட்டுக் கொண்

டிருந்தார்.

கணவர் அவருக்குப் பிற்காலம் தனக்கு என்ன ஏற்பாடு செய்யப் போகிருர் என் பதைப் பற்றி அவள் சிறிதும் கவலைப் பட்டதேயில்லை. "அவருக்குப் பிற்காலம் என்று ஒன்று வரவே வேண்டாமே!" என்று தான்் அவள் நினைத்தாள்.

செல்லம்! நீ இப்படி அசடு மாதிரி

இருக்கிற பணத்தை மருந்து மருந்து என்று கரைத்து வந்தாயானுல் உனக்கென்று என்ன மிஞ்சப் போகிறது?' என்று அவள் உற வினர்கள் அங்கலாய்த்தனர்.