பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பணம் பணம் என்று அந்த மனுஷனுக்குச் சரியாக வைத்தி யம் பார்க்கவேயில்லை. மனுஷ&ன விடப் பனமா உயர்வு?' என்று சிதம்பரநாதனச் சேர்ந்தவர்கள் அவனத் துளைத்தெடுத்தனர்.

செல்லம்மாளின் இ த ய ம் சொல்லம்புகளால் துளைக்கப்பட் டுப் புண்பட்டுக் கிடந்தது.

இடையில் இருந்தவர்கள் சிதம் பரநாதன் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச சொத்து யாரைச் சேரப் போகிறது என்பதைப் பற் றியே பேசிக் கொண்டிருந் தனர். உத்திரத்தில் கூடு

கட்டி வாழும் அந்த இரு பறவைகளிடமும் அதன் இனத்துக்கு இருந்த பாசம் பரிவு கூட இந்தப் பாழும் மனித இனத்துக்கு இல்லையே என்று செல்லம்மாள் மலே அண்ணுந்து பார்த்தவாறு பெருமூச்செறிவாள்.

அந்த வீட்டில் முதன் முதலாக வந்த போது சிதம்பர நாதன் ஆரோக்கியமாகத் தான்் இருந்து வந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர் தமக்கென்று வீடு வாசல் ஒன்றை யும் தேடிக் கொள்ள வில்லை. வெளியூரி லிருந்து அவர் சகோதரிக்குச் சொந்தமாக இருந்த அந்தக் கிராமத்து வீட்டை அவர் வந்தடைந்த போது உற்றமும், சுற்றமும் அவரைப் பலவாறு ஏசின. 'பனத்தாசை பிடித்தவர்கள். சகோதரியை மோசம் செய் யும் கருத்தோடுதான்் அங்கே வந்திருக் கிருர்கள்' என்றார்கள்.

"பின்னே குட்டி இல்லாதவர்களுக்கு வீடென்ன? வாசலென்ன? எங்கேயாவது பொழுதைக் கழித்தால் ஆயிற்று. அந்த வீட்டை வாடகைக்க விட்டால் வாடகை

வராதா? இவர்கள் ஏன் இணு மாக இருக்க வேண்டும்?"

உறவினரின் க ச ப் புக் கு ஆளான சிதம்பரநாதன் அந்தப் பழைய வீட்டைக் கூடுமான வ ைர யி ல் சீராக்கினர். கொல்லேக் கிணற்ருேரத்தில் வாழைகளும், தென்னகளும் வளர்ந்து செழித்தன. கூரை யெங்கும் ஒட்டடை படிந்து கிடந்தது போக, இப் போது பளிச்சென்று காணப்பட்டது. எங் கிருந்தோ இரண்டு குருவிகள் வந்து உத் திரத்தில் குடியேறின. செல்லம்மாள் உயர அண்ணுந்து பார்த்துப் பெருமூச்செறிந்தாள். வாழ்க்கையில் ஐம்பது வ ய ைத அடைந்து விட்ட அவளும், அறு பதை நெருங்கும் அவ ரும் அந்தக் குருவி களேப் போல் யாரு மற்றவர்கள். அன் பாக, இனிமையாக

த ஸ்ரோஜா ராமமூர்த்தி

அவர்களே வைத்து ஆதரிக்க உலகில் யாருமே இல்லை. சோர்ந்த மனேவியின் முகத்தைச் சிதம்பரநாதன் ஆதரவுடன் பார்த்தார்.

'செல்லம்! ஏன் இப்படி ஏங்கிச் சோர்ந்து சோர்ந்து உட்கார்ந்து விடுகிருப்? வாழ்க்கை யில் உனக்காக நானும், எனக்காக நீயும் என்று நிர்ணயிக்கப்பட்டவர்கள். மூன்ருவது ஜீவனுக்கு இடமில்லாமல் கடவுள் செய்து விட்டார்' என்றார் சிதம்பரநாதன்.

'வஞ்சித்து விட்டார் என்று சொல் ஆங்கள். ஒரு குழந்தை இருந்திருந்தால் இத்தனே பேர்கள் இவ்வளவு சொற்கள் சொல் வதற்கு இடம் இருக்குமா?"

முதன் முறையாக இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் மனைவி முத்து முத்தாகக் கண்ணிர் சிந்துவதைக் கண்டார் அவர். இத்தனை கால மாக அவள் மனத்தில் முளைக்காத ஆசை காலம் கடந்து தோன்றி வருத்துவதையும்

அவரால் உணர முடிந்தது.

செல்லம்மாள் தன்னுடைய இளமையில் தனக்குக் குழந்தை இல்லையே என்று சிந்தித்