பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துப் பார்த்ததில்லை. அந்த எண்ணமே அவ ளுள் எழவில்லை. சிதம்பரநாதனே ஒரு குழந் தையைப் போல இருந்தார். குழந்தைக்குத் தோன்ற வேண்டிய விசித்திரமான m ணங்கள். அவருக்குத் தோன்றின. தெருப் பிள்ளைகளுடன் பலீன் சடுகுடுவிலிருந்து பட் டம்வரை அவர் கலந்து கொள்ளாத விளே யாட்டுக்கள் இல்லை. வேளாவேளேக்குச் சாப் பிட வராமல் அவர் மனைவியைப் படுத்தி வைத்த பாடு! அப்பொழுதெல்லாம் செல்லம் மாள் தன் கணவனை ஒர் அடம் பிடிக்கும் குழந்தையாகவே பாவித்தாள். பொறுமை யுடனும், திறமையுடனும் அவருடன் சமா வளித்து வாழ்ந்தாள்.

இந்த வீட்டுக்கு வந்த சில வருஷங்களில் கன்வன் படுக்கையில் விழுந்த பிறகுதான்் செல்லம்மாளுக்குத் தன் நிலைமை புரிய ஆரம் பித்தது. அதுவும் பதினேந்து நாட்களாக அவர் உடல் நிலையில் படிப்படியாக மாறு தல்கள் தோன்றி, அவர் பிழைக்க மாட்டார் என்கிற எண்ணம் அவளுக்கு ஏற்பட்டது.

உத்திரத்துக் குருவிகளில் ஒன்ருகிய ஆண் குருவி ஏனுே நான்கு நாட்களாக இரை தேடப் போகவில்லை. பெண் சிட்டு விர்ரென்று பறந்து சென்று என்னென்னவோ கொண்டு வந்தது. அதற்கு வாயில் ஊட்டிப் பாடுபட்டது. செல் வம்மாளும் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு டாக்டர் வீட்டுக்கு நடை நடை யாக நடந்தாள், கோபுர வாயிலில் நின்று

தனக்கு மாங்கல்யப் பிச்சை கருமாறு தெய்வத்தை இறைஞ்சினுள்.

'செல்லம்! செல்லம்! எனக்காக நீ இப்

படி அலைகிருயே! சிதம்பரநாதன் மிகுந்த வேதனையுடன் குளறிக் குளறிப் பேசினர்.

'உங்களுக்காக அலைகிறேனு: இல்லை. எனக்காகவே நான் அலைந்து கொள்கிறேன். நீங்கள் வேறு. நான் வேறு என்கிற எண்ணமே எனக்கு ஏற்பட்டதில்லே. அந்த எண்ணம் நமக்கு ஒருவேளை குழந்தைகள் இருந்திருந் தால் ஏற்பட்டிருக்கலாம். நானும், நீங் களும் ஒன்றுதான்்....'

மேலே இருந்த குருவிகளுக்கு மனித பாஷை புரிந்திருக்க வேண்டும். இரண்டும்

கீழே தங்களைப் போல் தனிமையில் வாடும் இவர்களைப் பார்த்துப் பரிதாபமாகக் கத்தின. அந்தப் பெண் சிட்டின் ஒலத்தைக் காது கொண்டு கேட்க முடியவில்லை.

'இது வேறு தலைவேதனை....கண்ணருவி என்று அலுத்துக் கொண்டார் அவர் 'அப்

եTն::IT,

பொழுதே சொன்னேன், விரட்டு என்று.... ஒன்றுக்கு உடம்பு சரி யில்லே போலிருக்கிறது." சிதம்பரநாதன் அண்ணுந்து பார்த்துச் சொல்லி விட்டுத் தம் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

செல்லம்மாளும் உயரப் பார்த்தாள். பெண் சிட்டின் புலம்பல் அவளுக்கு வரப் போகும். ஏதோ ஒன்றை உணர்த்தியது.

செல்லம்! நீ தஒரியாக என்னே வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிருயே. என் தம்பியை வரச் சொல்லி எழுதிப் போடேன். கணவர் கூறி முடிப்பதற்குள் செல்லம்மாள் மைத்துன ருக்குக் கடிதம் எழுதி விட்டாள்.

ஊரின் நியதிக்குக் கட்டுப்பட்டோ அல்லது பாசத்தினுலோ செல்லம்மாளின் மைத்துனர் வந்து சேர்ந்தார்.

தம்பியும், தமையனும் ஒருவரையொருவர் அனைத்துப் பிடித்துக் கொண்டு உட்கார்ந் திருந்தனர். தன் தோளிலும் மார்பிலும் அனைத்து வளர்த்தவன் தன் இறுதிக் காலத் தில் தன்னக் காக்க வந்து விட்டான் என்று தான்் இறுமாந்தார் சிதம்பரநாதன்.

தம்பியின் பாசத்தையும் மீறிக் கொண்டு ஆசை என்கிற விஷம் அந்த விட்டில் பாவிச் சூழ்ந்தது.

தமையனின் பாத்திரங்கள். பண்டங்கள். மன்னியின் உடம்பில் இருக்கும் நகைகளின் மதிப்பு இவற்றை எடை போட்டது.

அண்ணு என்ன ஏற்பாடு செய்திருக்கிருர்? வந்ததிலிருந்து அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே..... அவர்தான்் நோயில் அவஸ்தைப்படுகிருர், மன்னி சொல்லக் கூடாதா? எல்லாவற்றையும் கணக்குப்போட் டுப் பார்த்தால் ஏழெட்டாயிரம் தேறும் போல் இருக்கிறதே! இவ்வளவும் யாருக்கு:

தமக்குத் தான்ே விடை காண முயன்று அந்த முயற்சியில் தோற்றுப் போனுர் தம்பி.

செல்லம்மாள் ஏற்கனவே யந்திரமாகி விட் டிருந்தாள். கணவருக்கு ஆகாரம் கொடுப் பது, படுக்கை மாற்றுவது. டாக்டர் வீட் டுக்கு ஓடுவது. எப்படியும் அவர் பிழைத்து விட்வேண்டும் என்கிற நம்பிக்கையின் அஸ்தி வாரத்தில் அவள் தன் மனத்துக்குத்தான்ே உறுதி கூறித் தன்னையே அவருக்குப் பதிலாக அர்ப்பணிக்கத் தயாராகி விட்டாள்.

மன்னி காப்பி கொடுக்கும்போது கேட்க லாம் என்று மைத்துனர் இருந்தார். பிறகு சாப்பிடும்போது கேட்டு விடுவது என்று தீர் மானித்திருந்தார். ஏனுே சில விஷயங்கள்

இதுகளை அடித்து