பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண அழைப்பிதழைப் பிரித்து மறு படியும் விலாசத்தைக் கவனித்தான்் வரதன். தியாகராயநகரில் ஒரு பிரபலமான தெரு வில் இருக்கும் கல்யாண மண்டபம்தான்் அது. மாப்பிள்ளே அழைப்பு ஆறு மணிக்கு என்று போட்டிருந்தார்கள். அடுத்த நாள் காலை ஆறிலிருந்து ஏழுக்குள்ளாக முகூர்த்தம் இருந்தது. வரதன் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவன். ஏழு மணிக்கு அங்கே இருந் தாக வேண்டும். நண்பனின் கல்யாண மென் ருலும் அந்த ஒன்றரை மணி நேரச் சடங்குக் காக ஒரு நாள் செய்ய வேண்டிய தொழிலே உதற அவனுக்கு மனம் வரவில்லை. கவே, மாலை ஐந்து மணிக்கு மனைவியிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

"கொஞ்சம் நல்ல சட்டையாகப் போட் டுண்டு போகப்படாதா?' என்று மனைவி கேட்டாள்.

சட்டையா ? ఖి: தீபா வளிக்கு வாங்கினதுதான்ே? கதர்ச் சட்டை கொஞ்சம் நீர்க்காவி ஏறிப் போச்சு...'

"ஆமாம்... அவா அவா பாம்பே டையிங் அது இதுன்னு சட்டை தைச்சுக்கிரு. நீங்க கதர் கதர்னு ஒரு சந்நியாசிக் கலரிலே தைச் சுண்டு-"'

அவன் அவளைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரித்தான்். ஒரு கணம் தன்னேயே பாம்பே டையிங் துணியில் தைத்த சட்டைக்குள் துழைத்துக் கொண்டு, சிலும்பிய கிராப்பும் கிருதாவுமாகக் கற்பனை பண்ணிக் கொண் டான். ஒ! அவள் தான்் இப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிருள் போலும்! அவள் அவனுடைய சாதுத் தனத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவன் வீட்டிலிருந்து கிளம்பி விட்டான். மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து கல்யாண மண்டபம் அரை மைலுக்குள்ளாக இருந்தது. அன்ப னுக்குத் தெரிந்த சிலர் மனைவிகளோடு வந் திருந்தனர். அவரவர் தத்தம் கல்யாண சூட்டுகளையும், புடவைகளையும் உடுத்தியிருந் ததும் வரதனுக்கு வேடிக்கையாக இருந்தது. "'என்னப்பா வரதா! மிஸஸ் வரலேயா? ' என்று ஒரு நண்பன் கேட்டான்.

அவள் ஏன் அவளுக்கு அறிமுகமில்லாத, தெரியாத ஒருவனுடைய கல்யாணத்துக்கு வரவேண்டும் என்பது வரதனுக்குப் புரிய வில்லை. இவர்கள் மனேவிமார்களுக்கும் அந்தக் குடும்பத்தினரைத் தெரிய நியாயமில்லை, இருந்தாலும் வருகிருர்கள்.

"'டாக்சியிலே இடம் இருக்கு. நீயும் வாயேன்- ' என்று இன்னுெரு நண்பன் கூப் பிட்டான்.

நடந்து போக வேண்டிய தூரத்தில் இருக் கும் இடத்துக்கு இவர்கள் ஏன் டாக்சியைத் தேடுகிருர்கள் என்பது வரதனுக்குப் புரிந்தது. மதிப்பு என்று ஒன்று இந்தச் சய்கையில்ை உயருகிறது என்பதை அவனும் தெரிந்து வைத்திருந்தான்்.

அட வாப்பா வேண்டாம்!'"

'இல்லையப்பா! நான் இப்படிக் காலாற நடந்து வர்றேன்-'

நீ ஒண்ணும் காசு தர

கிளம்பும் டாக்சியில் நண்பன் மனைவியிடம் சொன்னது வரதனின் காதுகளில் நன்ருக விழுந்தது. -

'அவன் ஒரு பைத்தியம்... கொள்கை அது இதுன்னு..." அந்தப் பெண் அழகாகச் சிரித்தாள். அவள் உதடுகள் வெற்றிலைச் சிவப்பால் சிவந்திராமல் சாயச் சிவப்பால் சிவந்திருந்தன. தன் மனைவி ஏன் "லிப்ஸ்டிக்' உபயோகிப்பதில்ல்ை என்று வரதன் யோசித் துக்கொண்டே நடந்தான்். அது ஒன்றும் அப்படி விலை உயர்ந்தது அல்ல. தன்னல் வாங்கிக் கொடுக்க முடியாததும் இல்லை.

ஏனே அவள் விரும்பவில்லை. இவனும் வாங்கவில்லே.

இவன் அந்தக் கல்யாண மண்டபத்துத்

தெருவை அடையும்போது நண்பனின் டாக்சி இவனைத் தாண்டிச் சென்றது. டாக்சியில் கிளம்பியவர்கள் ஏன் இவ்வளவு

நேரம் கழித்து வருகிருர்கள் என்பது நண்ப் னின் மனைவியின் தலையைப் பார்த்ததும் புரிந்தது. ரயிலடியில் பார்த்த சிகை அலங் காரமில்லாமல் இப்போது வேறு கொண்டை யாக மாறியிருந்தது. அஜந்தாச் சித்திரம் போல் இருந்தாள். அடிக்கடி சிரித்தாள்.

ஓ! ப்யூட்டி பார்லருக்குப் போய்விட்டு வருகிருந்போல இருக்கு-