பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண வீட்டில் இரட்டை நாயனம்

அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. டாக்சி கார்களில் வந்து இறங்கியவர்களைச் சிரித் தும் கைகுலுக்கியும் வரவேற்ருர்கள். வரத தும் உள்ளே போன்ை. வாசலில் நின்றிருந்த பெண் ஒருத்தி உதட்டைச் சரித்து. புருவங் க: நெரித்துக் கொண்டாள். அவற். இவ &னப் ப்ோல் வருபவர்களைப் பார்க்கும்போது அவ்விதம்தான்் நடந்துகொண்டான். நவநாக ரிகமாக வருகிறவர்களைப் பார்க்கும்போது தோள்களைக் குலுத்தியும். மணிகள் கொட்

டியது போல் சிரித்தும் வரவேற்பதைக் கவனித்தான்். -

அவனுக்கு தெரிந்தவர்களாக அங்கு யாரும் இல்லை, போட்டிருந்த கா ற்காலியில் உட்கார்ந்து கொண்டான். எதிரே மன மேடையில் வர்ண விளக்குகளால் அலங்

கிக்கப்பட்ட மண்டபம் கண்ணேப் பறித்தது, கட்டம் கூட்டமாக ஆண்களும், பெண்களும் வந்து கொண்டிருந்தார்கள்_கா ன் வகுத்துக் கொண்டிருக்கும் சில பல கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவர்களாகவும். பாரதம்

சுதந்திரம் அடைந்த இருபத்தியாறு வரு ஷங்க்ளுக்கு அப்புறம் நாட்டில் வளர்ந்து போயிருக்கும் பேர்லித்தனமான, தன்னம்

பிக்கையற்ற ஒரு கூட்டமாகவும் அவர்கள் இருந்தார்கள். தோற்றத்தில் எப்படி இருந் தாலும், மனிதனை மனிதன் பதிக்க வேண்டும் என்கிற மனிதாபிமானத்திலிருந்து அவர்கள் விலகி வெகு தூரம் நிற்பதுபோல் வரத னுக்குத் தோன்றியது. பல பெண்கள் அடிக் கடி வாய் விட்டுக் காரண மில்லாமல் சிெத் துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உடம் பிலே போட்டிருந்த நகைகளின் மதிப்பும் கட்டியிருந்த ஆடைகளின் தோற்றமும் இந்தியா ஒரு பின்தங்கிய நாடல்ல என்று மாயத் தோற்றுத்தை ஏற்படுத்திக் * * * காண்டிருந்தன. ஆனால் அவர்களின் ான சி.

தின் ஆழத்தில் புரையோ டிக்கொண்டிருந்த நம்பிக்கையற்ற தன்மைகள். போலித்தன மான கவர்ச்சிகள் ஆகியவற்றின் எதிரொலி போல் அவர்களின் சிரிப்பு இருந்தது.

ஒரு வயதான் அம்மாள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தாள். தலை "பொல்' லென்று நீரைத்திருந்தது. பழுக்க மஞ்சள்

ப்ெரிய குங்குமப் பொட்டு, தலே முடியைக் கட்டிக் சுற்றிக் கொண்டிருந்

பூசிய முகம். வாழை நாரால் கொண்டை மாதிரி

தாள். வாழிை நார் வெளியே நீட்டிக்கொண் டிருந்தது. கழுத்தில் இரட்டை வடம் சங்கிலிகள், கைகளில் வளையல்கள். காதுக

ளில் தொளதொளவென்று ஆடும் கம்மல்கள். அந்த அம்மாள் சிரிக்கும்போது வெற்றிலே யால் மட்டும் சிவப்பேருத, கத்தைக் காம்பு மென்ற சிவந்த பற்கள் ப்ளிரென்று இருந்தன.

வரதன் அந்த அம்மாளேப் பார்த்துக் கொண்டே யிருந்தான்். மணவறையில் ஏற்றி வைக்கப்பட்ட குத்து விளக்குகள் பேர்ல் அவள் குளிர்ச்சியாக ஒளி வீசிக் கொண்டிருந்தாள். இத்தனை நாகரிகங்களுக் கிடையே தனியாகவும். ஓர் அரசி போலவும் அவள் திகழ்வதைக் கவனித்தான்் வரதன்.

தொலைவில் பாண்டு வாத்தியத்தின் ஒலியோடு நாதஸ்வரத்தின் சத்தமும் கேட் டது. பெண்கள் எல்லோரும் வேடிக்கை பார்க்க வாசலுக்குப் போய் விட்டார்கள். அந்த அம்மாள் மட்டும் பரக்கப் பரக்க ஆரத்தி கரைத்து எடுத்து வந்து வைத்து விட்டு உள்ளே திரும்பி, 'அடியே. மஞ்சு! மாப்பிள்ளை அழைப்பு வரது. நீ பார்க்க

வேண்டாமோ... வாடி....' என்று கல் யானப் பெண்ணகிய தன் பேத்தியை அழைத்தாள்.