பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புடவைக் குடை பிடித்தேன்!

சுரதா

கரும்பொடு நான் பிறந்தேன் - இளங்

காற்ருெடு நானசைந்தேன் !

அரும்பொடு நான் வளர்ந்தேன் - மலர்

ஆனபின் தேன் திறந்தேன் !

நதிமணல் மீதிருந்தேன் - அவர்

நட்டகல் மீதிருந்தார் !

புதுமழை பெய்கையிலே - நான்

புடவைக் குடைபிடித்தேன் !

என் பெயர் அன்ன மென்றேன் - பசிக்

கில்லேயோ அன்னமென்றார் ? பொன்மணி மண்டபத்தில் - புதுப்

புன்னகை அன்னமிட்டேன் !

காவிரி ஆழமென்றேன் - அவர், காதலே ஆழமென்றார் !

சேவலேன் கூவுதென்றேன் - விழிச் சேனேஏன் தாக்குதென்றார் ?

வன்பால் குறிஞ்சிநிலம் - அது

வாழ்க்கைப் புணர்ச்சிநிலம் !

மென்பால் மருதநிலம் - அதை

வெல்வதுன் மேனிநலம் !

என்றார் குளக்கரையில் - இதழ்

இட்டார் இதழ்க்கரையில் ! வென்றேன் பிணக்கினிலே - என

வென்றார் அணைக்கையிலே !