பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 ' வேப்பம் பழமா?.........ஐயையே......... கசக்காதோ உனக்கு ?” ' கசப்பு உடம்புக்கு நல்லதாம், சார் ! எங்கப்பா அடிக்கடி சொல்லுவா. காயா இருக்கறப்போ இது விஷமாக் கசக்கும். பழுத்திட்டால் தகதகன்னு தங்கம் போல் ஒரு நிறம் வரும். அப்போ சாப்பிட்டாக் கசப்பே தெரியாது. அசட்டுத் தித்திப்பா ஒரு இனிப்பு இருக்கும். மென்னு கடிச்சு முழுங்கிடப்படாது. இலேசாச் சப்பிச் சுவைத்து விட்டுத் துப்பிடணும்.” “ எங்கே இப்படி ஒண்னு கொடு, பார்க்கலாம்...” சிற்சபேசன் பட்டுவுக்கு முன்னுல் வந்து கையை நீட்டினர். வேண்டாம், சார் ! பழக்கமில்லாட்டாக் கசப்பு ஒட்டாது.குடலேக் குமட்டிண்டு வாந்தியெடுக்க வரும்...”

  • கொடேன்...பார்க்கலாம்...”*

பட்டு சொன்னது மெய்யாகி விட்டது. பழத்தை வாயில் போட்டுக் கொண்ட மறுகணமே குமட்டலோடு காறித் துப்பினுர் சிற்சபேசன். நல்ல காப்பி சாப்பிட்ட மனத்தை யெல்லாம் கெடுத்து வாயை நாற அடித்து விட்டதே, இந்தப் பாழும் வேப்பம் பழம் !" என்ருர்.

நான் தான் மொதல்லேயே சொன்னேனே, சார் ! பழகாட்டாக் கசப்பு ஒட்டாது. எனக்கு ரொம்ப நாட்க ளாகவே இந்தப் பழத்தைச் சாப்பிட்டுப் பழக்கம். ஒரே சமயத்திலே பத்து பன்னிரண்டு கூடச் சாப்பிட்டுடுவேன்.",

வேப்பம் பழத்தைச் சாக்லேட்டாக விழுங்கும் அந்த அதிசயச் சிறுமியின் பழக்கத்தை வியந்து கொண்டே வாயைக் கொப்பளிக்க உள்ளே சென்ருர் சிற்சபேசன். வாயைக் கொப்பளித்துக் கழுவிய பின்னும் அந்தக் கசப்பும்’ கமறல் நாற்றமும் போகவில்லை. வெகுநேரம் காறித் துப்பிக் கொண்டே இருந்தார். வாசல் தெளித்துக் கோலம் போட்டு வீடு பெருக்கித் தண்ணிர் எடுத்துக் கொடுத்து விட்டுப் பட்டு போய் விட்டாள். போகும்போது வரேன் மாமி, வரேன் சார்' என்று உற்சாகமாகக் குரல் கொடுத்துச்