பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 1 1 சொல்லிக் கொண்டு போளுள். அந்தக் குரலில் ஒடியாடி வேலை செய்த களைப்பின் சலிப்போ, அலுப்போ இல்லே. யாரோ உறவுக்காரப் பெண் பார்க்க வந்து விட்டுச் சொல்லிக் கொண்டு போகிற மாதிரி ஒரு தன்மையானசுபாவமான இனிமை இருந்தது. சிற்சபேசனிடமும், ரீமதி சிற்சபேசனிடமும் பட்டு நல்ல பேரெடுத்து விட்டாள். இந்தப் பொண்ணைப் பற்றி ஊரில் யாரைக்கேட்டாலும் பெருமையாத்தான் சொல்ரு. சின்ன வயசிலேயே குடும்பக் கஷ்டம் தெரிஞ்ச பொண் ளும். அப்பா, அம்மா ஒருத்தர் இல்லாமே ஒண்டியாத் தானும் பிழைத்துக் கொண்டு நாலு வீட்டிலே காரியஞ் செஞ்சு தம்பியையும் காப்பாத்தற தாம்” என்று முதல் நாளே பட்டுவைப் பற்றி அக்கம் பக்கத்தில் கேள்விப்பட்ட பெருமையைக் கணவனிடம் கூறினுள் ரீமதி சிற்சபேசன். பட்டுவுக்கு ஊர் முழுவதும் நல்ல பேர்தான். யார் எந்தக் காரியம் சொன்னலும் தட்டமாட்டாள், அவள் முகத்தில் கடுகடுப்பையே பார்க்க முடியாது. யாரிடமும் எதற்காகவும் அலுத்துக் கொள்ளமாட்டாள். நாலைந்து நாட்கள் கழித்து ஒரு நாள் சாயங்காலம் வீடு பெருக்க வரும் போது ஒரு சிறு பையனேயும் அழைத்துக் கொண்டு சிற்சபேசன் வீட்டுக்குள் நுழைந்தாள் பட்டு.

  • இவன்தான் சார் என் தம்பி. விசுவநாதன்னு பேரு, செல்லமா விச்சுன்னு கூப்பிடுவேன். இவனே என்னுலே முடிஞ்ச மட்டும் ஒரு ஸ்கூல் பைனல்’ வரையாவது படிக்க வச்சு ஆளாக்கி விட்டுடனும்னு இருக்கேன். அதுக்கா கத்தான் இத்தனை பாடுபடறேன் ' என்று சிற்சபேசனிடம் அந்தச் சிறுவனக் காட்டிச் சொன்னுள் பட்டு. சிற்சபேசன் சிரித்தார். ஏன் சார் சிரிக்கிறீங்க? என்னுல்ே முடியு மான்னு தானே ?”

" இல்லே! ஸ்கூல் பைனல்’னு இன்னும் ஆறேழு வருஷங்களாவது படிக்கனுமே. அது வரை நீ இப்படியே சின்னப் பொண்ணு வீடு வீடா ஏறி இறங்கிக் காரியம் செய்ய முடியுமான்னு நினைச்சேன். சிரிப்பு வந்தது.'