பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.1 காரணத்தின் சரியான உண்மையைப் பிரதிபலிக்காத சம்பிரதாயம் ! எந்த ஓர் ஆத்மா அமைதியுறவில்லையோ, அந்த ஆத்மாவின் கதறலினுல் மற்ருேர் ஆத்மா சாந்தி பெறுமா ? " தம்பீ...!" என் வெம்பாளை விழிகள் மெதுவாகப் பரமசிவம் பிள்ளையை நோக்கி ஊர்ந்தன.

  • உங்களுடைய மகத்தான இழப்புக்கு ஆறுதல் கூற எதுவுமே இல்லை. ஆளுல் நாம் விரும்பியோ, விரும்பா மலோ நம்முடைய கஷ்டங்களே ஏற்றுக்கொண்டுதாளுக வேண்டும். வேறு என்ன சொல்ல இருக்கிறது? துக்கத்துக்கு வந்தவர்கள் விடைபெற்றுப் பிரியக் கூடாது என்று சொல் வார்கள்." ஆல்ை, விடைபெருமல் விடைபெற்றுக்கொண்டு நடந்தார் பரமசிவம் பிள்ளை.

விளக்கின் சன்ன ஒளியில் என் கண்கள் அசையாமல், அசைவின் எல்லா வழிகளும் அடைபட்டுப் போய்க் கலந்தன. சிந்தாமணி உள்ளத்தின் இருள் துடைக்கும் ஒளியாக இல்லை. தீட்டிய வாளேப்போல் என் நெஞ்சை நோக்கிப் பாய்கின்ருள். ஐயோ! இனி என்னுல் அந்த விளக்கைப் பார்க்க முடி யாது. அந்தப் பயங்கர வாளால் குத்துப்பட முடியாது. என் மனமே இரு கால்களாக நான் பறக்கப்படுக்கை அறையை நோக்கி ஓடினேன். வெற்றுக் கட்டிலில் விழுந் தேன். இடியின் குமுறலும், மழையின் பொழிவும் இந்தச் சாரமற்ற உலகத்தின் சூன்ய தரிசனமும் பரமசிவம் பிள்ளை கூறிப் போன பேச்சில் எதிரொலித்தன. நாம் விரும்பியோ விரும்பாமலோ நம்முடைய கஷ்டங்களை ஏற்றுக் கொண்டு தானுக வேண்டும்.' . . ஏன், ஏற்றுக் கொள்ள வேண்டிய உள்ளத்தையே இல்லாமல் செய்துவிட்டால்? ஆசைக்காக சபிக்கப்பட்ட துயரங்களைத் தேடிக்கொள்ளும் அறிவையே ஒழித்து விட்டால்? . 27–12