பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167


ஏயப்பா வாசலிலேதான் எவ்வளவு பெரிய பந்தல் : எத்தனே அழகழகான விளக்குகள் ! யார் இத்தனை அழகான கோலம் போட்டிருப்பது ? சந்தேகமென்ன ? அம்மாவாகத் தான் இருக்க வேண்டும். வேறு யாருக்கு இத்தனை பெரிய கோலம் போடத் தெரியும் ? மீண்டும் உட்புறம் திரும்பிய குழந்தையைப் பார்த்து, * பட்டு ! சீக்கிரம் பல் தேய்த்துக் காப்பி பலகாரமெல்லாம் சாப்பிடு. அப்புறம் தலையை வாரிப் பின்னிப் பட்டுப் பாவாடையெல்லாம் கட்டிவிடுகிறேன்.” என்று அழைத் தாள் அத்தை. அவளுடைய கையைப் பிடித்தபடி குதித்துக் கொண்டு ஒடினுள் பட்டு. அட! சமையலறைப் பக்கத்தில்தான் என்ன கூட்டம் ! எவ்வளவு பேர் கும்பலாக உட்கார்ந்து காப்பி பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிருர்கள். அக்கா வின் கல்யாணத்துக்காகவா இத்தனை மாமா, மாமி யெல்லாம் வந்திருக்கிருர்கள் ! அவளே உட்காரவைத்து ஒரு சின்ன இலையில் சொஜ்ஜியும் இட்டிலியும் பரிமாறிள்ை அத்தை. வாசலில் மேளச் சப்தம் கேட்டது. உள்ளேயிருந்தவர் களெல்லாம் அவசர அவசரமாய் வாசற்பக்கம் போளுர்கள். பாகீரதி அத்தை பட்டுவுக்குத் தலே பின்னிப் பாவாடை சட்டையெல்லாம் போட்டுக் கல்யாணப் பந்தலுக்கு அழைத் துக்கொண்டு கிளம்பினுள். "அத்தை ! சாவித்திரியக்கா எங்கே?" "மாடியறையிலே அலங்காரம் பண்ணிக்கொண்டிருக் கிருள். வா! அதோ மாப்பிள்ளை புறப்பட்டுவிட்டார். ” என்று பட்டுவின் கையைப் பிடித்திழுத்தாள் அத்தை. ஆளுல் பட்டு மாடிப் படியை நோக்கி ஓடிவிட்டாள். வெளியே மேளம் பலமாய்க் GఉLL-అl. ஒரு விடிை நிதானித்த குழந்தை, தனது பட்டுப் பாவாடையை ஒரு கையால் தூக்கிப் பிடித்துக்கொண்டு படிகளில் ஏறினுள்.