பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168


சாவித்திரியின் அறையில் ஒரே கூட்டம். அக்கூட் டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போக முடியுமென்று தோன்றவில்லை பட்டுவுக்கு. அவளே ஒருவரும் கவனிக்கவு மில்லை. ஒரு மூலையில் நின்றபடி எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தாள். அறைக்கு நடுவே ஒரு ஜமுக்காளத்தின்மீது உட்கார்ந்து கொண்டிருந்தாள் சாவித்திரி. அவளுடைய நீண்ட பின்ன லின் தலைப்பில் அழகான பட்டுக் குஞ்சலம் தொங்கியது. மேல் தலையில் பெரிய செண்டாகச் சூட்டப்பட்டிருந்த மல்லிகைப் பூ முதல், அவள் கால்நகத்தில் தீட்டப்பட்டி ருந்த மருதோன்றிச் சிவப்பு வரையிலும் ஆவலுடன் கவனித் தாள் பட்டு. சாவித்திரியின் உடம்பில் பொன்னும் ஜரிகையு மாய் மின்னின. நெற்றியில் அழகான திலகம்; கண்களில் மைக் கீற்று. உதடுகளில் வெற்றிலைச் சிவப்பு. அக்காதான் எவ்வளவு அழகாயிருக்கிருள்! இத்தனை கூச்சலுக்கும் அமர்க்களத்துக்கும் நடுவில் ஆடாமல் அசையாமல் பொம்மைபோல் உட்கார்ந்திருந் தாள் சாவித்திரி. இடையிடையே அவள்தலே நிமிரும்பொழு தெல்லாம் அவளுடைய அழகிய முகத்தில் ஒரு புன்னகை ஒளி வீசியது. பட்டுவின் பிஞ்சு மனத்திற்கு எல்லாமே வியப்பாயிருந்தன. வயதான ஓர் அம்மாள், சாவித்திரியின் கழுத்தில் அட் டிகையைப் பூட்டியபடியே சொன்னுள் :

  • இந்த நாலு நகையைப் பூட்டிக்கொள்ளவே மூக்கால் அழுகிருர்கள் இந்தக்காலத்துக் கல்யாணப்பெண்கள் ! எங்கள் நாளிலேயெல்லாம், ஒரு காறை யென்ன ? காசு மாலேயென்ன ? கிள்ளட்டியென்ன? ஒவ்வொன்றும் குறைந் தது ஒரு சேர் தங்கமிருக்கும். கல்யாணத்துக்கு ஒரு மாதம் முன்னலேயே இதை யெல்லாம் மாட்டிப் பழக்கம் பண்ணி விடுவார்கள். இந்தக்காலம் மாதிரியா?”

இதைக் கேட்டதும் அருகே சுவரில் சாய்ந்து உட்கார்ந் திருந்த ஒர் அம்மாள், ஐம்பது வருஷத்துக்கு முன்னல்