பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


  • அதுக்காகக் காலையிலே சீக்கிரம் முழிச்சிக்கிடுமா ? தெரிஞ்சவ மாதிரிப் பேசறியே!”

" நான் நாலு குழந்தை பெத்தவ. எனக்குச் சொல்லித் தரியா நீ ?” எல்லோருக்கும் வீடு என்றே நினைப்பு. மாணிக்கம் கடைசியில் ஸ்டுடியோவிலிருந்த சில விளையாட்டுச் சாமான் களைக் காட்டி ஒருவிதமாய்க் குழந்தையின் அழுகையை நிறுத்திப் படம் எடுத்து முடித்தான்.

  • அழகா வருமில்லே குழந்தை ?’’ - அழகு அழகு! எப்போதும் அதுதான் லட்சியம். இந்த உலகத்தில் வெளித் தோற்றத்தைத் தவிர வேருென்றுமே இல்லையா ? அந்த வெளி உருவத்துக்கு மட்டுமே அழுத்தம் கொடுக்கும் புகைப் படத் தொழில் இதயமற்றதுதான்.

' வரும் வரும். கவலைப்படாதீங்க !’’ இப்படி எவ்வளவு நாள் ! குடும்பப் படம், வியாபாரத் துக்காகப் படம், கல்யாணத்துக்காகப் படம், குழந்தையின் படம், பெரியவர்களின் படம்......

எங்கே தலை சீவிக்கலாம் ? அழகாய் வருமில்லே?" இதேதான் கேள்விகள்.

" என்னங்க போட்டோகிராபர் ஐயா! நல்லா விழனும் என் மகள் படத்திலே, பார்த்துப் பிடியுங்க.’’ வேருெரு நாளில் ஒரு தாயின் கரிசன்ம் இது. அவள் மகளின் அலங்காரத்திலிருந்தே கல்யாண நோக்கத்தோடு படம் பிடித்துப் பிள்ளை வீட்டாருக்கு அனுப்புகிருர்க ளென்பது தெரிந்தது.

  • இதுவரை நாலு இடம் தட்டிப் போச்சுங்க. பெண் கறுப்புன்னு எல்லாரும் வேனங்கருங்க. எங்க சரஸா முகத்து அழகு யாருக்கு வரும்? அதான் இனிமேல் படத்தையே அனுப்பறிதுன்னு தீர்மானிச்சிட்டேன்.”