பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


சிறிது தூரம் சென்றதும் நின்றர் அர்ச்சகர். தெரு விளக்கின் ஒளி அவர் முகத்தில் விழுந்தது. எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு அவர் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தன. அர்ச்சகர் துண்டால் மூக்கைத் துடைத்துக் கொண்டு சொன்னுர். " நான் ஒரு தப்பும் பண்ணலெ. ஒரு தப்பும் பண்ணலெ.” இதைச் சொல்லும் போது உண்மையாகவே அழுதுவிட்டார் அவர். மனதைக் கல்லாக்கிக் கொண்டு சொன்னன் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு.

  • நான் என்னவேய் செய்ய முடியும் ? நான் என் ட்யூட்டியெ கரெக்டா பார்க்கற மனுசன்.”

" நான் சொல்றது நம்பிக்கையில்லேயா ?” "நம்பிக்கையெப் பொறுத்த விஷயமில்லே வேய் இது. ஸ்டேஷனுக்கு வாரும். இன்ஸ்பெக்டருட்டே விஷயத்தைச் சொல்லும். இன்ஸ்பெக்டரு விட்டா, நானு பிடிச்சுக் கட்டப் போறேன். ’’ "இன்ஸ்பெக்டர் விட்டுடுவாரோ?” " எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும் ?” ′部臺 இன்ஸ்பெக்டர் வேருெண்ணும் செய்யமாட்டாரே. ” 蛾螺 என்னுது ?” "இல்லே, வந்து, அடி கிடி இந்த மாதிரி...' அதைச் சொல்லுவதற்கே வெட்கமாகயிருந்தது அவருக்கு. இத்தனை பெரிய சரீரத்தில், அதை விடவும் பெரிய கோழைத்தனம் குடி புகுந்திருப்பதை எண்ணி மனதுள் சிரித்துக் கொண்டான் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு. அடிகிடி யெல்லாம் கேஸைப் பொறுத்து; அடிக்கப் படாதுன்னு சட்டமா ? சந்தேகம் வந்திடுச்சின்ன எலும்பெ. உருவி எடுத்துடுவாங்க. அதிலேயும் இப்பம் வந்திருக்கிற இன்ஸ்பெக்டரு எமகாதகன். நச்சுப்புடுவான் நச்சு.