பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் டைத்து என்ற பழமொழியும் உள்ளமை உங்களுக்குத் தெரியுமே! காவிரி வளத்தால் நாட்டில் பொன் கொழிக்கிறது-அதல்ை அதன் அருமை உணர்ந்த தமிழ் மக்கள அதையே 'பொன் னி என்று அழைத்தார்கள். மாண: ஆகா! மிக நன்ருக உள்ளதே. ஆமாம்! அக்காவிரியின் கரையில் நாகரிகம் வளர்ந்தது. என்றீர்களே, அது பற்றிச் சொல்லலாமா? ஆசி. சொல்கிறேன். காவிரியைப் பற்றிப் பெரிய இலக்கியங்களே உள்ளன. அதன் கரையில்தான் சோழர் தலைநகராகிய பூம்புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் இருந்தது. இன்றும் அப் பெயரோடு ஊர் இருக்கிறது. இன்றைய தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் அப்பழம் பெரும் நகரத்தின் அழிந்த சின்னங்களை எல்லாம் சேர்த்து வைத்துள்ளனரே. மாண: ஆம்! ஆம்! நாங்கள் கூடச் சென்ற மாதம் அப்பொருள்களின் கண்காட்சியைக் கண்டோம். ஆமாம்! அந்த ககர அமைப்பைப் பற்றிச் சற்றே: விளக்கமாகச் சொல்வீர்களா? o ஆசி: நல்ல பிள்ளைகள்! உங்கள் ஆர்வத்தைப் போற்றுகிறேன். பட்டினப்பாலே என்ற ஒரு நூல் அந்நகரத்துக்காகவே எழுதப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கு முன் அங் நகரம் இருந்ததை அது அழகாகக் காட்டுகிறது. சிலப்பதிகாரமும் அதன் புகழ் பாடுகிறது. அங் நகரத்தை ஆண்ட மன்னருள் சிறந்தவன் சோழன் கரிகாற் பெரு. வளத்தான். அவனைப் பற்றிப் பாடும் பட்டினப் பாலையும், மற்ருெரு நூலாகிய பொருநராற்றுப் 8.