பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரியும் வையையும். மாண: அப்படியா ஐயா! மகிழ்ச்சியே! ஆமாம், இளங்கோவடிகள் காவிரியைப் பாடினதாகச் சொன்னிர்களே. வேறு ஆறுகளையும் பாடுகிருரா? ஆசி. நல்ல கேள்வி இளங்கோவடிகள் சோழ, பாண்டிய சேர நாட்டை இணைத்துத் தனிக் காப்பியம் செய்தார். எனவே மூன்று நாட்டிலும் முக்கியமாக ஓடும் காவிரி, வையை, பெரியாறு மூன்றையும் அவர் புகழாமல் விடுவாரா? மாண: அப்படியா? அவை பற்றியும் சொல்லுங்கள். ஆசி. ஆம் வையை பற்றிப் பாடியதைப் பிறகு காணலாம். ~ மாண: சரி காவிரிக்கரையின் சிறந்த நாகரிகம் பற்றிச் சிறிது சொல்ல முடியுமா? ஆசி: அதைச் சொல் ல த் தானே வந்தேன். இளங்கோவடிகள் மட்டுமல்லாது எத்தனை எத்தனை புலவர்களோ இக்காவிரியின் சிறப்பைப் பாடியுள்ளார்கள். தமிழ் இலக்கியம் தொடங்கிய நாள் தொட்டு இன்று வரை வாழ்ந்த புலவர் களில் காவிரியைப் பாடாதவர் இருக்க மாட்டார். காவிரிக்குப் பொன்னி என்னும் பெயர் உண்டே, அது தெரியுமா உங்களுக்கு? மாண: அப்படியா? ஆம்! முன்னரே சில ஆசிரியர்கள் சொல்லி இருக்கிருர்கள். ஆனல் அவ்வாறு பெயர் வரக் காரணம் தெரியவில்லையே! ஆசி; அதுவா? சொல்லுகிறேன். நாட்டுக்குத் தேவையான உணவையும் அதற்குத் துணையான பிற பொருள்களையும் காவிரி தன் வளத்தால் தருகின்ற தல்லவா? அதல்ை சோழ நாடு சோறு 7 -