பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரியும்.வையையும் படையும் காவிரியின் சிறப்பையும் அதன் கரை யில் நாகரிகத்தோடு இருந்த நகர கலத்தையும் சோழ நாட்டுப் பிற சிறப்புக்களையும் பாடு கின்றன. மாண: அப்படியா? நாங்களும் சில அறியலாமா. ஆசி: ஆகா கன்ருக! காவிரியின் சிறப்பையும் சோழ் காட்டையும் “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாக காவிரி புரக்கும் நாடு ' என்கின்றது பொருகராற்றுப்படை. ஆம்! இன்றைக்கும் காவிரியும் சோழ நாடும் இல்லா விட்டால் தமிழ் நாட்டில் உணவு தட்டுப்படுமே. மாண: உண்மை உண்மை! அதல்ைதான் நம் அரசாங்கம்கூடக் காவிரியில் வற்ருது நீர் பெற வழி காணுகின்றது எனப் பத்திரிகையில் படித் தோம். - ஆசி: "ஆமாம்! நிற்க, அந்தக் கரையில் வளர்ந்த நாகரிகத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா? மாண: சொல்லுங்கள்! சொல்லுங்கள்! ஆசி: அந்த நகரின் அமைப்பே சிறந்தது. அது போன்ற நாகரிக அடிப்படையில் அமைந்த நகரமே தற்போதும் இல்லை எனலாம். மாண: அப்படியா? ஆசி: அந்த ஊரின் அமைப்பே சிறந்தது. கடற் கரையை ஒட்டியும் உள்ளே தள்ளியும் இரு -9