பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் பகுதிகள் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இருந்தன. ஒன்றில் பிற நாட்டு மக்கள் கூடி இருந்தார்கள். கடற்கரையில் துறைமுகமும அதில் பண்டங்கள் ஏற்றி இறக்கிய வகையும் சிறந்தன. அரசாங்க ஆணை இன்றி எந்தப் பொரு ளும் ஏற்றுமதியோ இறக்குமதியோ செய்யப் பெறுவதில்லை. அரசாங்க ஒப்புதலுக்கு அடை யாளமாகச் சோழர் இலச்சினையாகிய புலி முத்திரை அப்பண்டங்களின் மேல் பொறித்தி ருக்கும். வெளி நாட்டு, உள் நாட்டுக் கப்பல்கள் ஏராளமாகத் தங்கியிருந்தன. அவை தங்கிய துறைமுகங்களில் அவற்றைப் பிணிக்கப் பயன் படுத்திய கட்டடமும் பிறவும் தற்போது கண் டெடுக்கப்பட்டுள்ளன. வரும் கப்பல்களுக்கு வழி காட்டக் கலங்கரை விளக்கமும் (Light House) இருந்தது. கலத்தைக் கரைக்கு வருக என அழைக்கும் விளக்கம் என்பது அதன் பொருள். பொதுவாக மேலே நாட்டு வாணிகர் களைத் தமிழர் யவனர் என அழைத்தனர். அவர்கள் தங்குவதற்கும் தனி இடங்கள் இருங் தன. இவற்றைப் பட்டினப் பாலே, புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிபண்டம் " எனவும், " நீரின்று நிலத்தேறவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் " எனவும் பாடுகின்றது. 1 so