பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரியும் வையையும் மாண: ஆகா! இத்தண்ச் சிறப்புடன் வாணிபம் கடந்ததா? அவ்வூரைப் பற்றி வேறு என்னென்ன சிறப்புக்கள் உள்ளன? ஆசி: உள் நகரில் அரசரிருக்கை முதலியவற்றை எல்லாம் வரையறுக்கின்றனர். சிலப்பதிகாரமும் பட்டினப்பாலேயும் மணிமேகலையும் அவை பற்றி விளக்குகின்றன. அந்தப் பெருநகரில் ஐவகை மன்றங்கள் இருந்தனவாம். ஆம்! அறம் தவறிப் பழி துாற்றுபவர் வாழ முடியாதபடி தடுக்கும் தெய்வ நிலைக்களன்களாக அவை விளங்கின. புலவர்கள் ஆயும் பட்டி மண்டபம் இருந்தது. சன்னல்கள் மாளிகைகளில் அழகழகாக மான் கண் போலவும் பிறவகையிலும் அழகுறச் செய்யப்பெற்றிருந்தன. பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் ஆடைகள் நெய்யப் பெற்றன. பல வகையான கவர்த்தினக் கடைகளும் சிறந்தி ருந்தன. பல நாட்டு மக்களும் பல மொழி பேசு வோரும் அங்கே வாழ்ந்த சிறப்பை, " மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் ' எனப் பட்டினப் பாலை காட்டுகின்றது. ஆம்! இன்றைய பம்பாய், தில்லி, சென்னை போன்று உலக மக்கள் பலரும் தத்தம் மொழியினைப் பேசிக் கொண்டு வாணிப, அரசியல் தொடர்பு களைக் கொண்டு விளங்கிய பெருநகராக (International City) oarsālā'u.g. gubljārī. மாண: கன்முக உள்ளதே! ஆம்! இவ்வளவு சிறந்த நாகரிகம் வாய்ந்த அந்த நகரத்தில் வாழ்ந்த 11