பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் மக்கள் வாழ்க்கையைப் பற்றி ஏதேனும் கூறலாமா? ஆசி: கன்ருக! மக்கள் நல்வாழ்வு அடிப்படையில் தானே நாகரிகம் தங்கியுள்ளது. அதைச் சொல் லாமலா! அங்குள்ள மக்கள் செல்வராக மட்டு மன்றிச் சிறந்த பண்பாட்டாளராக-ஒழுக்க சீலர்களாக விளங்கினர்கள். அவர்கள் அனைவரை யும் ஒத்து கோக்கினர். அந்த வாணிப வளனேக் கூற வந்த போது, நடுவுகின்ற நல்நெஞ்சினேர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும்பிறவும் ஒப்பநாடி கொள்வதுஉம் மிகைகொளாது கொடுப்பது உம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்துவீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை ' என்கிறது பட்டினப் பாலே. மாண: ஆகா! இவ்வாறு இன்று நாட்டில் வாணிபம் நடந்தால் பல சிக்கல்கள் தீர்ந்து விடுமே. ஆசி: இன்னும் கேளுங்கள். அந்த ஊரில் ஏதேனும் திருவிழாக்கள் கடந்து கொண்டே இருக்குமாம். " முழவு அதிர் முரசியம்பும் விழவ்ரு வியன் ஆவணத்து ' என்று அதன் பெருமை நன்கு கூறப்படுகின்றது. அந்த ஆற்றுத் துறையெல்லாம் விழாக்கள் நடை பெறுவதைக் கண்டு, அதைத் துறக்கத்துக்கு ஒப்பிடுவர். 12