பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரியும்.வையையும் " பெறற்கரும் தொல்சீர் துறக்கம் ஏய்க்கும் பொய்யா மரபில் பூமலி பெருந்துறை ' என்று பொய்யா மரபைச் சுட்டுகின்றனர். இது மிகவும் உண்மை. இப்பொய்யா மரபு இன்றும் காக்கப் பெறுகின்றது. அன்றைய பழம்பெருங் தலைநகர் மட்டுமன்றி, அன்றைய உள் நாட்டுத் தலே நகராகிய உறையூர், பிற்காலத் தலைநகராகிய தஞ்சை ஆகிய அனைத்தும் அந்த ஆற்றங்கரையி லேயே இருந்தன. இன்றும் சிறக்க உள்ளன. மேலும் தமிழ் நாடே கெய்வ நாடு என்று போற்றக் கூடிய வகையில் இந்தப் பொன்னியின் கரையில் எத்தனை எத்தனையோ சைவ வைணவக் கோவில்கள் உள்ளனவே. கல்லே காண முடியாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பெருங்கோவில்களைக் கட்டி, அங்கங்கே தெய்வ உணர்வையும் அன்பு வழிபாட்டையும் வளர்த்த தோடு கலைகளையும் பிற சிறப்புக்களையும் வளர்த் துள்ளமையை வரலாறு காட்டுகிறதே. அங்த ஆற்றங்கரையில் உள்ள ஊர்களின் பெயர்களே அதன் ஏற்றத்தை விளக்குமே! குடமுக்குப் போல வளைந்து செல்லுமிடத்தைக் குடமுக்கு என்றே அழைத்தனர். பின்னர் அது கும்பகோணமா பயிற்று. காவிரி நீர் வலமாகச் சுழித்துச் செல்வ தால், அந்த ஊர் 'திருவலஞ்சுழி எனவே ஆயிற்று. மணல் திடலாக-துருத்தியாக அமைங் ததால் பூந்துருத்தி எனவும், வாழைகள் மிக்க தால் பைஞ்ஞீலி எனவும், ஊர்கள் அழைக்கப் பெற்றன. காவிரிக் கரையில் அழகிய மயில்கள் இருந்த துறையை மயிலாடு துறை எனவே அழைத்தனர்; பின்னர் அதுவே மாயூரமாயிற்று. திருமிக்க ஊர் 'திருவாரூர் ஆயிற்று. காவிரியின் 13