பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறுவர்களுக்கு-வானெலியில் நீரால் வளம் பெற்ற நிலம் கன்னிலம் ஆயிற்று. இப்படி அன்றும் இன்றும் பொன்னிக் கரையில் வளர்ந்த நாகரிகம், அந்த வற்ருத வளம் கொழிக் கும காவிரியின் சிறப்பையும் செல்வக் கொழிப் பையும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கி றது. என்றும் அவ்வாறு இருக்கும் என்பதில் ஐயமில்லை. . மாண:- இவ்வளவு பெருமையா? கம்பவே முடிய வில்லையே! (மெல்லிய இசை வானெலியில் வையை நதியைப் பற்றிக் கேட்கிறது.) " இறுவரை புரையுமாறு இருகரை ஏமத்து வரைபுரை உருவின் நுரைபல சுமந்து பூவேய்ந்து பொழில் பரந்து துனைந்து ஆடுவார் ஆய்கோ தையர் அலர் தண்தார் அவர் காதில் தளிர் செlஇக் கண்ணி பறித்து கைவளை ஆழி தொய்யகம் புனதுகில் மேகலை காஞ்சி வாகு வலயம் எல்லாம் கவரும் இயல்பிற்ருல், தென்னவன் உடைபுலம் புக்கற்ருல்-மாறட்ட தானையான் வையை வனப்பு ' ஐயா! இப்பாடல் இனிமையா யிருக்கிறதே. வையையைப் பற்றியது போலும். ஆசி: ஆம்! ஆம்! நன்கு கூறினர்கள். பரிபாடலில் உள்ள அடிகளே இவை. காவிரியை ஒத்து வையையும் சிறந்த நாகரிகத்தைத் தோற்றி வளர்த்து வாழ வைக்கிறது என்பதையும் அறிந்து கொள்வோமா? 14