பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் பாடல்களையே வையை ஏற்று எதிர்த்துச் செல்ல விட்டது. எனவே இவை வாழ்கின்றன. வையையும் தமிழ் வையை எனப் பெயர் பெற்றது. மாண: கன்ருக உள்ளதே! இப்படித் தமிழ் கலம் அறிந்த தண்புனல் யாண்டும் இல்லையே. ஆசி: இன்னும் கேளுங்கள். சைவம் வளர்த்த சம்பந்தரை நீங்கள் அறிவீர்க ளல்லவா?

மாண: அறிவோம்! அறிவோம்! ஞானப்பால் உண்ட

வரல்லவா அவர்? - ஆசி: கன்கு படித்திருக்கிறீர்கள் அவர் பாடலை வையை தாங்கிச் சென்றது. சமணருக்கும் அவருக்கும் நேர்ந்த வாதத்தில் வையை ஆறே நீ தி ப தி யாக விளங்கிற்று. யார் பாடல் எதிரேற்றுச் செல்கிறதோ அவர் சமயமே சிறந்தது என்பது வாதம். சமணர் பாடல் அடித்துச் செல்லப்படச் சம்பந்தர் பாடல் எதிர்த்துச் சென்றது. மாண அப்படியா? அதிசயம்! ஆசி: உண்மை. அங் த ஏடு கரை சேர்ந்த இடமே 'ஏடகம் என்று பெயர் பெற்றது. இந்த இடம் இன்றும் மதுரைக்கு வட மேற்கே 'திருவேடகம்: என்ற பெயரோடு உள்ளது என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். மாண: அறிந்தோம்! அறிந்தோம்! தமிழ் வையை யின் பெருமையை அறிந்தோம். அதன் கரையில் வளர்ந்த நாகரிகப் பண்பாட்டையும் சொல் வீர்களா? 16